முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்றி சொல்ல சொற்களில்லை

 

முப்பத்தைந்து வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு.

கைத்தாங்கலாய் ஆட்டோவில் இருந்து தன் பதின் வயது மகனை சிரமப்பட்டு இறக்கி, கால்கள் துவளத்துவள அவனை நடக்க வைத்து நம்பிக்கை பிடித்து அழைத்து வருகிறார் வாரத்தில் மூன்று நாட்கள், ஒவ்வொரு வாரமும்.

மன, உடல் வளர்ச்சி இரண்டுமே குறைபாடாம். பதின் வயது மகனுக்கு பேச்சு வராதாம். அமானுஷ்யமான ஓசையில் தனது சகல உணர்வுகளையும் அந்த சிறுவன் வெளிப்படுத்துகிறான். மீசை அரும்பத்தொடங்கியிருக்கிறது அவனுக்கு.


பத்து பதினைந்து ஆண்டுகளாக தவமாய் சுமந்து அலைகிறார் அவனை எப்படியாவது குணப்படுத்தலாம் என. ஒரு holistic healing centre இல் இப்போது சிகிச்சை அவனுக்கு, வாரத்தில் மூன்று நாட்கள்.

பகல் பொழுதில் வேலைக்கு சென்றுவிட்டு மாலைகளில் அழைத்து வருகிறார். ஒரு முறை கூட ஆண்கள் யாரும் துணைக்கு வந்ததில்லை. 


ஔவை எழுதிய

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது

என்கிற பாடலை மனம் வெம்பி இப்படி முடிக்கத்தோன்றியது இவர்களை நினைக்கையில்;

"அதனினும் அரிது இவர் போல தாயாய் பிறத்தல் அரிது..."


நாமெல்லாம் வாழ்வில் சகல இன்பங்களையும் நமக்கான உரிமை என இருமாந்து இருக்கையில், தன் எடையொத்த மகனை கடும் சிரமத்தோடு சீராக்க தனியே போராடும் இவரது வாழ்வை நினைத்துப்பார்ப்போமா?


இன்னொரு வாழ்வும் நினைவில் வந்தது.


வசந்திகள் நிரம்பிய சுவிட்சர்லாந்து நாட்டில் என்னுடன் பணி புரிந்த ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். எல்லோருமே இருபது வயது+

அதில் ஒரு பெண், பிறந்ததில் இருந்தே சக்கர நாற்காலி வாசம். இடுப்புக்கு கீழே கால்கள் இயங்காது. நண்பரின் குழந்தைகள் எல்லோரும் பெரியவர்களான பின்பு இந்த பெண் மட்டும் சில வருடங்களாக ஒரு "Care Home" இல் வாசம். கணவர் மனைவி மற்ற பிள்ளைகள் எல்லோரும் வெவ்வேறு பணிகளில்.


அது ஒரு கிறஸ்துமஸ் விடுமுறை வாரம். பனி பொழிந்து நாடெங்கும் வெள்ளை கம்பளி போர்த்திக்கொண்டு குளிரில் நடுங்கிக்கொண்டு.

நண்பர் தன் குடும்பத்தோடு ஒரு மலைவாச  பனிச்சறுக்கு தலத்துக்கு ஒரு வார பயணம் செல்ல, அவரது சக்கர நாற்காலி பெண் மட்டும் காப்பகத்தில்.

இடுப்புக்கு கீழே இயங்காத உடல், இடுப்புக்கு மேலே எஞ்சிய உடலும் மனமும் தன் குடும்பம் ஒதுக்கிய தனிமை + வெறுமையில். கிறிஸ்துமஸ் முடிந்த மறுதினம் அந்தப்பெண் காப்பகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிகழ்வால் அந்த நண்பரின் வாழ்வு ஒன்றும் அவ்வளவாய் தடம் புரண்டதாக தெரியவில்லை. சில வாரங்கள் கழித்து அலுவலகம் வந்தவர் முன்பிருந்தது போலவே இயங்கிக்கொண்டிருந்தார் (at least for an outsiders' eyes). Either he would having been out and out practical or moved beyond numbness to display any pain...


சுவிஸ்ஸில் இருந்து இந்தியா திரும்பி பல ஆண்டுகள் கடந்தாலும் அந்த நிகழ்வின் அதிர்வு விலகாமலே இருந்தது, holistic centre இல் தன் பதின்வயது மகனுடன் தனியே போராடும் இந்த பெண்ணை பார்க்கும் வரை. இப்போது அந்த அதிர்வின் இடத்தை இவரது நம்பிக்கை நனைக்கும் பேரன்பின் கண்ணீர் நிரப்புகிறது.


முரண்பாடுகள் நிறைந்த நம் உலகுக்கு மழித்தலும் நீட்டலும் தேவையோ இல்லையோ, இதுபோன்ற சமன்பாடுகள் மிக மிக தேவை.

இனிது இனிது மானுடம் இனிது.

அதனினும் இனிது மனிதம் இனிது.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...