Food.
இந்தந்த பருவத்துக்கு இதை இதை விதைக்கணும் என்பது விவசாயியின் கைகளிலில்லை.
இந்தந்த பருவத்துக்கு இதை இதை சாப்பிடணும் என்பது நுகர்வோர் சிந்தனையிலும் இல்லை.
இவர்களிருவருக்கும் எதை எப்போது எங்கு எப்படி செய்யவேண்டுமென மூளைச்சலவை செய்தது பெருவணிகம். அது போடும் லாபக்கணக்கில் சிக்கித்தள்ளாடுது நம் அனைவரின் வாழ்வும் நலமும்.
காந்தி கனவு கண்ட சுதந்திர (கி)ராம ராஜ்யம் பற்றி அறிந்திருப்பபோம்... 'என்று நள்ளிரவில் நிறைய நகைகள் அணிந்த இளம்பெண் பயமின்றி நம் சாலைகளில் துணையின்றி நடமாட முடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் பெறுவோம்' என்றார்.
இன்று அவர் இருந்திருந்தால் அவரது கனவு வேறு மாதிரி இருந்திருக்கும்... 'என்று நம் விவசாயிகள் தங்களது உணவுத்தேவைகளை தம் நிலங்களில் தாங்களே விளைவித்துக்கொண்டு, தமக்கு எஞ்சியதை என்ன விலைக்கு (அருகில் உள்ள) மற்றவர்க்கு விதைகளாகவோ விளைபொருட்களாகவோ கொடுக்கலாம் என முடிவெடுக்கும் உரிமையுடன் வாழ்கிறார்களோ அன்றே நம் நாடு தன்னிறைவான நாடாக மாறும்.'
அப்போ சுதந்திரம்?
விளையாடாதீங்க பாஸ். அதுக்கெல்லாம் இன்று போராட காந்திக்குக்கூட நேரமிருக்காது :-)
உணவில் கூட நம்மால் தன்னிறைவு அடைய முடியவில்லை என்றால் அது வரையில் பெரு வணிக அடிமையாகத்தானே வாழ முடியும்?! அப்புறம் என்ன சுதந்திரம்?
நல்ல வேளை இன்று காந்தி நம்மிடையே இல்லை. இருந்திருந்தால் அயல்நாட்டு பல்பொடியிலிருந்து உறக்க மருந்துகள் வரை நித்தநித்தம் எத்தனை "Quit India" போராட்டங்களை தன் தள்ளாத வயதிலும் நமக்காக செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்?!
அவரை நிம்மதியாக உறங்க விட்டுவிடுவோம். நம் பயணம் நீண்டது...
பெரு வணிகமும், அவை ஊக்குவிக்கும் அரசு செயல்பாடுகளும் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டவை. தன்னிறைவுப்பொருளாதாரமோ இதற்கு நேர்மாறானது. மையங்கள் எதுவுமற்றது, சிற்றூர்களை சார்ந்து இயங்குவது.
இவை இரண்டுக்குமிடையில் உலகெங்கும் நிகழும் தள்ளுமுள்ளுதான் பண்பாட்டுப்போராட்டங்களின் வெவ்வேறு வெளிப்பாடுகள். தள்ளுபவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் விழுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு.
ஏனென்று சிந்திக்கத்தான் யாருக்கும் நேரமில்லை...
"உணவை விட உலகில் நமக்கு அவசியமானது எதுவுமே இல்லை, மேன்மையானதும் வேறெதுவுமில்லை" என நாம் உணரும் நாள் தொலைவில் இல்லை.
அது வரையில் மூளைச்"சலவை" கலையாத மிடுக்குடன் வலம் வருவோம், நுகர்ந்துகொண்டே!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக