கடவுளாக இருந்தாலும்கூட நம் சொல்பேச்சு கேட்கும் கடவுளை மட்டுமே நாம் விரும்புவோம்.
"நம்ம டிசைன் அப்படி :-) "என்று சொல்லி நகராமல் மேலே படிக்கலாம் வாங்க!
வரம் தருகிறேன் என எந்த கடவுளும் வாக்குறுதி தந்ததில்லை. அவர்களை படைத்த நாம்தான் 'இன்னார் கடவுள் இந்த பலன்களை எல்லாம் தருவார், இந்த பாபங்களை எல்லாம் போக்குவார். அவருக்கு இதெல்லாம் ப்ரீதி, இதெல்லாம் ஆகாது' என பல கட்டமைப்புகளை வழித்தடுப்பான்கள் மற்றும் வழிகாட்டிகளாய் நிறுத்தி அவற்றின் ஊடே நம் வேண்டுதல்களை சுமந்து தரிசனம் செய்கிறோம். மன பாரம் குறைந்து, மன அமைதி கூடி, ஆனந்தம் கூடி என ஏதோ ஒரு வகையில் முன்னைக்கு இப்போது மேம்பட்ட உணர்வுகளோடு வெளியேறுகிறோம்.
சக மனிதர்களிடமும் மனிதரல்லாத உயிரினங்களிடமும் பகிறலாமே என்றால் என்ன சொல்கிறோம் தெரியுமா?
'எல்லோரும் என்னை எடைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள்! நிபந்தனையற்ற அன்போ கரிசனமோ ஆறுதலோ இவர்களிடத்தில் கிடைக்காது!'
"அது சரி, மனிதர்கள் மட்டும்தானே அப்படி? மற்ற உயிரினங்களிடம்?" என விடாமல் கொக்கி போட்டு கேட்டால், அதற்கும் என்ன சொல்கிறோம் தெரியுமா?
'இந்த அவசரமான உலகில் எனக்கும் என் குடும்பத்திற்குமே ஒண்டிக்கொள்ள இடமும் பணமும் போதவில்லை. இதில் வளர்ப்பு வேற!'
மன பாரம் குறைக்க, மனம் விட்டு பேச விரும்பாது, என்றாவது ஒரு நாள் இம்மனிதக்கூட்டத்தின் ஒவ்வொரு தலையும் சக மனிதர்களை அறவே ஒதுக்கி, தனிமைப்பட்டு நிற்கும் காலம் ஒன்று வரும். அன்று இறை தேவைப்படும் என 'பக்குவமாய்' நம் முன்னோரும் மூத்தோரும் பொது இடங்கள் ஒதுக்கி அவற்றில் உருவாக்கி வைத்துள்ள ஏராளமான ஆன்மீக மன நல ஆறுதல் தேறுதல் நிலையங்கள் (வழிபாட்டு இடங்கள்) இருக்கும் இந்த மண்ணில் இன்று ஏன் இத்தனை அழுத்தங்கள்?
இன்று மனதளவில் வசதி அளவில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு நிற்கிறது இங்கு ஒரு மிகப்பெரிய மனிதக்கூட்டம்...
காத்திருத்தல் சுகம் எனினும் இறை பார்க்க காத்திருத்தல் நேர விரயம். ஐநூறு ரூபாய் "ஸ்பெஷல் வரிசையில்' நொடியில் தரிசனம், தரிசிக்கும் நேரம் / பூசைகளில் கலந்துகொள்ளும் நேரம் நிறைய!' என அங்கும் வணிகம் நுழைந்தபின் இந்த தலங்கள் தம் ஆதி குறிக்கோளை இழக்கத்தொடஙகின...
நமக்கிருக்கும் அவசரம் இறைக்கும் உண்டா என்ன?!
நம் ஏராளமான வேண்டுதல்களை சீர்தூக்கி பார்த்து, "இவனுக்கு இந்த வேண்டுதலை நிறைவேற்றினால் அது பலருக்கு தீமை விளைவிக்குமே! அவர்களது வேண்டுதல்களையும் நான்தானே நிறைவேற்றுவேன் என நம்புகிறார்கள்! என்ன செய்வது?!" என இறை ஆலோசிக்கும் நேரம்கூட காத்திருக்கப்பொறாத நாம் வேறொரு இறையிடம் விரைவு வரிசையில் டிக்கட் தரிசனத்துக்கு நிற்கிறோம்!
'இந்த சாமிகிட்ட வேண்டினால் உடனே கஷ்டம் தீருதாம், அந்த சாமியவிட பவரு கூடவாம்!' என்பதாகவே வீங்குகிறது நம் நம்பிக்கை, இறை ஆற்றலையும் எடை போடும் நம்பிக்கை!
இதனால்தானோ என்னவோ அன்று பல மனிதர்களுக்கு அவ்வப்போது காட்சியும் சொர்க்கமும் தந்த எந்த இறையும் இப்போதெல்லாம் மெனக்கெடுவதே இல்லை!
நம் பார்வையின் எல்லைக்குள் நீளும் ஒரு பார்வையற்ற ஏழை மனிதனின் கரங்களில் நம் இறை கையேந்தி நிற்பது நமக்குத்தெரியாதே! ஏனெனில் நாம்தான் நம் இறை நாம் கட்டித்தந்த வழிபாட்டிடங்களிலிருந்து வெளியே வருவதே இல்லை என உறுதியாக நம்புகிறோமே!!
நெடுநாட்கள் முன்பு ஒரு கோடை நாளின் வெப்ப பிசுபிசுப்பில் மின்சார ரயில் பயணத்நில் சிதறிய சோற்றுப்பருக்கைகள் போல பரவியிருந்ந மக்கள் கூட்டத்தில் ஆடும் ரயில் பெட்டியின் குலுக்கலுக்கேற்ப உடலை குலுங்க விட்டு பேலன்ஸ் செய்த வண்ணம் கருப்புக்கண்ணாடி கொண்டு பார்வையிழந்த தன் கண்களை மூடி, ஒரு கையில் வழி"காட்டும்" குச்சி மறு கையில் விற்பனைக்காக ப்ளாஸ்டிக் வண்ண மலர்களை இறுகப்பற்றிக்கொண்டு நடுத்தர வயதின் நடுக்கமற்ற குரலில் இரக்கமற்ற மனிதர்களின் செவிகளில் மோதியது அவர் பாடிய பாட்டு...
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
...
ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
...
தடுக்கி விழுந்தால்கூட இறை சிந்தனை சூழ பதறும் நாம், தடுக்கி விழாத நாட்களிலும் அவ்வளவு சுலபமாய் அவர்களது ஒரு சாண் வயிற்றை நினைத்துவிடுவோமா என்ன?!
அது ஏனோ தெரியவில்லை, நம் கடவுள் நம் பக்தியை சோதிக்க மானுட வடிவத்தில் நாம் வெறுக்கும் ஒரு ரூபத்தில் நம்மை அணுகி யாசித்தால் நாம் மறுத்து வெறுத்து தோற்றுவிடுவோம் என நமக்கு தோணுவதே இல்லை...
என்னது??அந்த பாபத்தை நீக்கவும் இன்னொரு வழிபாட்டு இடம் இருக்கிறதா?! கடவுளே!
ஏன் Andhadhun போஸ்டர்?
இந்தப்பதிவுக்கும் அந்த போஸ்டருக்கும் என்ன சம்பந்தம்?
Andhadhun என்கிற ஹிந்தி சொல்லின் பொருள்:
It is a play on the word andhadhund, which means reckless or relentless, and "a play on blind tune and trance"
A reckless trance inducing tune! Our self focused belief system thst IS!!
இறைவன் பெயரால் நடக்கும் நாடகங்களில் மனம் நொந்த சக மனிதன் நான். கருத்துகள் ஆழமாக உள்ளது. அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு