முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிழையுள்ள கவிதை

 

ஒரு மாணவன் ஒரு கவிதை எழுதி தமிழாசிரியரிடம் காண்பிக்கிறான். ஆசிரியரும் வாசித்துவிட்டு, 'இங்கு தளை தட்டுகிறது. இந்த வரியில் சந்தம் வரவேண்டுமே...' என்று இலக்கணப்பிழைகளை பட்டியலிடுகிறார். மாணவனை திருத்தி எழுதச்சொல்கிறார்.

மாணவனும் அவ்வாறே திருத்தி எழுதி, படித்துப்பார்க்கிறான். இலக்கண சுத்தமாக சொற்கள் நிற்க, அவன் கவிதை மட்டும் தொலைந்து போயிருந்ததாம்!


பல வருடங்கள் முன்பு கவிஞர் மகுடேசுவரனின் இந்த கவிதையை கணையாழி இதழில் வாசித்தேன். அதன் சாரமே இது.


Perfect, Perfection என்கிற சொற்களுக்கு தமிழ்ச்சொற்கள் இல்லை தெரியுமா? 

முழுமையான என்கிற சொல்கூட complete என்கிற பொருளைத்தான் குறிக்கும்.

Flawless - குறையற்ற என்கிற சொல்லும் பொருந்தாது. A flawless fruit (shape, size, color, texture) may not be a perfect fruit:(taste, digestion etc...)!

மரங்களில் கூட perfect tree என எதுவுமே கிடையாதாம். சுற்றுச்சூழலின் பல்லாயிரக்கணக்கான மாற்றங்களால் ஒவ்வொரு நொடியும் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மரங்களில் எது perfect shape (symmetry may be an eye pleaser but nothing to do with perfection)?

மனிதர்கள், நமக்கு மட்டும் ஏன் இந்த Quest for Perfection?


பிழைகள் முற்றிலுமாக இல்லாத மனிதர்களை உருவாக்குவதுதான் சமுதாயத்தின், சட்ட திட்டங்களின், வாழ்வியலின் கடமையா?

எனில், ஏன் நாம் நம் குடும்பம், உற்றம், சுற்றம் என எல்லா இடங்களிலும் குறையற்ற மனிதர்களை மட்டுமே காண விரும்புகிறோம்? நெருங்கிய உறவென்றால் ஏன் கடிதோச்சி கடுமையாக எறிகின்றோம்?

காயம் பல பட்டு தம் தம் வாழ்வெனும் கவிதையை அவர்களும் இலக்கண சுத்தமாய் சீர் செய்ய முயன்று, தோற்று / வென்று... கவிதையை தொலைத்து நிற்பது எந்த ஆசிரியரை மகிழ்விக்க?

அவ்வாறு திருத்த முயலும் மனிதர்களுக்கு ஆசிரியப்பதவி தந்தது யார்? எந்த தகுதியின் அடிப்படையில்? 


பிழையுள்ள கவிதையாகவே வாழ்வு இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நமது மனித உடலில் கூட மரபுப்பிழையாக appendicitis எனப்படும் குடற்பகுதியும், Tailbone என சொல்லப்படுகிற நம் முதுகுத்தண்டுவடத்தின் அடிப்புள்ளி போன்றவையும் இன்னும் சிலவும் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. "I want a perfect body" என்பவர்கள் யாரும் இந்த தேவையற்ற பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதில்லையே?


மனிதனென்பன் காணும்/தேடும் perfection என்பது கடவுளின் ரூபம் என்று கொண்டாலும், அவன் கடவுளாக மாற, பிழைகளை நீக்கி வாழ்வதுதான் வழியா?


கண்ணதாசனின் பாடலொன்று:


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..


வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

தெய்வமாகலாம்..


ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்


யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்

மனம்! மனம்! அது கோவிலாகலாம்..


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..


மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்


துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்

குணம்! குணம்! அது கோவிலாகலாம்...


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

தெய்வமாகலாம்..



பிழைகளை நீக்கினால் தெய்வமாகலாம் என்று ஏனோ அவருக்கும் எழுதத்தோன்றவில்லை!


இது அவரது பாடலில் பிழையல்லவா?!


முதலில் கவிதையை ரசிப்போம், பின்னர் பிழைகளையும் :-)


PC: visitvatican website

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...