முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நல்லதொரு கவிதை

நல்லதொரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் நேரமிது. காகிதத்தில் ஒற்றை எழுத்து விதையாக முளைத்து கவிதையாய் வளர்ந்து முற்றுப்புள்ளி தேடும் நேரம் ஒரு அபூர்வ தருணம். எழுதியவரின் உணர்வுகளை தாங்கி, வாசிப்பவரிடம் சேதமின்றி சேர்க்க காத்திருக்குது கனமாய் காகிதம். காகிதம் செய்ய இழைகள் வேண்டி மரித்த மரங்களின் ஆன்மாக்கள்அனைத்தும் வாசித்து முடித்த பின்புதான் இந்தக்கவிதை... வாசிப்பவருக்கு தரப்படும். கவிதையெங்கும் விரைந்தோடும் எழுத்துக்களை கயறுபோல் இறுகப்பிணைத்துக்கொண்டிருக்கிறது (கவிதை) வரிகள். வகுப்பு வரிசை பிள்ளைகள் போல வரி வரியாய் காத்திருக்கும் கவிதையின் சொற்களை வரிசை மாற்ற யாருக்கும் இந்தக்கவிதை அனுமதி தருவதில்லை, அவர் எழுதியவரே ஆனாலும். நல்ல கவிதை கால் முளைத்தோ இறகு முளைத்தோ பல்லக்கில் ஏறியோ  வாசிப்பவரின் மனவெளியெங்கும் உலா வருகையில் தூப தீப ஆராதனைகள் அதை ஒருபோதும் சலனப்படுத்துவதில்லை. ஓசைகளும் கற்பூர வாசமும் காற்றில் கரைந்துபோய் மௌனம் கதகதப்பாய் இந்தக்கவிதையை போர்த்திக்கொண்ட பின்பும் (இந்தக்கவிதை) உறங்குவதில்லை. வாசிப்பவரின் ஆழ்ந்த உறக்கத்திலும் மௌனமாய் விழித்துக்கொண்டு அவரை வாசித்துக்கொண்...

நீ சிரித்தால்

நிற்கும் இடமெல்லாம்  ம ழை மறித்து குடைபிடிக்கும் மரம்   மழை நின்றபின்  தன் வேரடிக்கு  மட்டும்  மழை பொழிந்துகொள்ளும் அதிசயம் நிகழும் ஒவ்வொரு மழையிலும். எந்த வேருக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை மரம் அறியும்;  சல்லி வேர்கள் மண்ணடி ஈரத்தில் மூழ்கி குளிர,  ஆணி வேருக்கு  மிடறு மிடறாய் போதுமென்பதை மரம் அறியும். மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி, மழை நின்றபின்பு உள்வடியும் மழைநீரில் சிரம் நனைந்து உடல் நனைந்து உயிர் நனையும் அதிசய உணர்வனுபவம், மரம் மட்டுமே தரக்கூடிய வாழ்வனுபவம். அதிலும் அகலக்குடை பிடிக்கும் மரத்திற்கு அளவாய் மட்டுமே வேரடி நீர் என்றும் இடைவெளி நிறைந்த ஓட்டைக்குடை பிடிக்கும் மரத்திற்கு கூடுதலாய் நீரென்றும் எதுவோ என்றோ வகுத்த விதி, மாறாமல் சுமந்து நிற்குது மரம் இன்றும்! மரத்தி்ற்குள் சூட்சுமம் பொதித்தது எதுவோ அதுவே மண் உண்ணும் நீரின் அளவையும் மண்ணுள்ளே பொதி்த்து வைத்திருக்குது ரகசியமாய். உயிருள்ள அனைத்தையுமே ஜடப்பொருளாய் கற்பிதம் செய்வதையே நம் வாழ்வியல் தூக்கிப்பிடிக்க, நமக்குள்ளேயும் பொதிந்திருக்கும் ஏராளமான சூட்சுமங்கள் உணரப்படாமலே நமக்குள்ளே நித்தம...

நன்றி சொல்ல சொற்களில்லை

  முப்பத்தைந்து வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு. கைத்தாங்கலாய் ஆட்டோவில் இருந்து தன் பதின் வயது மகனை சிரமப்பட்டு இறக்கி, கால்கள் துவளத்துவள அவனை நடக்க வைத்து நம்பிக்கை பிடித்து அழைத்து வருகிறார் வாரத்தில் மூன்று நாட்கள், ஒவ்வொரு வாரமும். மன, உடல் வளர்ச்சி இரண்டுமே குறைபாடாம். பதின் வயது மகனுக்கு பேச்சு வராதாம். அமானுஷ்யமான ஓசையில் தனது சகல உணர்வுகளையும் அந்த சிறுவன் வெளிப்படுத்துகிறான். மீசை அரும்பத்தொடங்கியிருக்கிறது அவனுக்கு. பத்து பதினைந்து ஆண்டுகளாக தவமாய் சுமந்து அலைகிறார் அவனை எப்படியாவது குணப்படுத்தலாம் என. ஒரு holistic healing centre இல் இப்போது சிகிச்சை அவனுக்கு, வாரத்தில் மூன்று நாட்கள். பகல் பொழுதில் வேலைக்கு சென்றுவிட்டு மாலைகளில் அழைத்து வருகிறார். ஒரு முறை கூட ஆண்கள் யாரும் துணைக்கு வந்ததில்லை.  ஔவை எழுதிய அரிதரிது மானிடர் ஆதல் அரிது மா னிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது என்கிற பாடலை மனம் வெம்பி இப்படி முடிக்கத்தோன...

தாய்க்கிழவியும் சபிக்கப்பட்ட நதியும்.

சூர்ப்பனகையின் மூக்கு அறுபடுவதற்கு முன்னால் சீதையின் இருப்பு ராவணனுக்கு தெரியாது. மூக்கு அறுபட்டபின் சீதையின் இருப்பு ராமனுக்கு தெரியாது. சீதை தொலைந்தபின் அனுமன் வழி மீட்புப்பாலம் அமைக்கும் வரை சீதையின் கற்பு ராமனுக்கு தெரியாது. ராவணன் அறிந்த சீதையின் கற்பு, ராம நாட்டு மக்களுக்கும் தெரியாது. அறுபதினாயிரம் மனைவியர் கொண்ட தசரதனின் ராமன், சீதையற்று இருந்த காலத்தில் அவனது கற்பு பற்றி கேள்வி கேட்காத ராம நாட்டு மக்கள், சீதையை கண்டபின் அவளது கற்பு பற்றி கேள்வி எழுப்பியபோது "கிடக்கிறார்கள் இந்த மட மக்கள். நானிருக்கிறேன் துணையாய்!' என இறைமானுடம் ஏன் அவள் கரம் பிடித்து தீயுள் நுழையவில்லை என்பது யாருக்கும் தெரியாது.  அனைத்தும் அறிந்திருந்த தீ சீதையை திருப்பித்தந்த பின்னும் அவளது கற்பை சந்தேகித்த சில மக்களை தண்டிக்காது, சூலுற்றிருக்கும் சீதையை ராமன் வனம் போகச்சொன்னது ஏன் என்பது சீதைக்கும் தெரியாது. அவளை கானகத்தில் விட்டு திரும்பிய லக்‌ஷ்மணனுக்கும் தெரியாது. குழந்தைகள் பிறந்ததோ,  நிகர்-ராமர்களாக வளர்ந்ததோ, ராமனின் யாகக்குதிரையை  கானகத்தில் அவர்கள் கட்டி வைத்ததோ ராமனுக்கு தெரியாது. தன்...

சொல்!

  சொல்லின் மூலம் எது? உணர்வு.  உணர்வின் வெளிப்பாடாகவே சொற்கள் சிதறிக்கிடக்கின்றன நம்மைச்சுற்றி. உணர்வில் தோய்ந்த சொற்கள் மனிதர்களை சேர்க்கும், உடைக்கும், இணைக்கும், பிரிக்கும், இன்னும் என்னவெல்லாமோ செய்யும். அதன் ஆற்றல் அது ஊறிய உணர்வில் இருந்து கிடைப்பது. சேர்த்து, உடைத்து, இணைத்து, பிரித்து என செயல் எதுவென்றாலும் அத்தனைக்கும் வலு சேர்க்கும் உணர்வுகளின் உறைவிடம் என்னவோ சொற்களற்ற அடர்மௌனம்தான். அமாவாசை நிலவு தந்த இருள் கப்பி போல, உணர்விலிருந்து வெளிப்படப்போகும் சொற்கள் அனைத்தையும் கவ்வியிருக்குது அடர்மௌனம், சுண்டப்பட்ட துப்பாக்கியின் குண்டுகள் புறப்படும் முன்னான மௌனம் குண்டுகளை கவ்விக்கொண்டிருப்பது போல. ஒரு விதத்தில் சொற்களும் கருந்துளைகள் போன்றவையே (Black Holes). அடர்மௌனத்திலிருந்து வெடித்து வெளிப்பட்டு குண்டு போல சொல்லொன்று உள் நுழைந்து தசையறுத்து உள்வெடித்து வலி தந்து உள்ளனைத்தையும் தகர்த்து தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும். இது ஒருபுறம் என்றால், மௌனம் அணிந்த பார்வையொன்றே ஓராயிரம் சொற்கள் போல வாழ்வின் நம்பிக்கையை நீட்டிக்கும் இன்னொருபுறம் மௌனமாய். சொற்களற்ற, ஏன், மொழிகளே அற்ற உல...

பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல?!

  "உன் அழகு மாசு மருவற்ற உன் சருமத்தில்" "உன் அழகு உன் முத்துவெண்மை பற்களில்" "உன் அழகு உன் கூந்தல் அடர்வில், நீளத்தில்" "உன் ஆற்றலுக்கு அழகு இந்த புட்டியில் அடைந்துகிடக்கும் கருமாந்திர மாவு!" "உன் தகுதிக்கு உன் குடும்பத்திற்கு அழகிய அனைத்து வசதிகளுடனும் கூடிய பெருநகர விளிம்பில் வீடு!' என கருத்த தோலுடைய மக்களிடம்  வெளிச்சம் போட்டு கூவி விற்கும் நிறுவனங்கள் நிசத்தில் விற்பவை என்ன தெரியுமா?! 'உன் சரும எண்ணெய் பிசுக்கும் மருக்களும் சுருக்கங்களும் உன் எதிரி' 'உன் வியர்வை உனக்கு எதிரி!' 'உன் நிறம் உனக்கு எதிரி!' 'உன் பல் பழுப்பு உனக்கு எதிரி!' 'உன் வீட்டு உணவு உனக்கு எதிரி!' 'உன் சிற்றூர் வசிப்பிடம் உனக்கு எதிரி!' "உனக்கு எதிரகளே இல்லாமல் ஆகவேண்டுமென்றால் நீ வணங்க வேண்டிய கடவுள் இதுதான்!" என நம்மை நமக்கே எதிரிகளாக்கி, எதிர்ப்பை ஒழிக்க அவை நம்மை வணங்கச்சொல்லும் அந்தக்கடவுள் பல வண்ண நிறங்களில் பளபளப்பான ஆடைகளில் வெவ்வேறு வடிவங்களில் ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை வெளியெங்கும் பரவியிருக்...

தணியுமா இந்த "தாகம்"?

1801 ஜூன் 16 ஒரு நோட்டீசு ஒன்று சிவகங்கை சீமையில் வெளியாகிறது, probably the first ever chain mail kind of message propagation the world has seen. அதன் சாரம்: "வெள்ளைக்காரன் எவன கண்டாலும் உதைத்து துரத்து. அடித்து நொறுக்கு. இந்த பூமி அவர்களுடையது இல்லை. இந்த நோட்டீசை உடனே பல பிரதிகள் எடுத்து அனைவருக்கும் பரப்பு. அப்படி செய்யத்தவறினால் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்றவனை பீடிக்கும் பாபம் உன்னையும் பீடிக்கும். இந்த நோட்டிசை பிரதிகள் எடுத்து பரப்பும் ஒவ்வொருவரின் பாதங்களிலும் என் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்து வணங்குகிறேன். இப்படிக்கு, இளைய மருது மருது பாண்டிய சகோதரர்களில் இளையவர் செய்த இந்த பிரகடனம், இந்திய விடுதலைப்போரின் முதல் குரல். இந்த நோட்டீசுஒலித்தரங்க கோவில் சுவர்களிலும் ஒட்டப்பட்டதாம். புரட்சி வெடிக்க என்ன காரணம்? ஏன் சிவகங்கை சீமை? வீரபாண்டிய கட்டபொம்மனை பிரிட்டிஷ் அரசு கயத்தாறில் தூக்கிலிட்டு, கதை முடிக்க அவனது தம்பி ஊமைத்துரையை தேட, ஊமைத்துரை மருதுபாண்டியரிடம் தஞ்சம் புக, அவனை துரத்திய வெல்ஷ் துரைக்கு ஒரு மிகப்பெரிய இக்கட்டு. தனக்கு வேட்டை கற்றுக்கொடுத்த பெரிய மருது, வளரி வீ...