முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டமார செவிடு

  தீபாவளி பட்டாசு. அணு குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டிருக்கிறீர்களா? காது கிழியும் அளவு சத்தமும், அதே அளவு உடல் அதிர்வும் தரக்கூடிய ஒற்றை வெடி அது. "சைனாலேந்துதான் வாங்கணுமா?! இந்தியன்டா! புறக்கணிப்போம்டா!!  பட்டாச இல்லடா, சைனா பட்டாச மட்டும்தாண்டா!!!' சிவகாசி தொடங்கி ஆந்திரா, தெலங்கானா தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பட்டாசு தொழிற்சாலைகள் பல, குடிசைத்தொழிலாக இயங்கி வருகின்றன. தினக்கூலிக்காக, அருகிலுள்ள கிராமங்களில் வேலை வாய்ப்பு இன்றி / உடல் உழைப்பு தர இயலாத / நலிந்த... பெண்கள், முதியோர்கள், சிறார்கள் என சரவெடி முதல் மத்தாப்பு வரை செய்து தர ஆட்கள் ஏராளம். அது என்ன சாபமோ தெரியவில்லை. இவர்களில் பலரது வீடுகளில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை... கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை பட்டாசு ஃபேக்டரி தீ விபத்துகள்? உயிர் போய், கை போய், கண் போய் என இழப்புகள்? புள்ளி விபரம் எதுவும் இன்றுவரை பொது தளங்களில் இல்லை. "யானைகள் நடக்கையில் சிற்றெறும்புகள் மிதிபட்டு சாவது இயற்கை நியதிதானே?" என்பது பாழ்பட்ட பட்டறிவு... கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. யானை (அதன் தடத்தில்) மிதித்து எறும்பும் சாவத...

ஒரு வல்லிய செல்ஃபி கதா!

  'பாரீஸ்ல ஈஃபில் டவர் முன்னாடி புலன் மங்கும் மாலையில், சைன் நதிக்கரையில், ஒளிரும் வண்ண விளக்குகளுடன் மெல்ல நகரும் படகுகளின் பிண்ணனியில் நாமிருவரும் ஒருவரின் கரம் பற்றி ஒருவர் ' - ஒரு வல்லிய செல்ஃபி கதையானு! அந்த ஏரியாவுக்கு நான் குடிவந்த புதிது. நடுத்தட்டு, அடித்தட்டு, மேல்தட்டு வீடுகள் கலவையாய் சிதறியிருக்கும் ஒரு புறநகர்ப்பகுதி். இரண்டாம் நாள் அதிகாலை. நாற்பதுகளின் அருகில் ஒரு களையான பெண்மணி விடிகாலையில் ஒரு நடுத்தட்டு வீட்டு வாசல் கூட்டி கோலமிட்டுக்கொண்டிருந்தார். பாந்தமாய் புடவை, வட்ட முகம், அமைதி, மகிழ்ச்சி நிறைந்த முகம், இவ்வளவும் அதிகாலை கிளறொளியில் சித்திரமாய் மனதில் படிய, ஒரு அலுவலுக்காக வெளியில் கிளம்பினேன். இரண்டடி தாண்டியிருப்பேன்; அவரது வீட்டுக்கு எதிரில் சைட் ஸ்டாண்ட் இட்ட பைக் மீது யாரோ அமர்ந்திருப்பது கோட்டோவியமாய் தெரிந்தது. அவர் கோல மங்கையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். வயது கண்டுபிடிக்கும் அளவு வெளிச்சம் அப்பகுதியில் இல்லை. நடையை சற்றே மெதுவான தாளத்திற்கு மாற்றி, கடைக்கண்ணால் பார்த்தால்... அந்த அம்மா அவரை அவ்வப்போது ஏறெடுத்துப்பார்ப்பதும் அவர...

கலிலியோவின் காணாமல்போன கை விரல்கள்!

கலிலியோ வீட்டுச்சிறையில் இறந்தபோது அவருக்கு மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை, மதத்தின. கோபத்தை சம்பாதிக்க துணிவின்றி. ஏதோ ஒரு கல்லறையில் சாதாரணன் போல புதைக்கப்படுகிறார் இந்த மாபெரும் அறிவியலாளர். அவருடைய கண்டுபிடிப்புகளின் உண்மைத்தன்மையால் உந்தப்பட்ட சான்றோர்கள் சிலர், மெல்ல மெல்ல அவர்களது மதக்கட்டமைப்புக்குள் தம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு, ஒரு காலகட்டத்தில் மத தலைமையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று, அவரது கல்லறையை தோண்டி எலும்புகளை சேகரித்து, ஏனைய அறிவியலாளர்கள் உறங்கும் ஒரு மரியாதைக்குரிய சர்ச் கல்லறையில் அவரை அடக்கம் செய்கின்றனர். இங்குதான் நம் மனிதர்களின் சிந்திக்கும் திறனின் மறுபக்கம் வெளிப்படுகிறது! அவரது உடல் பழைய கல்லறையிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படும் வழியில் அவரது விலா எலும்புகள் சிலவும், கை விரல்கள் மூன்றும், பல் ஒன்றும் அப்புறப்படுத்தப்படுகின்றன! பல ஆண்டுகள் கழித்து சில அருங்காட்சியகங்களின் கண்ணாடிப்பேழைகளுக்குள் வந்து அமர்கின்றன! (அவரது விலா எலும்பு மட்டும் அவர் கற்பித்த பல்கலைக்கழகத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது). 'இத்தாலி போய்ருந்தப்போ...

மந்திரவாதியின் கல்லறையில் கற்பூர சத்தியம்!

  அந்த மந்திரவாதிக்கு உறக்கமே வரவில்லை. தொலை தூர கிரகங்களை எல்லாம் மந்திரக்கண்ணாடி கொண்டு காண முடிந்த அவனது ஆற்றலும் அறிவும் அவனுக்கு உணர்த்திய உண்மை அத்தகையது! உண்மைகளில் பலவகை உண்டு; பொய்யான உண்மை, பொதுவான உண்மை, சில நேரங்களில் உண்மை, எக்காலத்திலும் மாறாத உண்மை. அவன் கண்டுபிடித்த உண்மை, எக்காலத்திலும் மாறாத வகை; அன்று இருந்த பொதுவான உண்மைக்கு முற்றிலும் முரண்பட்ட உண்மை. அவனது கண்டுபிடிப்பின் ஆதாரம் தந்த உந்துதலில் அவன் தன் சிந்தனையையொத்த மனிதர்களிடமும், தேடல் மிகுந்த மனிதர்களிடமும் பகிறத்தொடங்கினான். "கடவுளோடும் கடவுளின் பிரதிநிதிகளுடனும் மோதுகின்ற இந்த அறிவிலியை இழுத்து வாருங்கள்!" என ஒரு பிரதிநிதி ஆணையிட, கூண்டிலேற்றப்படுகிறான். "கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? நமக்கு ஒவ்வாத முரண்கருத்துகளை பரப்பி மக்களை குழப்புகிறாயாமே?" 'இல்லங்கையா.... நான் கண்டறிந்ததை பகிர்கிறேன் ஐயா. அவ்வளவுதான்' "குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?" 'மாற்றுக்கருத்து வேறு முரண்கருத்து வேறு ஐயா. என்னது மாற்றுக்கருத்து மட்டுமே. முரணா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும்......

தனி மனிதனாய் வேண்டுகிறேன்...

  #CMOTamilNadu #EdappadiPalaniswami 🙏 தனி மனிதனாய் வேண்டுகிறேன்.  12 Year old poor girl raped, electrocuted to death by perpetrator. Family did dharna to force police action. Sniffer dog identified a teenage neighbour. DNA report was conclusive. Still, Mahila court acquited the accused due to insufficient evidence. Crestfallen family got support from Hairstylists Association of TN as her father is a member.  After a statewide OneDay strike by his Sangam (Association), Govt now appeals to higher court against the verdict given by Mahila court, a court run by Women :-) An Assamese girl in search of work, gangraped by prospective Job giver's brother and friends on her way back after an interview, is running around for justice in Palladam, thousands of km away from her kith and kin. These incidents still keep happening though we have enacted years of POSCO and Nirbhaya Acts... Will TamilNadu, the land of Three glorious "Sanga" periods that dates back to a time prior to mode...

ஆமை புகுந்த வீடும்...

மருதவனம் ஒரு அழகிய சிற்றூர். தஞ்சையிலிருந்து பஸ் பிடித்து மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வந்து அங்கிருந்து ஒரு நாளில் நான்கைந்து ட்ரிப்புகள் மட்டுமே செல்லும் களப்பாள் பேருந்தில் ஏறி, எழிலூர் வழியே சால்வனாறு பாலம் தாண்டி மருதவனம் கைகாட்டியில் இறங்கி, ஒதியத்தூர், சங்கந்தி செல்லும் மினி பஸ் பிடித்தால் பத்தே நிமிஷத்தில் வீட்டு வாசலில் இறங்கிக்கொள்ளலாம். சில ஆயிரம் குடியிருப்புகள், ஒரு பழைய சிவன் கோவில், அம்மன் கோவில், பெரியாச்சி கோவில், சில குளங்கள், காவேரிப்பாசன வாய்க்காலை ஒட்டியோடும் குறுகலான சாலைகள், காலத்தைப்பூசிக்கொண்டு நிற்கும் வீடுகள், ஒரு தொடக்கப்பள்ளி, நூலகம், நெல் கொள்முதல் நிலையம், போஸ்ட் ஆபீசு, ஓரிரண்டு பெட்டிக்கடைகள், புதிதாய் ஒரு உயர்நிலைப்பள்ளி, இவை தவிர நெல் வயல்கள், கண்கொள்ளும் தொலைவு வரை. சிற்றூர்களுக்குள் ஏட்டுக்கல்விநிலையங்கள் நுழையாத காலத்தில் வீட்டெதிரே இருந்த ராமர் மடம், தன்னார்வல ஆசிரியர்களால் சொற்பமான மாணவர்கள் அ, ஆ பழகிய இடம், பழகிய தமி்ழ், இன்று புல் மண்டிய திடலாகி, புல்மேயும் பசுக்களின் வாயிலேறி காம்புவழி இறங்கி பக்தியையும் கல்வியையும் இன்றும் பரப்பிக்கொண்டிருக...

நன்றி மரம்!

மலை மரம். மா மரம். பூ மரம். அரச மரம். மலைப்பூவரச மரம். வளர வளர பெருக்கும் இதன் சுற்றளவு, வருடங்கள் ஆன பின் பலர் கூடி கட்டிப்பிடிக்க நினைத்தாலும் இயலாத ஆகிருதி கொண்ட மரம். இது நன்றி மரம்! தன் இருப்பிடத்திலேயே விதையாய் விழுந்த நாளிலிருந்து இன்று பூமியின் கீழும் மேலும் குடை வளர்த்து நிற்கும் நாள் வரையிலும், தான் மலைப்பூவரசாக மாற உதவிய அனைத்துயிர்க்கும் நன்றி சொல்லி, தன் பூ, இலை, காய், கனி, காய்ந்த சுள்ளி என இது உதிர்ப்பதெல்லாம் நன்றியன்றி வேறில்லை.  இந்த பதிவை வாசிப்பதை சற்றே நிறுத்தி, இங்கு நான் இணைத்துள்ள ஒளிநிழல் படங்களை பாருங்களேன், இந்த "மா" மரத்தின் நன்றியை உணர! ஒரு நாள் அதுவே உதிர்ந்து விழுந்தாலும் நன்றியாகவே விழும், பூமிக்கு பாரமின்றி மெள்ள மெள்ள. நன்றி நன்றி நன்றி பாலு சார். இவருக்கும் எனக்கும் என்ன உறவு? சொந்தமா பந்தமா?  எதுவுமில்லை ஆனால் ஏதோ ஒன்று. என்னதெனத்தெரியாத அந்த ஏதோ ஒன்று என்னுள் மறுகி மறுகித்தவித்தது இந்தப்பூமரம் உதிர்ந்த நாளிலிருந்து. அடுத்த சில நாட்களுள் என் வயதான, நெருங்கிய உறவினர் ஒருவரும் உதிர்ந்து போனார். இறுதியாக அவர் முகம் காண, அஞ்சலி செலுத்த, அங்கு ச...