காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தங்கள் பாராயணம் செய்வது யார்.?வடகலையா தென்கலையா? என ஒரு குறிப்பிட்ட சாதியினரின் உட்பிரிவுகளுக்குள் மோதல், பலப்பல வருடங்களாக.
சென்ற முறை தீர்ப்பில் "கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரபந்தங்கள் பாடும் உரிமை தென்கலைக்கு மட்டுமே" என தீர்ப்பாகி, மேல்முறையீடு செய்து, நேற்றைய தீர்ப்பு, "நாங்க சொல்கிறவரை வடகலை தென்கலை ரெண்டு பேருமே சேர்ந்து பாடுங்கோ, பெருமாள் மகிழ்வார்"
வர்ணாசிரம வண்ணங்களில் என்னதான் உயர் வண்ணம் தாழ்வண்ணம் என மனிதர்கள் தம்மை அடையாளமிட்டுக்கொண்டாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கு உள்ளேயும் எத்தனை வர்ணங்கள், எல்லைக்"கோடுகள்"!
Black and White are not absolute colours; they are shades of gray present or absent.
21 ஆம் நூற்றாண்டில் One Nation One Language One Food One God என்கிற ஏக தத்துவம் இதில் எந்தக்கலை?!
நடிகர் விவேக்கின் சாமி திரைப்பட நகைச்சுவை காட்சி நினைவில் வருகிறது.
அள்ளப்போவதுளப்போவது என்னவோ கடைவர்ண மக்கள் மட்டுமே :-(
(Elephant: Fabric art by Sophie Standing)
கருத்துகள்
கருத்துரையிடுக