முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பார் பர்ஸ்டர் பர்னாஸ் இணைந்து கலக்கப்போகும்...

ஏன் மரபீனிக்கடுகு வேண்டாம் என்கிறோம்? மரபீனிக் கடுகு = இயற்கை கடுகுக்கு அறுவைச்சிகிச்சை செய்து, மூன்று மரபணுக்களை உள்ளே வைத்து தைத்து உண்டாக்கப்பட்டது. இந்த மூன்று மரபணுக்கள்,  மண்ணில் இருக்கும் பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ் என்ற பாக்டீரியாவை அறுவைச்சிகிச்சை செய்து அதிலிருந்து பிடுங்கப்பட்டவை.  ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ என்பதே அவற்றின் பெயர்கள். பர்னாஸ் ஜீன் - ஆண் பூக்களுக்கு வளர்ச்சி ஊக்கி. பர்ஸ்டர் ஜீன், ஆண் பூக்கள் மலடாவதை தடுக்கும். பெண்பூக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பார் ஜீன், குளுஃபோசினேட் என்ற களைக் கொல்லியை பயிர்கள் மீது தெளிக்கும்போது கடுகுப்பயிரை மட்டும் காக்கும். DMH-11 = இயற்கை கடுகு + பார் ஜீன் + பர்னாஸ் ஜீன் + பர்ஸ்டர் ஜீன். கோவணம் கூட தேவையற்ற கடுகுக்கு இத்தனை ஜீன்ஸ் தேவையா?! நியாயமா?! இனி DMH-11 வளருமிடமெல்லாம் குளுஃபோசினேட் தெளிப்பும் வளருமே! பல்லுயிரை சிதைக்குமே! தேவையா? நியாயமா?! உயிர்ப்பண்மயம் என்பது அவசரமாக அவசியமாக பாதுகாக்கப்படவேண்டிய நேரத்தில் குளுஃபோசினேட் உயிர்க்கொல்லியை தெளித்து நமக்கு வேண்டாத அனைத்தையும் அழித்து (களை எனப்படும் ஏனை

மின்மினிப்பூச்சியொன்றின் இரவுக்கவிதை

ஒற்றைப்பார்வையில் உன்னுள்  நான் தொலைந்த நொடியில் நீயும் என்னுள்ளே தொலைந்தாய். நானும் நீயும் நாமாகி பல்கிப்பெருகி பூமி முழுதும் நம் குழந்தைகளை இட்டு நிரப்பி... ஒற்றை வான் கூரையின் கீழ் ஒற்றைக்கதிரவன் ஒற்றை நிலவின் வெளிச்ச வழிகாட்டுதலில் சுழலும் ஒற்றை பூமியில்தான் நாமிருக்கிறோம், நமது குழந்தைகளும்தான். ஆனாலும்... உனக்கென ஒரு பூமி எனக்கென ஒரு பூமி உனக்கென ஒரு வானம் எனக்கென ஒரு வானம் உனக்கென ஒரு கதிரவன் எனக்கென ஒரு கதிரவன் உனக்கென ஒரு நிலவு எனக்கென ஒரு நிலவு இன்று நம் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு ஆயிரமாயிரம் பூமி, வானம், கதிரவன், நிலவு... ஒன்று பலவாகி பலதும் ஒன்றாகி பின்பு பலவாகி... ஒற்றைக்கதிரவனும் ஒற்றை நிலவும் வானமும் பூமியும்கூட ஒற்றைக்கருந்துளை கக்கிய எச்சம்தானாம். அந்த ஒற்றைக்கருந்துளையை கக்கியதெதுவோ அதுவே இறையோ? அறிவியலின் எல்லைக்கு வெகு தொலைவில் எங்கோ இருந்தபடி இருந்து பார்த்துக்கொண்டிருக்கிற அந்த இறையை நாம் கற்பிதம் கூட செய்யமுடியாத அண்ட பேரண்டக்கோவிலில் அமர்த்தி வைத்தது யாரோ?! இதற்கு விடை எனது புலனுக்கு எட்டாதிருக்கலாம். ஆனால் இதனை காரணம் காட்டி நான் எனது வெளிச்சத்தை நிறுத்தப்போவதி

நல்லதொரு கவிதை

நல்லதொரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் நேரமிது. காகிதத்தில் ஒற்றை எழுத்து விதையாக முளைத்து கவிதையாய் வளர்ந்து முற்றுப்புள்ளி தேடும் நேரம் ஒரு அபூர்வ தருணம். எழுதியவரின் உணர்வுகளை தாங்கி, வாசிப்பவரிடம் சேதமின்றி சேர்க்க காத்திருக்குது கனமாய் காகிதம். காகிதம் செய்ய இழைகள் வேண்டி மரித்த மரங்களின் ஆன்மாக்கள்அனைத்தும் வாசித்து முடித்த பின்புதான் இந்தக்கவிதை... வாசிப்பவருக்கு தரப்படும். கவிதையெங்கும் விரைந்தோடும் எழுத்துக்களை கயறுபோல் இறுகப்பிணைத்துக்கொண்டிருக்கிறது (கவிதை) வரிகள். வகுப்பு வரிசை பிள்ளைகள் போல வரி வரியாய் காத்திருக்கும் கவிதையின் சொற்களை வரிசை மாற்ற யாருக்கும் இந்தக்கவிதை அனுமதி தருவதில்லை, அவர் எழுதியவரே ஆனாலும். நல்ல கவிதை கால் முளைத்தோ இறகு முளைத்தோ பல்லக்கில் ஏறியோ  வாசிப்பவரின் மனவெளியெங்கும் உலா வருகையில் தூப தீப ஆராதனைகள் அதை ஒருபோதும் சலனப்படுத்துவதில்லை. ஓசைகளும் கற்பூர வாசமும் காற்றில் கரைந்துபோய் மௌனம் கதகதப்பாய் இந்தக்கவிதையை போர்த்திக்கொண்ட பின்பும் (இந்தக்கவிதை) உறங்குவதில்லை. வாசிப்பவரின் ஆழ்ந்த உறக்கத்திலும் மௌனமாய் விழித்துக்கொண்டு அவரை வாசித்துக்கொண்டிரு

நீ சிரித்தால்

நிற்கும் இடமெல்லாம்  ம ழை மறித்து குடைபிடிக்கும் மரம்   மழை நின்றபின்  தன் வேரடிக்கு  மட்டும்  மழை பொழிந்துகொள்ளும் அதிசயம் நிகழும் ஒவ்வொரு மழையிலும். எந்த வேருக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை மரம் அறியும்;  சல்லி வேர்கள் மண்ணடி ஈரத்தில் மூழ்கி குளிர,  ஆணி வேருக்கு  மிடறு மிடறாய் போதுமென்பதை மரம் அறியும். மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி, மழை நின்றபின்பு உள்வடியும் மழைநீரில் சிரம் நனைந்து உடல் நனைந்து உயிர் நனையும் அதிசய உணர்வனுபவம், மரம் மட்டுமே தரக்கூடிய வாழ்வனுபவம். அதிலும் அகலக்குடை பிடிக்கும் மரத்திற்கு அளவாய் மட்டுமே வேரடி நீர் என்றும் இடைவெளி நிறைந்த ஓட்டைக்குடை பிடிக்கும் மரத்திற்கு கூடுதலாய் நீரென்றும் எதுவோ என்றோ வகுத்த விதி, மாறாமல் சுமந்து நிற்குது மரம் இன்றும்! மரத்தி்ற்குள் சூட்சுமம் பொதித்தது எதுவோ அதுவே மண் உண்ணும் நீரின் அளவையும் மண்ணுள்ளே பொதி்த்து வைத்திருக்குது ரகசியமாய். உயிருள்ள அனைத்தையுமே ஜடப்பொருளாய் கற்பிதம் செய்வதையே நம் வாழ்வியல் தூக்கிப்பிடிக்க, நமக்குள்ளேயும் பொதிந்திருக்கும் ஏராளமான சூட்சுமங்கள் உணரப்படாமலே நமக்குள்ளே நித்தமொன்றாய் மரித்துப்போக, புதை நிலங்களாய் ச

நன்றி சொல்ல சொற்களில்லை

  முப்பத்தைந்து வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு. கைத்தாங்கலாய் ஆட்டோவில் இருந்து தன் பதின் வயது மகனை சிரமப்பட்டு இறக்கி, கால்கள் துவளத்துவள அவனை நடக்க வைத்து நம்பிக்கை பிடித்து அழைத்து வருகிறார் வாரத்தில் மூன்று நாட்கள், ஒவ்வொரு வாரமும். மன, உடல் வளர்ச்சி இரண்டுமே குறைபாடாம். பதின் வயது மகனுக்கு பேச்சு வராதாம். அமானுஷ்யமான ஓசையில் தனது சகல உணர்வுகளையும் அந்த சிறுவன் வெளிப்படுத்துகிறான். மீசை அரும்பத்தொடங்கியிருக்கிறது அவனுக்கு. பத்து பதினைந்து ஆண்டுகளாக தவமாய் சுமந்து அலைகிறார் அவனை எப்படியாவது குணப்படுத்தலாம் என. ஒரு holistic healing centre இல் இப்போது சிகிச்சை அவனுக்கு, வாரத்தில் மூன்று நாட்கள். பகல் பொழுதில் வேலைக்கு சென்றுவிட்டு மாலைகளில் அழைத்து வருகிறார். ஒரு முறை கூட ஆண்கள் யாரும் துணைக்கு வந்ததில்லை.  ஔவை எழுதிய அரிதரிது மானிடர் ஆதல் அரிது மா னிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது என்கிற பாடலை மனம் வெம்பி இப்படி முடிக்கத்தோன்றியது இவ

தாய்க்கிழவியும் சபிக்கப்பட்ட நதியும்.

சூர்ப்பனகையின் மூக்கு அறுபடுவதற்கு முன்னால் சீதையின் இருப்பு ராவணனுக்கு தெரியாது. மூக்கு அறுபட்டபின் சீதையின் இருப்பு ராமனுக்கு தெரியாது. சீதை தொலைந்தபின் அனுமன் வழி மீட்புப்பாலம் அமைக்கும் வரை சீதையின் கற்பு ராமனுக்கு தெரியாது. ராவணன் அறிந்த சீதையின் கற்பு, ராம நாட்டு மக்களுக்கும் தெரியாது. அறுபதினாயிரம் மனைவியர் கொண்ட தசரதனின் ராமன், சீதையற்று இருந்த காலத்தில் அவனது கற்பு பற்றி கேள்வி கேட்காத ராம நாட்டு மக்கள், சீதையை கண்டபின் அவளது கற்பு பற்றி கேள்வி எழுப்பியபோது "கிடக்கிறார்கள் இந்த மட மக்கள். நானிருக்கிறேன் துணையாய்!' என இறைமானுடம் ஏன் அவள் கரம் பிடித்து தீயுள் நுழையவில்லை என்பது யாருக்கும் தெரியாது.  அனைத்தும் அறிந்திருந்த தீ சீதையை திருப்பித்தந்த பின்னும் அவளது கற்பை சந்தேகித்த சில மக்களை தண்டிக்காது, சூலுற்றிருக்கும் சீதையை ராமன் வனம் போகச்சொன்னது ஏன் என்பது சீதைக்கும் தெரியாது. அவளை கானகத்தில் விட்டு திரும்பிய லக்‌ஷ்மணனுக்கும் தெரியாது. குழந்தைகள் பிறந்ததோ,  நிகர்-ராமர்களாக வளர்ந்ததோ, ராமனின் யாகக்குதிரையை  கானகத்தில் அவர்கள் கட்டி வைத்ததோ ராமனுக்கு தெரியாது. தன் குழந

சொல்!

  சொல்லின் மூலம் எது? உணர்வு.  உணர்வின் வெளிப்பாடாகவே சொற்கள் சிதறிக்கிடக்கின்றன நம்மைச்சுற்றி. உணர்வில் தோய்ந்த சொற்கள் மனிதர்களை சேர்க்கும், உடைக்கும், இணைக்கும், பிரிக்கும், இன்னும் என்னவெல்லாமோ செய்யும். அதன் ஆற்றல் அது ஊறிய உணர்வில் இருந்து கிடைப்பது. சேர்த்து, உடைத்து, இணைத்து, பிரித்து என செயல் எதுவென்றாலும் அத்தனைக்கும் வலு சேர்க்கும் உணர்வுகளின் உறைவிடம் என்னவோ சொற்களற்ற அடர்மௌனம்தான். அமாவாசை நிலவு தந்த இருள் கப்பி போல, உணர்விலிருந்து வெளிப்படப்போகும் சொற்கள் அனைத்தையும் கவ்வியிருக்குது அடர்மௌனம், சுண்டப்பட்ட துப்பாக்கியின் குண்டுகள் புறப்படும் முன்னான மௌனம் குண்டுகளை கவ்விக்கொண்டிருப்பது போல. ஒரு விதத்தில் சொற்களும் கருந்துளைகள் போன்றவையே (Black Holes). அடர்மௌனத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டு குண்டு போல சொல்லொன்று உள் நுழைந்து தசையறுத்து உள்வெடித்து வலி தந்து உள்ளனைத்தையும் தகர்த்து தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும். இது ஒருபுறம் என்றால், மௌனம் அணிந்த பார்வையொன்றே ஓராயிரம் சொற்கள் போல வாழ்வின் நம்பிக்கையை நீட்டிக்கும் இன்னொருபுறம் மௌனமாய். சொற்களற்ற, ஏன், மொழிகளே அற்ற உலகில் வன்ம