முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புள்ளிகளுக்குள் சிக்கிக்கொண்ட கோலங்கள்

  கடற்கரையோர டவுன் ஒன்றில் பத்தாம்ப்பு படிக்கையிலே ட்யூஷன் ஆசை தொற்றிக்கொள்ள, 'ஒனக்கெதுக்குடா!!!... சரி, இப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்கிற பழக்கம் வரட்டும்...' என அப்பா பெரிய மனதுடன் அனுமதிக்க, தொடங்கியது எனது மாலை நேர ஒதுக்கல்கள். 'கற்பூரம்... நீயெல்லாம் எதுக்குடா வர்ற?!' என இரண்டாம் நாளிலேயே கிருஷ்ணா மாஸ்டர் கண்டுபிடிக்க, சென்டரில் வெயிட் கூடிப்போச்சி. ஏராளமாய் கேள்வித்தாள்கள், குறிப்பாய் கணக்கு! அவ்வளவு குஷியாயிருக்கும் மார்க் வருகையில். இந்தப்பதிவு கற்பூரம் பற்றியதல்ல, கிருஷ்ணா மாஸ்டர் பற்றியது! நல்ல சிவப்பு, வெட வெட உடல், உயரம், வசீகர சிரிப்பு, சுருட்டை முடி, அழியாத கோலங்கள் ப்ரதாப் போத்தன் போல ஸ்டைலாய் சிகரெட்டு, முழங்கை வரை சுருட்டிய முழுக்கை சட்டை சகிதமாய் எப்பொழுதும் மந்தகாசம். "ஆசீர்வதிக்கப்பட்ட மனுசன்டா! எப்பப்பாரு அப்படி ஒரு சிரிப்பு!' என ஏரியா இளவட்டங்கள் பொறாமையில் வேகும். கருணாகரன் என்று ஒரு வகுப்புத்தோழன், படிப்பில் என்னோடு போட்டி, ஆனால் பாடத்தொடங்கினால் நானும் சொக்கி கேட்பேன், அப்படி குரல் வளம். கிருஷ்ணா மாஸ்டர் க்ளாசில் தொய்வு ஏற்பட்டதாக நினை...

என்ன செய்யப்போகிறோம்?!

  அரூபமாய் காற்றில் அலையும் கனவுகளின் வேர்கள் பெரும்பாலும் நம் எண்ணத்தில் உதித்தவைதான். டெஸ்லா என்றொரு விஞ்ஞானி, காற்றிலேயே மின்சாரத்தை கம்பிகளின்றி அனுப்ப கனவு கண்டார். அன்று உலகம் நகைத்தது. இன்று கேபிள் இல்லாமலே சாம்சங் மொபைல் சார்ஜ் ஆகிறது! கனவு என்பதற்கு இலக்கண இலக்கியம் கிடையாது. கொம்பு வைத்த குதிரையாகவும் இருக்கலாம், சக்கரங்களற்ற கப்பலாகவும் இருக்கலாம். லாஜிக் இருப்பது அவசியமில்லை. நம் குழந்தைகளுக்கு இன்றைய கல்விக்கூடங்களில் கனவு காண யாரும் கற்றுத்தருவதில்லை. பாடங்கள் பிடிக்காமல் மாணவர்கள் கண்ணயர்ந்தால் கனவிலும் யாராவது பாடம் நடத்துவதாகவோ அல்லது தேர்வில் ஃபெயிலாவது போலவோ தோன்றி திடுக்கிட்டு கண் விழிக்கும் மாணவர்கள்தான் அதிகம் இன்று. டேனியல் க்வின் என்கிற ஆசிரியர், நம் புதிய உலகின் கல்விக்கூடங்களை சிறைச்சாலைகள் என்கிறார். கனவு காண விடாமல், கனவிலும் நிகழாத அற்புதங்கள் நம் கண் முன்னே நம்மைச்சுற்றியுள்ள வெளியில் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்வதைக்கூட உணர விடாமல் அடைத்து வைத்து, காற்றில் புரளும் இலையில் ஒருங்கிணைந்து அரங்கேறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித நிகழ்வுகளை செயற்கையாய்...

கோல வாசல்

  நேற்று இட்ட மாக்கோலம் நேற்றோடு போகாது இன்று காலைக்காய் காத்திருக்கும் காற்று மழை எறும்புதாண்டியும். இன்று காலை புலருமுன் சொம்பு நீரை சிதறவிட்டு வாருகோலினால் வருடித்தள்ளி இன்று எந்த கோலத்தை எத்தனை புள்ளியில் சிறைவைக்கலாம் என சிந்தனை செய்கையில் கண்முன்னே காத்துக்கிடந்தது  கலைந்த கோலம், நான் கலைத்த கோலம். நொடியில் துயருற்று வாருகோலை கையிலெடுத்து கவனமாய் தேடியும் கிடைக்கவில்லை கலைந்த கோலம். பொடிப்பொடியாய் ஈர்க்குச்சிக்கு ஆடையாகி சொம்பு நீரின் எஞ்சிய துளிகளை தன் கடைநுனியில் கோர்த்து... ஒவ்வொரு துளியிலும் நேற்றைய கோலம். கோலம் தொட்டுத்துடைத்த வாருகோலிலும் தொங்கிநிற்கும் கோலம், தரையில் இழையவிட்ட விரல்களிலும் இயக்கிய சிந்தையிலும் மகிழ்ந்த மனதிலும் வழிந்துகொண்டுதானே இருக்கும் இந்த சிந்தனை நொடியிலும்... இனியென்ன கோலமிட? இன்றைய கோலம் இதுவாகவே இருக்கட்டும். வரும் நாட்களிலும் இதுவே. எறும்பு தின்னுமோ மழை பேய்ந்தழிக்குமோ காற்று துடைக்குமோ நானறியேன். அப்படியொரு நிகழ்வின் பின் வெற்றிடமாகிப்போகும் வாசல்போல என் விரலிடுக்கும் கோலமாவின் பிசுபிசுப்பு காய்ந்து உலர்ந்து உதிர்ந்துபோனபின்பு சிந்திக்கல...

பெரிதினும் பெரிது கேள்!

  சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;  சவுரி யங்கள் பலபல செய்வராம்;  மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;  மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;  காத்து மானிடர் செய்கை யனைத்தையும்  கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;  ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;  அதாவது.மானம். பிழைத்திருந்தால். பாரதி கண்ட புதுமைப்பெண் - அவர் கனவு கண்ட பாரதத்தில் மட்டுமே... பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என தரிசு நிலங்களையும் கோயில் போன்று போற்றப்படும் இடங்களாக மாற்றவேண்டும் என அவன் எழுதிச்சென்றதை, 'பள்ளிகளை கோயிலாக்குவோம்' என தவறான புரிதலோடு வாழும் நம் நாட்டில் பெண் தெய்வங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து வன்முறையின் இலக்குகளாக மாறிப்போயினர்? கல்விக்கூடங்களில், தரிசு நிலங்களில், இறை கூடங்களில், சொந்த வீட்டில், நம்பி நுழையும் வீட்டிலும்... இந்த கண்ணம்மாக்களின் ஆன்மாக்கள் சிதைந்து அலைய சபித்தது எந்நக்கடவுளாக இருந்தாலும் அவர் நற்கடவுள் அல்ல, நம் கடவுளும் ஆகார். இந்தக்கொடுங்குற்றம் செய்தவர்க்கு மதச்சாயங்கள் பூசி வன்மம் வளர்ப்பதை உடனடியாக நிறுத்தி, Ministry of Crimes Against Women and Chil...

இடையில ஏதுமில்லே, நம்பு நட்பே!

  குட்மார்னிங் நட்பே பூம்பூம் மாடு புல்லட்டில் போகுது குரங்கு வெளுக்குது நம்ம துணிகள கங்காருவுடன் குத்துச்சண்டை நாயை காப்பாத்த பாம்பு பிடிக்கறாரே தைரியமா பாருங்க ரோட்டில நடந்தது யாருங்க பேயா வானத்தில பாருங்க ஏலியன் விமானம் கோயில் விமானத்தில் ஏலியன் உருவங்கள் கர்டாஷியான் பின்புறம் பெரிதானது எப்படி எல்லையில சீனாகாரன் பண்ணறத பாருங்க ... இதென்ன கொடுமை எல்லாரும் போராடுவோம் என் தப்பை  நீ பேசாதே அவன் செய்த தப்பை மாத்து என்னோடு இல்லாதவர் நாட்டு விரோதிகள் ... பூம்பூம் மாடு புல்லட்டில் போகுது குரங்கு வெளுக்குது நம்ம துணிகள கங்காருவுடன் குத்துச்சண்டை நாயை காப்பாத்த பாம்பு பிடிக்கறாரே தைரியமா பாருங்க ... குட்நைட் நட்பே! குட்மார்னிங் நட்பே குட்நைட் நட்பே இடையில ஏதுமில்லே நம்பு நட்பே! நமக்கு வேண்டியதை இணையத்தில் தேடிய காலம் போய் இன்று நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே நாமும், நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே பெரு வணிகமும், "இதுவா?" "இதுவா?" என கண்முன்னே 24*7 கடை விரிக்க, மண்டை குழம்பிப்போய் கோழி கூவும் விடியலில் துயில்பவரே இங்கு இன்று அதிகம். Wall E என்ற அனிமேஷன் திரைப்படத்தில் ஒரு ...

மாரீசா!!!

மாயமானும் சீதா ராமனும்!! கானகத்தில் ராமன் சீதையுடன் வசிக்கிறான். மொபைல் போன் கம்பெனிக்காரர்கள் மெல்ல மெல்ல கானகவாசிகளை பெருநுகர்வு ஆசை காட்டி காட்டினுள்ளும் வணிகம் வளர்த்த காலம் அது. ஏற்கனவே மனிதர்கள் குறைவாக இருந்த நம் கானகங்களில் மெல்ல மெல்ல வணிக மனிதர்கள் நடமாட்டம் அதிகரித்தது. அவர்கள் வந்து திரும்பும்போதெல்லாம் கானகவாசிகளும் அவர்களோடு நகர்நோக்கி புலம் பெயரத்தொடங்கினர். ராமனும் சீதையும் லக்‌ஷ்மணனின் பாதுகாப்பு ரேகைக்குள் வாழ்ந்த இடம் அடர்வனம்.  அவ்வப்போது அவர்களுக்கு தேவையான விளைபொருட்களை கொணர்ந்து தரும் வனவாசிகளை வணிகம் தொட்டதும் அவர்களை பின்தொடர்ந்து வணிகம் அங்கும் நுழைந்தது. அவ்வளவு தூரம் பயணித்த வணிகத்தினால் லக்ஷ்மண ரேகையை தாண்டி அந்த வீட்டின் நிழலைக்கூட தொடமுடியவில்லை... காத்திருந்த வணிகத்தை அவ்வப்போது ராமனோ லக்‌ஷ்மணனோ கடந்து போகையில் அவர்களது சூக்‌ஷ்ம உடல் உண்டாக்கிய இனம் தெரியாத உணர்வால் அச்சம் கொண்டு வணிகம் அவர்கள் கண்களில் படாமல் ஒளிந்து, காத்திருந்தது. சீதையோ வீடு விட்டு வெளியே வருவதே இல்லை... வணிகம் ஒரு யுத்தி செய்தது... கானகத்துள் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றை நிறுவியத...

குளிர் இரவின் வெம்மை...

நினைவுக்குமிழ்கள்... நிஜ நீர்க்குமிழ்கள் போலவே... அடிமட்டத்திலிருந்து எப்போதாவது குபுக்கென மேலெழுந்து எங்காவது வெளிப்படும். அதுவாய் மெல்லக்கரைந்து உடையும், இன்னொன்று முளைக்கும்... இந்த இரவில் சற்று நேரம் முன் பாலு ஒரு இசை மேடையில் ஓ ப்ரியா ப்ரியா மீ ப்ரியா ப்ரியா  என தெலுங்கில் உருக, பாடகி ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா எனத்தொடர, இருமொழிப்பாடல்... இசையின் மென்சிறகுகளை இறுகப்பற்றி, பாடல் முடிந்தபின்னும் இறங்க மனமின்றி மனம் தளும்ப, அந்த தளும்பளில் இருந்து உருளத்தொடங்கின என் குமிழ்கள் ஒவ்வொன்றாய்... குன்னூரில் நாயகனின் குளிர் வீட்டுக்கதவு திறக்கையில் கீழ் இடைவெளியில் கசிந்து உள் பரவும் பனி... ஓ பாப்பா லாலி என காதலியை தொடையில் தாங்கி தாலாட்டுப்பாடும் மனோ... மலை மார்க்கெட்டில் கையில் கேரட் கொத்தோடு பாட்டியின் பார்வையிலிருந்து நழுவியோடும் நாயகி... இறுதியாண்டு மருத்துவ மாணவியின் முகத்தில் பொட்டு வைத்த வட்ட நிலவாய் அரையிருளில் ஓடும் காதல் கலந்த ரசனை... நரைமுடியில் கோர்த்த மணிகளை பெருங்காதலோடு தடவும் வாத்துக்காரியின் விரல்கள்... நிலவொளியில் கடற்கரையில் கிளிஞ்சல்களில் உலையரிசி... வயல்வெளி...