இந்தக்குளத்தில் யாராவது கல்லெறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள் எப்பொழுதும்.
சலனமற்ற நீர்ப்பரப்பு எப்படி இருக்கும் என்பதையே மறந்த குளம்
அவ்வப்போது தன்னுள்ளே மூழ்கி தன்னைக்கண்டடைய முயலும், யாரும் பார்க்காத பொழுதுகளில்.
கல்லதிர்வென்னவோ நீர்மட்டத்தளவில்தான். உள்ளிறங்கி துழாவினால் விழுந்த கல்லை கண்டெடுத்திடலாம் சற்றே எத்தனித்தால்.
என்ன? ஒன்றேபோல் பல கல் கிடைக்கும்... சரியெது என்பது அப்போதைய மன நிலை சார்ந்ததாகவே இருக்கும் :-)
இதில் ஒரு விந்தையென்ன தெரியுமா? கல்லெறியும் அத்தனையும் குளங்கள்தான்!
(Image courtesy: wikimedia commons)
கருத்துகள்
கருத்துரையிடுக