முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்ச கர்ம யோகா!



ஜெய்கணேஷ்


நாசர்


ராமராஜன்


முரளி


பாண்டியன்


பாக்யராஜ்


பாண்டியராஜன்


மோகன்


பாரதிராஜா(!)


ராஜசேகர்


சந்திரசேகர்


தேங்காய் சீனிவாசன்!



என்னதான் நாம் நம் தொழிலை நேசித்தாலும் நம் விருப்பு வெறுப்புகள் நம்மையறியாமலேயே நம் செயலில் வெளிப்படும், என்னதான் 'ஞான் ப்ரோஃபஷனலாக்கும்!' என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டாலும்.


சில மனிதர்களோடு சில நிமிட உரையாடல்கூட சில நேரங்களில் "கடக்க இயலாத காலவெளி" போல மாறி நம்மை சோர்வடையச்செய்யலாம். 


வாழ்நாளின் பெரும்பகுதி, இப்படியான "உரையாடல்களுடனே" விழித்திருக்கும் நொடியெலாம் பயணிக்கும் ஒருவர் எத்தனை காலம்தான் இந்த சூழலில் செயல்பட இயலும், அதுவும் தன் க்ரியேடிவிடியை சற்றும் குறைத்துக்கொள்ளாமல்?


நம் ஊரில் ஒருவர் இருக்கிறார்!


பல மாதங்கள் பலர்கூடி தேர் இழுத்து ஒரு திரைப்படம் உருவாகிறது. 


அனுபவம் மிக்க இயக்குநர்கள், கற்றுக்குட்டி இயக்குநர்கள் என யார் இயக்கினாலும், அப்படம் ஒரு முழு வடிவம் பெறுவது இசை அதனோடு சேர்ந்தபின்புதான்.


இப்படி, இசை சேர்வதற்கு முன்னால் ஒளி வடிவில் அறைகுறையாய் நிற்கும் படத்தை, ஒவ்வொரு படத்தையும், ஒரு முறை இரு முறை அல்ல, மூன்று முறை பார்த்து அதற்கு இசை சேர்ப்பது கொடுமையான பணி.


இதைவிட கொடிய பணி, பாடல்களுக்கென அமைத்துக்கொடுத்த அற்புத இசை, படமாக்கப்படும் விதம்!


எல்லாம் ஷீட் செய்து முடித்து ரெகார்டிங் ஸ்டுடியோவில் ரீல்கள் ஓடும்போது, எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் "இப்படி பண்ணீட்டீங்களேடா!" என்ற கோபம் வருவதும் இயல்புதான்.


இவருக்கு இதுவும் வருவதில்லை!


அறிமுகம் இல்லாத முகங்கள், photogenic தன்மை இல்லாத முகங்களை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க, கொண்டாட வைக்க, இதுவரை தமிழ் திரையுலகம் கையாண்ட உத்திகள் இரண்டு. 


ஒன்று - ஒரு மனிதனை மக்கள் நடிகராக, ஒரு நாயகனாக ஏற்றுக்கொள்ளும் வரை, salable stars ஐ சேர்த்து நடிக்கவைத்து சில படங்கள் செய்து அதன்பின்னர் நடிகரை தனியாகவும் நடிக்கவைத்து படங்கள் தயாரித்து அங்கீகாரம் கிடைக்கவைப்பது. இது எஸ் ஏ. சந்திரசேகர் வழி. பணம் இல்லாத பலருக்கு எட்டாத வழி.


இரண்டு - எப்பேர்ப்பட்ட முகங்களையும் ஒரே பாட்டில் அனைவருக்கும் ஆதர்ச முகமாக மாற்றும் மந்திர வழி, இவரது வழி!


சிறு பொன்மணி அசையும் அசையும் என பாரதிராஜாவையும் நாயகனாக ஏற்கவைத்த மந்திரம் இவரது இசை!


இந்த பதிவின் தொடக்கத்தில் இருக்கும் பெயர்ப்பட்டியல், இவரது இசையின் விரல்பற்றி மாயக்கம்பளம் ஏறி திரைவானில் உற்சாகமாக வலம் வந்த சாமானிய, சராசரி முகங்கள்.


இந்த பட்டியலின் கடைசிப்பெயர் உங்களில் பலருக்கு வியப்பளிக்கலாம்.


தேங்காய் சீனிவாசன்.


!


அன்பே சங்கீதா என்று ஒரு படம்.


ராஜாவும் SPB யும் இணைந்து, கேட்பவரை உயரே உயரே மந்திரக்கம்பளத்தில் தூக்கிச்செல்ல, தேங்காய் சீனிவாசன் இந்தப்பாடலை பார்ப்பவர்களை கீழே கீஈஈஈழே இறக்கி... கொத்திக்குதறியிருப்பார் விரல்களால் (விழிகளாலும்தான்) பியானோவில்!


காட்சியமைப்புக்காகவும் நடிப்புக்காகவும் நான் மறக்க விரும்பும் ஒரே இளையராஜா இசைக்கோவை இந்தப்படத்தின் பாடல்கள் மட்டுமே!


(இதே படத்தில் இடம் பெறும் இன்னொரு அருமையான பாடல் "கீதா....சங்கீதா..." - 


ஐயகோ! ஜெய்கணேஷ்க்கான பாடல் இது. இதுவும் படமாக்கப்பட்டவிதம் நம்மை "வச்சி செய்யும்"! 

.

இந்தப்பாடல்களை காட்சிகளாக பார்ப்பதற்கு முன் நான் கற்பனை செந்திருந்தவை வேறு, கண்டது வேறு.


சின்னப்புறா ஒன்று என SPB தொடங்கையில் இசை அவரது குரலோடு சேர்ந்து எனக்குள் கடத்திய அதிர்வான சோகம், கீதா... சங்கீதா.....என தொடங்கி சரணம் தரும் நாஸ்டால்ஜியா....படமாக்கிய விதத்தை பார்த்தபிறகு போயே போச், போயிந்தே, கான்!)


இதைப்பார்தபின்பு ராஜா மீதான எனது மரியாதை பல மடங்கு உயர்ந்தது.


"எப்படி சார்???? இந்தப்பாட்டுக்கள் படமாக்கப்பட்ட விதத்தைப்பார்த்தபின்பும் எப்படி சார் உங்களால் காம்ப்ரமைஸ் இல்லாத பிஜிம் கொடுக்க முடிந்தது????!, இன்னும் பல முகங்களுக்கு இசைத்துக்கொண்டே இருக்கமுடிகிறது?!"


உச்ச கர்ம யோகம், இதுதான் போல...


பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா சார்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்னை மலைக்க வைத்த அந்த பாடல்களின் காணொளி லிங்க்:

சின்னப்புறா ஒன்று


கீதா... சங்கீதா...


(Image may be copyright protected by its owner)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...