நல்லதொரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் நேரமிது.
காகிதத்தில் ஒற்றை எழுத்து விதையாக முளைத்து கவிதையாய் வளர்ந்து முற்றுப்புள்ளி தேடும் நேரம் ஒரு அபூர்வ தருணம்.
எழுதியவரின் உணர்வுகளை தாங்கி, வாசிப்பவரிடம் சேதமின்றி சேர்க்க காத்திருக்குது கனமாய் காகிதம்.
காகிதம் செய்ய இழைகள் வேண்டி மரித்த மரங்களின் ஆன்மாக்கள்அனைத்தும் வாசித்து முடித்த பின்புதான் இந்தக்கவிதை... வாசிப்பவருக்கு தரப்படும்.
கவிதையெங்கும் விரைந்தோடும் எழுத்துக்களை கயறுபோல் இறுகப்பிணைத்துக்கொண்டிருக்கிறது (கவிதை) வரிகள்.
வகுப்பு வரிசை பிள்ளைகள் போல வரி வரியாய் காத்திருக்கும் கவிதையின் சொற்களை வரிசை மாற்ற யாருக்கும் இந்தக்கவிதை அனுமதி தருவதில்லை, அவர் எழுதியவரே ஆனாலும்.
நல்ல கவிதை கால் முளைத்தோ இறகு முளைத்தோ பல்லக்கில் ஏறியோ வாசிப்பவரின் மனவெளியெங்கும் உலா வருகையில் தூப தீப ஆராதனைகள் அதை ஒருபோதும் சலனப்படுத்துவதில்லை.
ஓசைகளும் கற்பூர வாசமும் காற்றில் கரைந்துபோய் மௌனம் கதகதப்பாய் இந்தக்கவிதையை போர்த்திக்கொண்ட பின்பும் (இந்தக்கவிதை) உறங்குவதில்லை.
வாசிப்பவரின் ஆழ்ந்த உறக்கத்திலும் மௌனமாய் விழித்துக்கொண்டு அவரை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக்கவிதையை எப்படி முடிப்பபாபுஜி
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக