பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: "ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட். வேறெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம். பார்த்தால் புரிந்துகொள்வோம்!" முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு. அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்? சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!