கொதிக்கும் வெயிலில் தார்ச்சாலையின் நடுவில் ஜட்டி பனியன் மட்டுமே அணிந்து மல்லாந்து கிடந்தது நம் மானம். சாலையின் ஒருபுறம் பாட்டி, மறுபுறம் அம்மா, நடுவில் தன்னைத்தானே தார்ச்சிலுவையில் ற மதுவால் அறைந்துகொண்ட 20+ வயது இளைஞன். ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி கைகள் இருபுறமும் நதிக்கிளைகள் போல நீள மல்லாந்து வானம் பார்த்து கண்கள் மூடி கிடந்தான். வீதிக்கு வீதி சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடல் கேட்டு கோவனை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய அரசு. கோவனுக்கு அன்று துணை நின்ற எதிர்க்கட்சி இன்று ஆட்சியில். கைது செய்யப்படவேண்டிய மதுபானமென்னவோ தடையின்றி "குடி" மகன்களை சென்றடைய புதிது புதிதாய் மதுக்கடைகள், எதிர்ப்பு போராட்டங்கள்... கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவையில் இருந்து 25 கி.மீ தொலைவில் கரியாம்பாளையம் பிரிவு, அன்னூருக்கு சற்று முன்பாக. அந்த பிரிவில் இடதுபுறத்தில் இறங்கி விரையும் காரமடை சாலையில் ஆட்களற்ற தனிமையில் இரண்டு சிற்றூர்களுக்கு இடையில் 35° வெயிலில் நேற்று மதியம் குடிபோதையில் நினைவிழந்து விழுந்து கிடந்த வாட்டசாட்டமான மகனை இருவரும் சேர்ந்து இழுத்தும் கரை சேர்க்க முடியாமல் ஊ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!