முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நீங்க என்ன சாதி?

  நீங்க என்ன சாதி? சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா. நீங்க எந்த சாதி? நான் என் இளமையை நிறைத்த காலங்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மட்டுமே. அங்கு எல்லாம் சாதி முஷ்டி முறுக்கல்கள் நான் பார்த்ததில்லை, ஒரு முறை கூட.  எப்போதாவது செய்தித்தாள்களில் பதியப்பட்ட 'முதுகுளத்தூர் துப்பாக்கி சூடு' போன்ற சம்பவங்கள் இன்றுவரை நினைவில் இருப்பது இதனால்தான் (i.e. exception events) கல்லூரி கல்விக்காக பெருநகருக்கு வந்து அதன் பின் இன்னும் பெரிய நகரில் வேலைக்கு வந்து... வணிக ஓட்டம் பிடரியை உந்தித்தள்ள, ஓடத்தொடங்கும்போதும்கூட ஜாதி பற்றிய உரையாடல்கள் மேம்போக்காகத்தான் இருந்தன.  ஒரு சராசரி மனிதனாக என் வாழ்வில் முதன்முதலாக பார்ப்பனீயம் is Bad என mainstream பேசுபொருள் கேட்டது 1990களி்ல்தான். சக்கிலியனெல்லாம் இன்னைக்கு ஆட்டம் போடுறான் என்ற mainstream முணகல்கள்  தெற்கில் எழுந்ததும் இதன் பிற்பாடுதான். அந்த காலகட்டம்வரை, 'முன்னர் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் விலை' என்பதாகவே சலுகைகள் அணுகப்பட்டன. பார்ப்பண துவேஷமென அரசியல் திராவிடம் வளர்த்தபோதும் அ...

முன்னை இட்ட தீ

அணில்குஞ்சின் வெந்து கருகும் உடல்வாசம் உச்சிக்கொழுந்து சாம்பலாகி காற்றில் அலையும் அகார்ன் மரத்தின் எஞ்சிய கார்பன் உலகின் மாசையெல்லாம் உறிஞ்சி உள்ளிழுத்து பச்சையாய் பசுமையாய் பூக்களாய் காய்களாய் கனிகளாய் குடில்களாய் மாற்றித்தந்த காட்டுப்பேராற்றல் வெந்து தணியவும் சிறு பொறியொன்று போதும். ஒரு சுள்ளி வெந்தாலும் ஓராயிரம் கோடி உயிரினங்கள் வேக்காடாகி மடிந்தாலும் பொறிக்கென்ன போச்சி? மரங்கள் தானே உரசி தானே கொள்ளிவைத்துக்'கொல்வது' பேராற்றல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவாம். பேராற்றல் தந்த வாலை அறுத்துக்கொண்டு தரையிறங்கிய வானரக்கூட்டமொன்று இந்த கானகங்களுள் பொறிகளை வகைதொகையில்லாமல் பதுக்கிவைப்பது எந்த வகை? ஆலைகள் செய்யவும் பாமாயில் செய்யவும் டிம்பர் பெருக்கவும் சாலைகள் வடிக்கவும் என இவை வைக்கும் பொறிகளெல்லாம் தன் தலையில் தானே கொள்ளி வகை; வைப்பது எங்காயினும் எரியப்போவதென்னவோ நம் நுரையீரல்தான்! ஆனால் எரியும் வழியென்னவோ எங்கோ வெகு தொலைவில்தானே என நாம் வேண்டுமானால் சொல்லி சமாளிக்கலாம். ஆசியாவில் ஒரு வண்ணத்தியின் சிறகசைப்பு சில நாட்களில் தென்னமெரிக்காவில் புயல்மழை வரவைக்குமாம். நம் மூளைத்திறன...

150!

  ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தில் அலுவலக கட்டிடம் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே வேலை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல நூறு அலுவலர்கள் புதிதாய் சேர்ந்தால் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு கட்டிடம் என அருகருகிலேயே கட்டித்தருகிறதே ஒழிய ஒரே கட்டிடத்தில் இவர்களுக்காக புதிய பல மாடிகள் என்கிற வடிவை தவிர்த்து வருகிறது. "ஏன் இப்படி?" என்ற கேள்விக்கு அதன் விடை வியப்பூட்டும் ஒன்று; "அதற்கு மேலன்னா பல பிரச்னைகள் வருகிறது; logistical, interpersonal, social, parking slot issues(!)" என அடுக்கிக்கொண்டே போகிறது. அதென்ன 150 கணக்கு? ராபின் டன்பார் (Robin Dunbar) என்கிற அறிவியலாளர் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் குழுக்களின் தேவை, மொழிகளின் தேவை என்ற வகையிலெல்லாம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தவர். .அவர் நமது விலங்குகளின் மூளையில் உள்ள நியோகார்டெக்ஸ் (neo cortex) என்கிற பகுதியின் அளவை வைத்து அவற்றின் குழு (gang) எண்ணிக்கையை தீர்மானிக்கும் வழி கண்டுபிடித்தவர் (புள்ளி விவரங்களின் துணையுடன் நிரூபித்திருக்கிறார்). மனித மூளையின் நியோ கார்டெக்ஸ் அளவை வைத்து மனிதர்க...

அருந்ததி பொறுக்கிய நட்சத்திரங்கள்

  நட்சத்திரங்கள் பொறுக்கி... நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் கனவு தேசமிது. வேறெங்குமில்லாத அளவில் இங்கு மட்டும் இத்தனை நட்சத்திரங்கள். தொலைந்து போன கனவுகளை இட்டு நிரப்ப எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. உடைந்துபோன ஆன்மாக்களை சேர்த்து ஒட்டவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது. சிறு வயது சிராய்ப்பு காயங்களுக்கு எச்சில் கவசம் அணிவித்த எங்களின் வளர் பருவ பெருங் காயங்களுக்கு நட்சத்திரங்கள்தான் கவசமாகிறது... தீராப்பெருங்காயமென வன்புணர்வு வளர்ந்தபோதும் உதிரம் துடைக்கவும் கோபம் விழுங்கவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் நிறைய தேவை. வன்புணர்வு உடலில் மட்டுமா என்ன? மனக்காயங்களுக்கும் நாங்கள் நட்சத்திரங்களைத்தான் மருந்தாக விழுங்குகிறோம். தன்னிலை மறந்து பலர் கொக்கரிக்க சிலர் தலைகவிழ்ந்து நிற்க நாங்கள் கையறு நிலையில் நிற்கையில் எங்கிருந்தோ நீண்ட கரத்திலிருந்து எங்கள் மானம் காக்க பெருகியோடிய ஆடையாறு கூட முழுக்க முழுக்க நட்சத்திரங்களால் நெய்யப்பட்டவைதான். விடாது துரத்தும் வாழ்வின் துயரங்களில் இருந்து ஒடுங்கி நாங்கள் சற்றே இளைப்பாறவும் முடங்கிக்கொள்ளவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. அரிதினும்...

கல் எறியும் குளங்கள்!

  இந்தக்குளத்தில் யாராவது கல்லெறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள் எப்பொழுதும். சலனமற்ற நீர்ப்பரப்பு எப்படி இருக்கும் என்பதையே மறந்த குளம் அவ்வப்போது தன்னுள்ளே மூழ்கி தன்னைக்கண்டடைய முயலும், யாரும் பார்க்காத பொழுதுகளில். கல்லதிர்வென்னவோ நீர்மட்டத்தளவில்தான். உள்ளிறங்கி துழாவினால் விழுந்த கல்லை கண்டெடுத்திடலாம் சற்றே எத்தனித்தால். என்ன? ஒன்றேபோல் பல கல் கிடைக்கும்...  சரியெது என்பது அப்போதைய மன நிலை சார்ந்ததாகவே இருக்கும் :-)  இதில் ஒரு விந்தையென்ன தெரியுமா? கல்லெறியும் அத்தனையும் குளங்கள்தான்! (Image courtesy: wikimedia commons)

அந்தாதுன் - Andhadhun

  கடவுளாக இருந்தாலும்கூட நம் சொல்பேச்சு கேட்கும் கடவுளை மட்டுமே நாம் விரும்புவோம். "நம்ம டிசைன் அப்படி :-) "என்று சொல்லி நகராமல் மேலே படிக்கலாம் வாங்க! வரம் தருகிறேன் என எந்த கடவுளும் வாக்குறுதி தந்ததில்லை. அவர்களை படைத்த நாம்தான் 'இன்னார் கடவுள் இந்த பலன்களை எல்லாம் தருவார், இந்த பாபங்களை எல்லாம் போக்குவார். அவருக்கு இதெல்லாம் ப்ரீதி, இதெல்லாம் ஆகாது' என பல கட்டமைப்புகளை வழித்தடுப்பான்கள் மற்றும் வழிகாட்டிகளாய் நிறுத்தி அவற்றின் ஊடே நம் வேண்டுதல்களை சுமந்து தரிசனம் செய்கிறோம். மன பாரம் குறைந்து, மன அமைதி கூடி, ஆனந்தம் கூடி என ஏதோ ஒரு வகையில் முன்னைக்கு இப்போது மேம்பட்ட உணர்வுகளோடு வெளியேறுகிறோம். சக மனிதர்களிடமும் மனிதரல்லாத உயிரினங்களிடமும் பகிறலாமே என்றால் என்ன சொல்கிறோம் தெரியுமா? 'எல்லோரும் என்னை எடைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள்! நிபந்தனையற்ற அன்போ கரிசனமோ ஆறுதலோ இவர்களிடத்தில் கிடைக்காது!' "அது சரி, மனிதர்கள் மட்டும்தானே அப்படி? மற்ற உயிரினங்களிடம்?" என விடாமல் கொக்கி போட்டு கேட்டால், அதற்கும் என்ன சொல்கிறோம் தெரியுமா? 'இந்த அவசரமான உலகில் ...

மனுஷன்டா!

  மதுக்கோப்பைகளால் கட்டப்பட்ட மாளிகை பார்த்திருக்கிறீர்களா? உச்சியில் ஒற்றைக்கோப்பை. அதன் கீழ் சில. அதன் கீழ் பல. அதன் கீழ் பலப்பல கோப்பைகளை அடுக்கி, உச்ச கோப்பையில் பளபளவென மின்னும் மதுவை ஊற்ற, அது நிரம்பி வழிந்தபின்னும் தொடர்ந்து ஊற்ற, அடுத்தடுத்த வரிசைகளின் கோப்பைகளும் நிரம்பி வழியும். இந்த வரிசையை ஒரு சம தளத்தின் மீது ஆயத்தம் செய்து துளி கூட சிந்தாமல் சிதறாமல் ஆடம்பர தளத்திற்குள் தள்ளிச்சென்று, லாபத்தில் கொழுத்த பெரு வணிக கரங்கள் ஒவ்வொரு கோப்பையாக இலாவகமாக எடுத்து துளிகூட சிந்தாமல் பருகி களிக்கும் நிகழ்வுகள் நித்தம் நடக்கிறது நம் உலகில். இவை பெரும்பாலும் வணிக வெற்றியின், பெரு லாபத்தின் கொண்டாட்டமாகவே இருக்கும். இந்த மதுக்கோப்பை மாளிகை, சம தளத்தின் மீது இல்லாமல் இரு வேறு திசைகளில் ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருக்கும் இரு தட்டுகளின் மீது இருந்தால்? இமயம் நிற்பது இரு பெருந்தகடுகளின் மேலே. இந்த பூமித்தகடுகளின் உரசலில் பிறந்த இமயம்தான் நம் உலகின் மிக இளமையான மலைத்தொடராம். மலைப்பனி உருகி உருகி உயிர் நனைக்கும் நீராகி ஆறாகி பள்ளத்தாக்குகள் சமவெளிகள் இறங்கி ஓடி கடல் மட...