சூர்ப்பனகையின் மூக்கு அறுபடுவதற்கு முன்னால் சீதையின் இருப்பு ராவணனுக்கு தெரியாது. மூக்கு அறுபட்டபின் சீதையின் இருப்பு ராமனுக்கு தெரியாது. சீதை தொலைந்தபின் அனுமன் வழி மீட்புப்பாலம் அமைக்கும் வரை சீதையின் கற்பு ராமனுக்கு தெரியாது. ராவணன் அறிந்த சீதையின் கற்பு, ராம நாட்டு மக்களுக்கும் தெரியாது. அறுபதினாயிரம் மனைவியர் கொண்ட தசரதனின் ராமன், சீதையற்று இருந்த காலத்தில் அவனது கற்பு பற்றி கேள்வி கேட்காத ராம நாட்டு மக்கள், சீதையை கண்டபின் அவளது கற்பு பற்றி கேள்வி எழுப்பியபோது "கிடக்கிறார்கள் இந்த மட மக்கள். நானிருக்கிறேன் துணையாய்!' என இறைமானுடம் ஏன் அவள் கரம் பிடித்து தீயுள் நுழையவில்லை என்பது யாருக்கும் தெரியாது. அனைத்தும் அறிந்திருந்த தீ சீதையை திருப்பித்தந்த பின்னும் அவளது கற்பை சந்தேகித்த சில மக்களை தண்டிக்காது, சூலுற்றிருக்கும் சீதையை ராமன் வனம் போகச்சொன்னது ஏன் என்பது சீதைக்கும் தெரியாது. அவளை கானகத்தில் விட்டு திரும்பிய லக்ஷ்மணனுக்கும் தெரியாது. குழந்தைகள் பிறந்ததோ, நிகர்-ராமர்களாக வளர்ந்ததோ, ராமனின் யாகக்குதிரையை கானகத்தில் அவர்கள் கட்டி வைத்ததோ ராமனுக்கு தெரியாது. தன்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!