பட்டி தொட்டி எல்லாம் கேஜிஎஃப் காய்ச்சல் கொரோனாவுக்கே டஃபு குடுத்தப்பகூட நான் சிக்கிக்கல. தெளிவா ஒதுங்கியே இருந்தேன். இப்ப பார்ட் 2 வந்தாலும் வந்தது, காய்ச்சல் அதிகமாக, 'தியேட்டர்லதான் பாக்கணும்! நீ கூட்டிகிட்டு போ!'' என அழுத்தமும் சேர்ந்து கொள்ள, 'பார்ட் 1 முதலில் ஓடிடி இல் பார்க்கிறேன். அப்புறமா முடிவு பண்ணலாம்' என்று... மூன்று முறை முயற்சி செய்து விட்டேன் முடிலபா! முதல் முறை 10 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டாம் முறை 17 நிமிடம். மூன்றாம் முறை முப்பத்து மூன்று நிமிடம், sheer torture! கதையிலும் அதுவே, காண்பவருக்கும் அதுவே! தங்க சுரங்கங்களில் கொத்தடிமைகள், மனிதர்கள் dispensable resources. Bleak bleak bleak life. இதில் முளைத்து வரும் விடிவெள்ளி, இல்லை இல்லை, சுடர் விளக்கு...இல்லை இல்லை, தீப்பந்தம்...இல்லை இல்லை, வெடிகுண்டு...இல்லை இல்லை சூறாவளி...இல்லை இல்லை, கடவுள்போல ரட்சகன், எதற்கும் அஞ்சான் இவனை வெல்லல் யார்க்குமரிது! அதிலும் படத்தில் நாவலாசிரியர் ஒருவர் வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை சொல்கிறேன் என ரன்னிங் கமெண்டரி தொடங்கி படம் முழுதும் நிறுத்தாமல் முழங்க,...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!