கடன்பட்டார் நெஞ்சம் போல... என் பெற்றோரின் சிற்றூரில் வயல்வெளிகளிலும் தோப்புகளிலும்தான் காலைக்கடன், மதியக்கடன், மாலைக்கடன், இரவுக்கடன் எல்லாமே. கடன் முடித்ததும் மண்ணைக்கொண்டு மூடிவிடுவது அனிச்சைச்செயல் போல அவர்கள் செய்யும் கடமை, ரத்தத்தில் ஊறிப்போனது. அப்படி செய்வதால் நாளடைவில் வாடையின்றி மட்கிப்போகி அங்கேயே உரமாகும் பின்னொரு நாளின் வெள்ளாமைக்கு. வரும் வழியில் நீர் நிலை ஒன்றில் சுத்தம் செய்து வீடு திரும்புவர். நான் பள்ளி கோடை விடுமுறையில் இது பழகியிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த பால்ய கால ஊரில் கழிவறை என் வீட்டுக்கு பின்புறம் சில நூறு அடிகள் தள்ளி இருந்தது. பாம்பே லெட்ரின் என அழைக்கப்படும் அந்த அறையில் ஒரு சிமென்ட் மேடை, அதன் நடுவில் அரை அடி அளவில் ஒரு துளை (என நினைவு). சிமென்ட் மேடையின் மேல்புறம் தடுப்பு சுவரும் உச்சியில் கூரையும் இருக்கும். ஆனால் மேடையின் கீழ் பின்புற சுவர் இல்லை. கழிவறையின் பின்னால் ஒரு வாய்க்கால், அதன் வழியே பன்றிகள் வந்து... உண்டு செல்லும். கழித்தபின் கொல்லைப்புறத்திலிருந்து வீட்டுக்குள் வரும் பாதையில் ஒரு அடி பம்ப் இருக்கும். அதை வலு கூட்டி இயக்கி, தேவைக்கு...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!