முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மரங்கள் பேசுமா?

  மரமே மௌனமா? மரங்கள் பேசுமா? பல வருடங்கள் முன்பு ஒரு BBC Channel programme இல் விலங்குகள் நம்மோடு உரையாடும் மொழி பற்றி விவரித்தார்கள். ஒரு குதிரை லாயத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் குதிரையின் அருகில் புதியவர் ஒருவர் செல்கிறார். குதிரை உடனே விலகி நகர்கிறது. மீண்டும் அவர் அதே செயலை செய்ய, குதிரை மறுபடியும் விலகி நகர்கிறது. மூன்றாவது முறையும் அப்படியே. தன் செயலை அத்துடன் நிறுத்திய அந்த மனிதர், சற்றே விலகி நிற்க... குதிரை தானாகவே அவரை மெல்ல நெருங்கி அவரை முகர்ந்து பார்க்கிறது! இப்பொழுது இவர் நம்மைப்பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்; 'எங்களது உரையாடல் மொழி உங்கள் காதில் விழவில்லை அல்லவா? ஆனாலும் நாங்கள் உரையாடினோம்தானே?!' மனிதர்கள் தங்களுக்குள்ளே உரையாடுவதற்கு வேண்டுமானால் மொழி தேவையாக இருக்கலாம், ஏனைய உயிர்களோடு அவர்கள் உரையாட மொழி தேவையில்லை. எங்கள் வீட்டின் பின்புறம் மூன்று ஆண்டுகள் முன்பு நான் ஊன்றிய விதையிலிருந்து ஒரு பப்பாளி மரம் முளைத்தது. ஒரு ஆண்டுக்குள் நல்ல வளர்த்தி. காய்க்கவும் தொடங்கியது. ஒரு புள்ளியில் அந்த மரம் என் பச்சை பசுமை ஒளிப்படங்களின் இன்றியமையாத வண்ணமுமாகிப்போனத

மயிலாண்!

  எங்கள் வீட்டின் கொல்லைப்புற மதில் சுவர் எங்களுடையது இல்லை. இப்படித்தான் அதில் தினமும் வந்து தங்கும் மயிலாண் (ஆண் மயில்) சொல்லித்திரிகிறான், சில வருடங்களாய். வெகு சிநேகமாய் எங்களை அவன் உலகோடு பிணைத்துக்கொண்டவன். புதிதாய் யாராவது வந்தால் மட்டுமே தாவிப்பறந்து மறைவான். மற்றபடி அவன் நிம்மதியாக இளைப்பாறும் இடம் அது. லியோவுக்கும் போக்கோவுக்கும் (நான்கு கால் குழந்தைகள்) மதில் சுவர் மேல் அமர்ந்திருக்கும் மயிலாணோடு விளையாடுவது மிகப்பிடித்த பொழுதுபோக்கு. எங்களுக்கும்தான். லியோ இங்கு வரும் முன்னே அந்த மதில் மயிலாணோடது ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை லியோ மயிலாணின் இறகு பிடிக்க முயல, மயிலாண் லியோவின் முன் நெற்றியில் மெலிதாய் தன் மூக்கினால் கொத்தி.. அந்த இடம் சொட்டையாகி லியோ சொட்டையுடனே சில வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில். சில தினங்கள் முன்பு வீட்டருகில் எங்கெங்கோ மயில்களின் அகவல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. லியோவும் போக்கோவும்கூட இயல்புநிலையிலிருந்து விலகி அங்குமிங்கும் அலைவதை கண்டோம். ஆனால் வேலைகள் நிறைந்த நாளென்பதால் மறந்துபோனோம். மாலையில் எங்கள் நகரின் தகவல் பகிரும் குழுவில் (W

நீ இரு, நான் போகிறேன்.

"நீ இரு, நான் போகிறேன்". "You stay, I go" was my last words. "Ishi என்பது உனது பெயர்" என்றார் அந்த யாங்க்கீ (வெள்ளைக்காரர்). மௌனமாய் தலையசைத்தேன். பெயரில் என்ன இருக்கு? இதை இவருக்கு நான் எப்படி புரிய வைப்பேன்? என்னைச்சுற்றி எல்லோரும் யாங்க்கிகள். என் நிறத்தை ஒத்த, என் உருவத்தை ஒட்டிய யாரையும் நான் நெடுநாட்களாக கண்டதில்லை. கானகங்களின் பாதுகாப்பில் நான் வாழ்ந்த காலங்கள் மீண்டும் வருமா? அன்றொரு நாள், என் எஞ்சிய உறவுகள் மூவருடன் நான் அமைதியாய் உணவருந்த அமர்ந்திருந்தபோது திடீரென எங்களை யாங்க்கிகள் பலர் சுற்றி வளைக்க, நாங்கள் விலகி ஓடினோம், உடல் நலம் குன்றியிருந்த எம் மக்கள் ஒருவரை வேறு வழியின்றி விட்டு விட்டு. ஆளுக்கொரு திசையாய் பிரிந்து இருளிலும் உறை பனியிலும் அடர்காடுகளில் திரிந்து உயிர் வளர்த்தோம் அதன் பின்னர். இதோ இன்று காலையில் உணவு தேடி நான் இந்த கானக எல்லை வீட்டின் குதிரை லாயம் அருகே ஒளிந்திருந்தேன் ஏதேனும் உணவு கிடைக்கும் என. பிடிபட்டேன். தவறு என்ன செய்தேன் நான்?  தெரியவில்லை. தவறு என்ன செய்தோம் நாங்கள்? பல நூறு ஆண்டுகளாய் எங்கள் மண்ணின் மடியில், மடிக்க

பாகுபலி 3.0

ஆஜானுபாகுவான ஆள். பரம சாது. இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே பகுதியில் வசிக்கிறார். வேலை எதுவும் இல்லை அவருக்கு. வேலை தருவதற்கு யாரும் தயாரில்லை. பசித்தால் காலாற நடந்து, கிடைத்ததை உண்டு வாழ்கிறார். அடுத்த நாளுக்கு, அடுத்த வாரத்துக்கு என சேமிக்கும் பழக்கமெல்லாம் இவரது பரம்பரைக்கே கிடையாது. இவரது போக்கு சரியில்லை என ஒரு சாரார் இவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளார்கள். 'பைசா எதுவும் தராமலே சாப்பிட்டுவிட்டு செல்கிறார்' என்பது இவர் மீது சுற்றியுள்ள மக்கள் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு. அவர்களும்கூட 'மற்றபடி ஈ, எறும்புக்கு கூட இவர் துன்பம் தந்ததில்லை' என சர்டிபிகேட் தருகிறார்கள். ஒரு பன்னாட்டு தொண்டு நிறுவனம் தந்த தொழில்நுட்ப உதவியோடு இவரது நடமாட்டத்தை கண்காணிக்க சிலர் முடிவு செய்து இவரது கழுத்தில் கண்காணிப்பு பட்டை ஒன்றை பொருத்துவதற்கு அவருக்கு தெரியாமலே தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். பாகுபலி என்பது இவரது பெயர். விநாயகமும் சின்னத்தம்பியும் போலதான் இவர் என சிலரும், 'இல்லைங்க, இவரு வேற மாதிரி. தொந்தரவில்லாத ஆளு' என சிலரும் பேசிக்கொண்டே கண்காணிப்பு

என் பெயர் சுதந்திரம்

என் பெயர் சுதந்திரம். வயது - 50 இருக்கலாம். பிறந்த வருடம், தேதி... நினைவில்லை. எனக்கு வீடு இல்லை, உறவு இல்லை. தொழில் : இன்றைய தேதியில் இந்த நாட்டில் உன்னதமான தொழில். குப்பை பொறுக்குவது. கண்ட இடமெல்லாம் குப்பை கொட்ட கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் எனக்கு குப்பைக்கு பஞ்சமில்லை. அதிகாலை கொசுக்கடியில் / குளிரில் / புழுக்கத்தில் எழுந்து, சாலை ஓரங்களில் 'ஒதுங்கி'... எழுந்து தோளில் ஒரு பெரிய கித்தான் சாக்கோடு எனது பயணம் தொடங்கும், வயிறு வளர்க்க. சாலை ஓரங்களெங்கும் குப்பைகள் குவிந்து என்னை வரவேற்கும். பொறுமையாய் ஒரு குச்சி வைத்து அவற்றை கிளறி ப்ளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள், உலோக கழிவுகள், மரத்துண்டுகள், அபூர்வமாய் கிடைக்கும் சில விலை உயர்ந்த பொருட்கள் என நிதானமாய் தேடி எடுத்து எனது சாக்கில் நிரப்பிக்கொள்வேன். இதுவரை நான் குடிக்க தண்ணீர் பாட்டில் சுமப்இதனால்லை. உணவுக்கு என்றோ டீ காஃபிக்கென்றோ, நொறுக்குத்தீனிக்கென்றோ வேலையில் இடைவேளை எடுத்ததில்லை. இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என பருவநிலை மாற்றங்களின் ஊடாக நான் பொறுக்கியவற்றை சேர்த்து சேர்த்து ஒவ்வொரு முறை சாக்கு நிரம்பும்

உச்ச கர்ம யோகா!

ஜெய்கணேஷ் நாசர் ராமராஜன் முரளி பாண்டியன் பாக்யராஜ் பாண்டியராஜன் மோகன் பாரதிராஜா(!) ராஜசேகர் சந்திரசேகர் தேங்காய் சீனிவாசன்! என்னதான் நாம் நம் தொழிலை நேசித்தாலும் நம் விருப்பு வெறுப்புகள் நம்மையறியாமலேயே நம் செயலில் வெளிப்படும், என்னதான் 'ஞான் ப்ரோஃபஷனலாக்கும்!' என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டாலும். சில மனிதர்களோடு சில நிமிட உரையாடல்கூட சில நேரங்களில் "கடக்க இயலாத காலவெளி" போல மாறி நம்மை சோர்வடையச்செய்யலாம்.  வாழ்நாளின் பெரும்பகுதி, இப்படியான "உரையாடல்களுடனே" விழித்திருக்கும் நொடியெலாம் பயணிக்கும் ஒருவர் எத்தனை காலம்தான் இந்த சூழலில் செயல்பட இயலும், அதுவும் தன் க்ரியேடிவிடியை சற்றும் குறைத்துக்கொள்ளாமல்? நம் ஊரில் ஒருவர் இருக்கிறார்! பல மாதங்கள் பலர்கூடி தேர் இழுத்து ஒரு திரைப்படம் உருவாகிறது.  அனுபவம் மிக்க இயக்குநர்கள், கற்றுக்குட்டி இயக்குநர்கள் என யார் இயக்கினாலும், அப்படம் ஒரு முழு வடிவம் பெறுவது இசை அதனோடு சேர்ந்தபின்புதான். இப்படி, இசை சேர்வதற்கு முன்னால் ஒளி வடிவில் அறைகுறையாய் நிற்கும் படத்தை, ஒவ்வொரு படத்தையும், ஒரு முறை இரு முறை அல்ல, மூன்று முறை ப

நீங்க என்ன சாதி?

  நீங்க என்ன சாதி? சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா. நீங்க எந்த சாதி? நான் என் இளமையை நிறைத்த காலங்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மட்டுமே. அங்கு எல்லாம் சாதி முஷ்டி முறுக்கல்கள் நான் பார்த்ததில்லை, ஒரு முறை கூட.  எப்போதாவது செய்தித்தாள்களில் பதியப்பட்ட 'முதுகுளத்தூர் துப்பாக்கி சூடு' போன்ற சம்பவங்கள் இன்றுவரை நினைவில் இருப்பது இதனால்தான் (i.e. exception events) கல்லூரி கல்விக்காக பெருநகருக்கு வந்து அதன் பின் இன்னும் பெரிய நகரில் வேலைக்கு வந்து... வணிக ஓட்டம் பிடரியை உந்தித்தள்ள, ஓடத்தொடங்கும்போதும்கூட ஜாதி பற்றிய உரையாடல்கள் மேம்போக்காகத்தான் இருந்தன.  ஒரு சராசரி மனிதனாக என் வாழ்வில் முதன்முதலாக பார்ப்பனீயம் is Bad என mainstream பேசுபொருள் கேட்டது 1990களி்ல்தான். சக்கிலியனெல்லாம் இன்னைக்கு ஆட்டம் போடுறான் என்ற mainstream முணகல்கள்  தெற்கில் எழுந்ததும் இதன் பிற்பாடுதான். அந்த காலகட்டம்வரை, 'முன்னர் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் விலை' என்பதாகவே சலுகைகள் அணுகப்பட்டன. பார்ப்பண துவேஷமென அரசியல் திராவிடம் வளர்த்தபோதும் அவர்