டெட் பாடிய கையோட தூக்கி வாருங்க
(காட்டு) பன்றிய கண்டா சுடச்சொல்லுங்க!
காட்டுப்பன்றிகளை கண்டதும் சுட கேரள அரசு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை செய்தியாகி இருந்தது. 2022 இல் விவசாயிகள் 'முன் அனுமதி' பெற்றபின்பு சுடலாம் என அரசு வறையறுத்தது. ஆனால் இன்று வரை பன்றிகளின் சிக்கல் வளர்ந்து கொண்டே வருகின்றது.
பன்றிகளுக்கு ஒற்றர்கள் யாரோ தகவல் சொல்லியிருப்பார்களோ என சந்தேகிக்கும் அளவுக்கு அவையும் இடம் பெயர்ந்து தமிழக கானக எல்லைப்பகுதிகளில் மெல்ல பெருகி வருவதாக சற்று முன் கிடைத்த தகவல்!
இயற்கையில் காட்டுப்பன்றிகள், நரிகள் இருந்த வரை பெருகாமல் கட்டுக்குள் இருந்தன. நரிகளை பற்களுக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் வேட்டையாடி அழித்தபின்பு காட்டுப்பன்றிகளோடு போராடுகிறோம், காடுகளை அழித்தபின் அங்கு காணாமல் போன தம் உணவை தேடி ஊருக்குள் வரும் யானைகளோடு போராடுவது போல.
ஆஸ்திரேலியாவில் முயல் தொந்தரவை ஒழிக்க 'உயிருடனோ பிணமாகவோ பிடித்து
வந்தால் சன்மானம்' என்பது போன்ற பல முயற்சிகளை இருநூறு+ ஆண்டுகளாக முயற்சித்த பின்பும் முயல்கள் எண்ணிக்கையோ குறைவதாக இல்லை :-) நாட்டின் குறுக்கே கோழிவலை வேலி போட்டுப்பார்த்தும் பலனில்லை! அவர்களும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்களாம்!
போராட்ட குணம் நம் மரபணுவிலேயே இருக்கிறது!
ஆன்மீகமா போராட்டமா என்ற கேள்வி வந்தால் எது வெல்லுமென்று யார் சொல்லுவார்?!
வராக ரூபம்...!
(Top Image credit: The Hindu news article about Kerala Municipal team killing 42 wild boars in Shoranur Kerala, October 11, 2022
Bottom image: You know all about it anyway!)
TN GOVT has formed a committee. Visited Kerala. Met at Xhennai. As usual farmers are waiting for announcements.
பதிலளிநீக்குLet us see what they come up with...
நீக்கு