முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ட்ராஃபிக் ஜாம்!

ட்ராஃபிக் ஜாம். அனுமன் வால் போல வாகனங்கள் இருபுறமும். மையத்தில் ஏதோவொரு 'கடக்க இயலாத' நிகழ்வினால் தேக்கம் என உணர்ந்தேன். ஏற்கனவே புது சாலை அமைப்பதற்காக பழையதை கொத்திப்போட்டு, பயன்படுத்தக்கூடிய அகலமும் குறைவான சாலை. நிமிடங்கள் மெல்ல கரைய...வண்டிகள் எதுவும் நகர்வதாயில்லை. மட்டமதியான வெயில் மூட்டிய சினத்தில் காடெரிக்கும் உத்வேகத்தோடு வாகனத்தை நிறுத்தி இறங்கினேன், மையத்தை நோக்கி நகர்ந்தேன். ஒரு இளம் வயது பெண். இடுப்பில் ஒரு குழந்தை. உடைகளில் ஏழ்மை. சாலையின் ஒரு பகுதியில் நடந்துகொண்டிருக்கிறாள். அவள் பின்னால் அவளது வயதை ஒத்த ஒரு ஆண், அவளை தடுத்து நிறுத்தும் முயற்சியின் தொடர் தோல்வியில் துவளாது மறுபடி மறுபடி முயல்கிறான். மொத்த கூட்டமும் (நம்ம ஊரில் கூட்டம் கூடுவதை கேக்கணுமா என்ன?!) உறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த வாகன ஓட்டிகள் யாரும் ஹார்ன் கூட அடிக்கவில்லை. நான்கு சுவர்களுக்குள் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு, பொது வெளியில். அந்நியர் நுழைய முடியாத உறவென்பதாலோ, அவர்களுக்கிடையில் நிழையக்கூடிய சமாதான உறவுகள் இல்லாததாலோ, நடுத்தெருவில் துயரம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ச

கூழாங்கல் மனிதர்கள்

கூழாங்கற்கள் பார்த்திருக்கிறீர்களா? உருண்டையாய. அல்லது நீளுருண்டையாய், வழவழப்பாய் அல்லது சற்றே சொரசொரப்பாய், பலப்பல வண்ணங்களில். கூழாங்கற்களை பிடிக்காத மனிதர்கள் யாரும் இருக்கமுடியுமா என்ன?! இந்தக்கற்களின் மீது நடப்பதும், இவற்றை உள்ளங்கைகளில் பொதித்து வைப்பதும் நம்மை பால்யத்தி்ற்கு தூக்கிச்செல்லும் மந்திரக்கதவுகள் அல்லவா? நட்சத்திர வெடிப்பின் துகள்கள், தூசிகள், மெல்ல மெல்ல்ல்ல திட வடிவம் பெற்று பல லட்சம் கோடி ஆண்டுகள் தவம் செய்து  புவியின் ஓடாகி... பூமிப்பாறைகள் அவ்வப்போது ஒட்டி உரசுகையில் உரசலின் சூடும் அழுத்தமும் இவற்றை குழம்பாக்கி பிளந்த ஓட்டின் வழி வான் நோக்கி கக்க, கக்கியது குளிர்ந்து இறுகி பாறையாய், மலையாய், மலைத்தொடர்களாய்... இப்படி உருவான மலையொன்றின் செதிள் போல ஒரு துண்டு மட்டும் நீரரித்த வேதனையில் உதிர்ந்து உருண்டு... உருண்டு  உருண்டு மலையிறங்கி தரையோடு ஓடடைந்து பள்ளமிறங்கி நீருக்குள் நழுவி 'தொபுக்' என விழுந்த தருணத்தில் அதனுள் இறங்கிய குளிர் சிலிர்ப்பு அதுவரை படிந்திருந்த நினைவுகள் அனைத்தையும் கழுவித்துடைக்க... ஆனந்தமாய் நீரோடு அது வாழும். கூழாங்கல்லின் ஆதி கதை இது. ஒ

பிழையுள்ள கவிதை

  ஒரு மாணவன் ஒரு கவிதை எழுதி தமிழாசிரியரிடம் காண்பிக்கிறான். ஆசிரியரும் வாசித்துவிட்டு, 'இங்கு தளை தட்டுகிறது. இந்த வரியில் சந்தம் வரவேண்டுமே...' என்று இலக்கணப்பிழைகளை பட்டியலிடுகிறார். மாணவனை திருத்தி எழுதச்சொல்கிறார். மாணவனும் அவ்வாறே திருத்தி எழுதி, படித்துப்பார்க்கிறான். இலக்கண சுத்தமாக சொற்கள் நிற்க, அவன் கவிதை மட்டும் தொலைந்து போயிருந்ததாம்! பல வருடங்கள் முன்பு கவிஞர் மகுடேசுவரனின் இந்த கவிதையை கணையாழி இதழில் வாசித்தேன். அதன் சாரமே இது. Perfect, Perfection என்கிற சொற்களுக்கு தமிழ்ச்சொற்கள் இல்லை தெரியுமா?  முழுமையான என்கிற சொல்கூட complete என்கிற பொருளைத்தான் குறிக்கும். Flawless - குறையற்ற என்கிற சொல்லும் பொருந்தாது. A flawless fruit (shape, size, color, texture) may not be a perfect fruit:(taste, digestion etc...)! மரங்களில் கூட perfect tree என எதுவுமே கிடையாதாம். சுற்றுச்சூழலின் பல்லாயிரக்கணக்கான மாற்றங்களால் ஒவ்வொரு நொடியும் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மரங்களில் எது perfect shape (symmetry may be an eye pleaser but nothing to do with perfection)? மனிதர்கள், நமக்கு

மரங்கள் பேசுமா?

  மரமே மௌனமா? மரங்கள் பேசுமா? பல வருடங்கள் முன்பு ஒரு BBC Channel programme இல் விலங்குகள் நம்மோடு உரையாடும் மொழி பற்றி விவரித்தார்கள். ஒரு குதிரை லாயத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் குதிரையின் அருகில் புதியவர் ஒருவர் செல்கிறார். குதிரை உடனே விலகி நகர்கிறது. மீண்டும் அவர் அதே செயலை செய்ய, குதிரை மறுபடியும் விலகி நகர்கிறது. மூன்றாவது முறையும் அப்படியே. தன் செயலை அத்துடன் நிறுத்திய அந்த மனிதர், சற்றே விலகி நிற்க... குதிரை தானாகவே அவரை மெல்ல நெருங்கி அவரை முகர்ந்து பார்க்கிறது! இப்பொழுது இவர் நம்மைப்பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்; 'எங்களது உரையாடல் மொழி உங்கள் காதில் விழவில்லை அல்லவா? ஆனாலும் நாங்கள் உரையாடினோம்தானே?!' மனிதர்கள் தங்களுக்குள்ளே உரையாடுவதற்கு வேண்டுமானால் மொழி தேவையாக இருக்கலாம், ஏனைய உயிர்களோடு அவர்கள் உரையாட மொழி தேவையில்லை. எங்கள் வீட்டின் பின்புறம் மூன்று ஆண்டுகள் முன்பு நான் ஊன்றிய விதையிலிருந்து ஒரு பப்பாளி மரம் முளைத்தது. ஒரு ஆண்டுக்குள் நல்ல வளர்த்தி. காய்க்கவும் தொடங்கியது. ஒரு புள்ளியில் அந்த மரம் என் பச்சை பசுமை ஒளிப்படங்களின் இன்றியமையாத வண்ணமுமாகிப்போனத

மயிலாண்!

  எங்கள் வீட்டின் கொல்லைப்புற மதில் சுவர் எங்களுடையது இல்லை. இப்படித்தான் அதில் தினமும் வந்து தங்கும் மயிலாண் (ஆண் மயில்) சொல்லித்திரிகிறான், சில வருடங்களாய். வெகு சிநேகமாய் எங்களை அவன் உலகோடு பிணைத்துக்கொண்டவன். புதிதாய் யாராவது வந்தால் மட்டுமே தாவிப்பறந்து மறைவான். மற்றபடி அவன் நிம்மதியாக இளைப்பாறும் இடம் அது. லியோவுக்கும் போக்கோவுக்கும் (நான்கு கால் குழந்தைகள்) மதில் சுவர் மேல் அமர்ந்திருக்கும் மயிலாணோடு விளையாடுவது மிகப்பிடித்த பொழுதுபோக்கு. எங்களுக்கும்தான். லியோ இங்கு வரும் முன்னே அந்த மதில் மயிலாணோடது ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை லியோ மயிலாணின் இறகு பிடிக்க முயல, மயிலாண் லியோவின் முன் நெற்றியில் மெலிதாய் தன் மூக்கினால் கொத்தி.. அந்த இடம் சொட்டையாகி லியோ சொட்டையுடனே சில வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில். சில தினங்கள் முன்பு வீட்டருகில் எங்கெங்கோ மயில்களின் அகவல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. லியோவும் போக்கோவும்கூட இயல்புநிலையிலிருந்து விலகி அங்குமிங்கும் அலைவதை கண்டோம். ஆனால் வேலைகள் நிறைந்த நாளென்பதால் மறந்துபோனோம். மாலையில் எங்கள் நகரின் தகவல் பகிரும் குழுவில் (W

நீ இரு, நான் போகிறேன்.

"நீ இரு, நான் போகிறேன்". "You stay, I go" was my last words. "Ishi என்பது உனது பெயர்" என்றார் அந்த யாங்க்கீ (வெள்ளைக்காரர்). மௌனமாய் தலையசைத்தேன். பெயரில் என்ன இருக்கு? இதை இவருக்கு நான் எப்படி புரிய வைப்பேன்? என்னைச்சுற்றி எல்லோரும் யாங்க்கிகள். என் நிறத்தை ஒத்த, என் உருவத்தை ஒட்டிய யாரையும் நான் நெடுநாட்களாக கண்டதில்லை. கானகங்களின் பாதுகாப்பில் நான் வாழ்ந்த காலங்கள் மீண்டும் வருமா? அன்றொரு நாள், என் எஞ்சிய உறவுகள் மூவருடன் நான் அமைதியாய் உணவருந்த அமர்ந்திருந்தபோது திடீரென எங்களை யாங்க்கிகள் பலர் சுற்றி வளைக்க, நாங்கள் விலகி ஓடினோம், உடல் நலம் குன்றியிருந்த எம் மக்கள் ஒருவரை வேறு வழியின்றி விட்டு விட்டு. ஆளுக்கொரு திசையாய் பிரிந்து இருளிலும் உறை பனியிலும் அடர்காடுகளில் திரிந்து உயிர் வளர்த்தோம் அதன் பின்னர். இதோ இன்று காலையில் உணவு தேடி நான் இந்த கானக எல்லை வீட்டின் குதிரை லாயம் அருகே ஒளிந்திருந்தேன் ஏதேனும் உணவு கிடைக்கும் என. பிடிபட்டேன். தவறு என்ன செய்தேன் நான்?  தெரியவில்லை. தவறு என்ன செய்தோம் நாங்கள்? பல நூறு ஆண்டுகளாய் எங்கள் மண்ணின் மடியில், மடிக்க

பாகுபலி 3.0

ஆஜானுபாகுவான ஆள். பரம சாது. இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே பகுதியில் வசிக்கிறார். வேலை எதுவும் இல்லை அவருக்கு. வேலை தருவதற்கு யாரும் தயாரில்லை. பசித்தால் காலாற நடந்து, கிடைத்ததை உண்டு வாழ்கிறார். அடுத்த நாளுக்கு, அடுத்த வாரத்துக்கு என சேமிக்கும் பழக்கமெல்லாம் இவரது பரம்பரைக்கே கிடையாது. இவரது போக்கு சரியில்லை என ஒரு சாரார் இவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளார்கள். 'பைசா எதுவும் தராமலே சாப்பிட்டுவிட்டு செல்கிறார்' என்பது இவர் மீது சுற்றியுள்ள மக்கள் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு. அவர்களும்கூட 'மற்றபடி ஈ, எறும்புக்கு கூட இவர் துன்பம் தந்ததில்லை' என சர்டிபிகேட் தருகிறார்கள். ஒரு பன்னாட்டு தொண்டு நிறுவனம் தந்த தொழில்நுட்ப உதவியோடு இவரது நடமாட்டத்தை கண்காணிக்க சிலர் முடிவு செய்து இவரது கழுத்தில் கண்காணிப்பு பட்டை ஒன்றை பொருத்துவதற்கு அவருக்கு தெரியாமலே தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். பாகுபலி என்பது இவரது பெயர். விநாயகமும் சின்னத்தம்பியும் போலதான் இவர் என சிலரும், 'இல்லைங்க, இவரு வேற மாதிரி. தொந்தரவில்லாத ஆளு' என சிலரும் பேசிக்கொண்டே கண்காணிப்பு