ட்ராஃபிக் ஜாம்.
அனுமன் வால் போல வாகனங்கள் இருபுறமும்.
மையத்தில் ஏதோவொரு 'கடக்க இயலாத' நிகழ்வினால் தேக்கம் என உணர்ந்தேன்.
ஏற்கனவே புது சாலை அமைப்பதற்காக பழையதை கொத்திப்போட்டு, பயன்படுத்தக்கூடிய அகலமும் குறைவான சாலை.
நிமிடங்கள் மெல்ல கரைய...வண்டிகள் எதுவும் நகர்வதாயில்லை.
மட்டமதியான வெயில் மூட்டிய சினத்தில் காடெரிக்கும் உத்வேகத்தோடு வாகனத்தை நிறுத்தி இறங்கினேன், மையத்தை நோக்கி நகர்ந்தேன்.
ஒரு இளம் வயது பெண். இடுப்பில் ஒரு குழந்தை. உடைகளில் ஏழ்மை. சாலையின் ஒரு பகுதியில் நடந்துகொண்டிருக்கிறாள். அவள் பின்னால் அவளது வயதை ஒத்த ஒரு ஆண், அவளை தடுத்து நிறுத்தும் முயற்சியின் தொடர் தோல்வியில் துவளாது மறுபடி மறுபடி முயல்கிறான்.
மொத்த கூட்டமும் (நம்ம ஊரில் கூட்டம் கூடுவதை கேக்கணுமா என்ன?!) உறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த வாகன ஓட்டிகள் யாரும் ஹார்ன் கூட அடிக்கவில்லை.
நான்கு சுவர்களுக்குள் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு, பொது வெளியில்.
அந்நியர் நுழைய முடியாத உறவென்பதாலோ, அவர்களுக்கிடையில் நிழையக்கூடிய சமாதான உறவுகள் இல்லாததாலோ, நடுத்தெருவில் துயரம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களிலேயே நியாயத்தராசின் தட்டுகள் காண்பவர் மனங்களில் சீர்தூக்கி நின்றன.
அவன் ஏதோ பெருந்தவறு செய்திருக்கிறான். அவள் கொந்தளித்து வெளியேறி இருக்கிறாள் அந்த சாலையின் விளிம்பில் இருந்த தன் புறாக்கூடு வீட்டிலிருந்து.
சமாதானம் பேச, அவளை தடுத்து நிறுத்த இயலாமல் அவளை பின் தொடர்ந்து கையை பிடித்து இழுத்து கூட்டுக்கு அழைத்துச்செல்ர அவன் மறுபடி முயல, கைகளை உதறி சில அடிகள் இடுப்புக்குழந்தையோடு விரைந்து முன்னேறியவள், சட்டென குனிந்து தரையிலிருந்த பெருங்கற்களில் சிறிதான ஒன்றை பொறுக்கி எடுத்து வலிவு கூட்டி எறிந்தாள் அவன் மீது.
அதில் நிறைந்திருந்தது அவளது வாழ்நாள் வலியும் அவன் மீதான கரிசனமும்.
அடி பட்டு லேசாய் ரத்தம் சிந்தச்சிந்த அவன் உறைந்து நிற்க, சோகச்சித்திரமாய் அவள் தன் தோள் குழந்தையோடு அங்கிருந்து அழுதவண்ணம் நடந்து மறைந்தாள் மெல்ல.
அதன் பின்னான சில நொடிகள் கனத்த அமைதி. பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாய் நகரத்தொடங்கின அவளது வலியை சுமந்தபடி.
அன்றைய பொழுதில் பல இணைகள் தம் வீடுகளில் இந்த வலியைப்பற்றி நிச்சயமாய் நெகிழ்ந்து பேசியிருப்பார்கள். சிலர் தம் குணங்களில் நல் மாற்றம் செய்ய முடிவும் செய்திருப்பார்கள்...
இன்றும் அந்த சாலையில் நான் பயணிக்கையில், சிறு கல்லொன்று காற்றில் பறக்கையில் எழும் ஒலி என் காதுகளில்...
பேரன்புடன்,
பாபுஜி
Best Slots Casinos For 2021 | DRMCD
பதிலளிநீக்குThe best Slots 여수 출장샵 casinos are: Casino 울산광역 출장샵 of the Week. Play casino 천안 출장마사지 games for real 성남 출장안마 money or for free with no 안산 출장안마 deposit needed. Learn everything you need to know here.