முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மைக்கேல் ஷூமாகரும் அலாவுதீன் கில்ஜியும் அடிமை இந்தியர்களும் - 1

 


ஆண்டு: 2000. 

எனக்கு ஒரு ஐரோப்பிய நிறுவனத்தில் மென்பொருள் எழுதும் வேலை (software programming). 

புதிதாய் ஒரு ஐரோப்பிய பங்குச்சந்தை தொடக்குவதற்கு தேவையான வணிக இணைப்பு மென்பொருள் எழுத பன்னாட்டு பொறியியல் குழு ஒன்று, எங்கள் குழு, ராப்பகலாய் உழைத்துக்கொண்டிருந்தது. 

உலகம் முழுதும் பரவப்போகும் அந்த புதிய வணிக தளத்தின் மென்பொருள் கட்டமைப்பின் தலைவர், Michael Schumacher, ஒரு ஸ்விஸ் ஜெர்மன் மனிதர்.

ஒரு கட்டமைப்பை முன்னடத்திச்செல்ல அவசியமான தலைமைப்பண்புகள் இவரிடம் ஏராளம். அடுத்தவர் நேரத்தை வீண்டிக்கமாட்டார், தனது குழு உறுப்பினர்களை துல்லியமாக கணிப்பதுல் வல்லவர் ஆனாலும் அவர்களில் யாராவது பணியில் பிழை செய்தால் அப்பழியை அவர் ஏற்றுக்கொண்டு சரி செய்வார்.

மிகப்பெரிய வளமான குடும்பத்தில் பிறந்திருப்பாரோ? உலகப்புகழ் கல்லூரிகளில் படித்திருப்பாரோ என்றால் அது மாதிரியான பின்புலமெல்லாம் அவருக்கு இல்லை.

ஒரு நாள் மாலை பணி முடித்து அவரோடு தேநீர் அருந்துகையில் அவரது பெயரில் உள்ள Schumacher என்பதன் பொருள் கேட்டேன். அவரது விடை சட்டென அலாவுதீன் கில்ஜியை என் நினைவில் கொண்டு வந்தது. அதனோடு கூடவே என்னுள் ஒரு ஏக்கப்பெருமூச்சையும் எழுப்பியது.

முதலில் அவரது விடையை அலசிவிட்டு அதன் பின் அலாவுதீன் கில்ஜியை பிடிப்போம்!


எனது ப்ராஜக்டின் தலைவர், Michael Schumacher - செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர். Schumacher என்பது அவரது மூதாதையரின் தொழில் அடையாளம்! இன்றுவரை அவர் பெருமையுடன் பயன்படுத்தும் அடையாளம்!

அவர் தந்த விடை என்னுள் இன்னொரு பெரிய கேள்வியை எழுப்பியது:

அது எப்படி? ஒரே பூமியில் ஒரு ஷூமாகருக்கு அது பெருமை தரும் அடையாளமாகவும் இன்னொருவருக்கு, நம் இந்திய நிலப்பரப்பில் வாழும் ஒரு சக்கிலிய வீராசாமிக்கு, தலைமுறைகள் தாண்டிய துயரச்சுமையாகவும் மாறுகிறது?

(சக்கிலியர் - நாலாம் வர்ணத்தில் ஒரு பிரிவு, தோல் தொழில் இவர்களது "தலையெழுத்து")


விடை சொல்லும் வரலாறும், வரலாற்றுப்பிழையும்!

ஆயிரமாண்டுகள் கோலாச்சிய ரோம ராச்சியம் செத்து சுண்ணாம்பாகியபின் சுமார் நானூறாண்டுகளுக்கு பழைய பேரரசின் மக்கள் அனைவரும், 'போங்கடா, போயி விவசாயம் பண்ணுங்கடா!' என தம் கிராமங்களுக்கு திரும்பி உணவு உற்பத்தியை பெருக்கத்தொடங்கினர். அனைவருமே நிலங்களில் உழைக்கத்தொடங்க, அன்றைய வரலாற்றுப்பதிவாளர்கள் அனைவரும் வேறு வழியின்றி(! - there were NP wars because EveryOne were toiling in their lands. So these folks had nothing to write about and there were no Paymaster Kings for them) அடுத்த நானூறாண்டுகளை 'ஐரோப்பிய வரலாற்றின் இருண்ட காலம்' என பின்னாட்களில் ஓரு லைனில் எழுதிச்சென்றனர் :-)

நம்ம நிலம் போலவே அங்கும் உணவு உற்பத்தியாளர்களுக்கான தேவைகளை (ஆடை தயாரித்தல், அழுக்ககு ஆடைகளை வெளுத்தல், அணிகலன் தயாரித்தல், காலணிகள் தயாரித்தல் etc...) நிறைவேற்ற குலத்தொழில் வழி வந்தோர் அனைவரும் உதவ, அவர்கள் அனைவரது வயிறையும் விவசாயி நிரப்ப, ஒரு அற்புதமான எதிர்கால ஐரோப்பாவுக்கான வலுவான அடித்தளத்தை அவர்களது உழைப்பு உருவாக்கிக்கொணரடிருக்கிறது என்கிற வரலாற்று உண்மை அப்போது அவர்களுக்கே தெரியாது!


மனிதனது அடிப்படைத்தேவைகளை உளவியளாலர் ஆப்ரஹாம் மாஸ்லோவ்  ஐந்து படிகள் கொண்ட ஏணியாக வரையறுத்திருக்கிறார் ("Moslow's Hierarchy"). அவற்றை ஒவ்வொன்றாய் பார்ப்போம்:

அடிப்படி:
தட்டில் உணவு & தலைக்கு மேல் கூரை 

அடுத்த படி: 
பாதுகாப்பு, செயல் சுதந்திரம்

மூன்றாம் படி:
அன்பு, நட்பு, காதல், குடும்பம் - இவை தரும் அரவணைப்பு

நான்காம் படி:
கல்வி, நிபுணத்துவம் - அவை தரும் மகிழ்ச்சி, பெயர், புகழ், நன்மதிப்பு

ஐந்தாம் படி:
தன்னை அறிதல்!

ரோமப்பேரரசுக்கு பின்னான ஐரோப்பிய மக்கள் அடுத்த நானூறாண்டுகளில் மறுபடி முதல் படியில் தொடங்கி மெல்ல மெல்ல நான்காவது படியில் ஏறத்தொடங்கியதும் ஒரு பெரும் 'மறுமலர்ச்சி' நிகழ்ந்தது: Renaissance happened! புதிய ஐரோப்பாவிற்காக அதுவரை மக்கள் ஊன்றிய விதைகள் யாவும் முளைத்து, தழைத்து, செழிக்கத்தொடங்கின.

கல்வி, கலை, இலக்கியம், வணிகம் என நான்காவது ஏணிப்படியில் நிற்கும் ஆர்வத்துடன் அனைவரும் உழைக்க, ஐரோப்பா மீண்டும் மலர்ந்தது ( Renaissance - மறுமலர்ச்சி!).

அதுவரை விவசாயிகளுக்கு குலத்தொழில் வழியே உதவிய அனைவரும் தங்களது தொழில்களுக்காக Guild களர எனப்படும் தொழில் சார்ந்த அடையாளக்குழுக்களை உருவாக்கினர். 

Medieval ஐரோப்பாவில், .அதாவது 13-18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில், ஐரோப்பாவிலும்(! - இந்த ஆச்சர்ய குறி ஏன் என்பதை விரைவில் விளக்குகிறேன்) இப்படியாக தொழில் அடிப்படையிலான Guild எனப்படும் அமைப்புகள் பல இருந்தன. செருப்பு தைப்பவர், உருளை விவசாயி, மீனவர், பொற்கொல்லர், இரும்பு வேலை செய்பவர், தையல் கலைஞர்... என குலத்தொழில் பழகும் பல குழுக்கள். நம்ம நிலப்பரப்பு போலவே!


13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய மறுமலர்ச்சி, அங்குள்ள அரச குல மக்களை பெருந்தனக்காரர்களாக மாற்ற, (ஏராளமான நிலங்கள் அவர்களிடம்) அவர்களும் நாலாவது படியில் நிற்கும் உந்துதலில் கடல் வணிகத்தை மீண்டும் தொடங்க, அவர்களது ஆற்றல் உலகம் முழுதும் பரவி, மறுபடி ராச்சியப்பெருங்காலனிகளாய் பரந்து விரிந்தது.

மறுமலர்ச்சி தந்த கல்வி கட்டமைப்புகளும் அவற்றின் வழி வந்த இயந்திர புரட்சியும் அவர்களது உற்பத்தி ஆற்றலை பன்மடங்கு பெருக்க, எல்லா Guildகளில் இருந்தும் மக்கள் புதிய கல்வி பயின்று புதிய தொழில் நுட்பங்களுக்கு மாறி, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு உயர இவர்களுக்கு தேவைப்பட்டது இருநூறு ஆண்டுகள் மட்டுமே.


இன்றும் தம் பரம்பரை தொழில் பெயரை பெருமிதமாய் தாங்கி இவர்கள் வேறு பல தொழில்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.


சரி, மைக்கேல் ஷூமாகருக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் என்ன தொடர்பு? கில்ஜிக்கும் இந்திய அடிமைகளுக்கும் என்ன தொடர்பு?



இந்த கேள்விக்கு விடை அறிய நாம்  நம. பண்டைய இந்தியாவுக்கு, ரோமப்பேரரசு கால இந்தியாவுக்கு பயணிக்கவேண்டும். அது ஒரு நீண்ட பயணம், 2000 ஆண்டு கால பயணம்!


பயணிப்போம், இணைந்திருங்கள்!

பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...