கலிலியோ வீட்டுச்சிறையில் இறந்தபோது அவருக்கு மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை, மதத்தின. கோபத்தை சம்பாதிக்க துணிவின்றி.
ஏதோ ஒரு கல்லறையில் சாதாரணன் போல புதைக்கப்படுகிறார் இந்த மாபெரும் அறிவியலாளர்.
அவருடைய கண்டுபிடிப்புகளின் உண்மைத்தன்மையால் உந்தப்பட்ட சான்றோர்கள் சிலர், மெல்ல மெல்ல அவர்களது மதக்கட்டமைப்புக்குள் தம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு, ஒரு காலகட்டத்தில் மத தலைமையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று, அவரது கல்லறையை தோண்டி எலும்புகளை சேகரித்து, ஏனைய அறிவியலாளர்கள் உறங்கும் ஒரு மரியாதைக்குரிய சர்ச் கல்லறையில் அவரை அடக்கம் செய்கின்றனர்.
இங்குதான் நம் மனிதர்களின் சிந்திக்கும் திறனின் மறுபக்கம் வெளிப்படுகிறது!
அவரது உடல் பழைய கல்லறையிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படும் வழியில் அவரது விலா எலும்புகள் சிலவும், கை விரல்கள் மூன்றும், பல் ஒன்றும் அப்புறப்படுத்தப்படுகின்றன! பல ஆண்டுகள் கழித்து சில அருங்காட்சியகங்களின் கண்ணாடிப்பேழைகளுக்குள் வந்து அமர்கின்றன!
(அவரது விலா எலும்பு மட்டும் அவர் கற்பித்த பல்கலைக்கழகத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது).
'இத்தாலி போய்ருந்தப்போ நான் கலிலியோவ பாத்தேன் தெரியுமா?!' என இன்றும் சிலர் பெருமை பேச மட்டுமா இப்படி?
இறந்த லெனினின் உடல் பாடம் செய்யப்பட்டு இன்றும் ரஷ்யாவில் இருப்பதற்கும், புத்தரின் பல், ஒரு இஸ்லாமிய துறவியின் தலைமுடி, சிலுவையில் மரித்த இயேசுவின் முகத்தை துடைத்த துணி, ஸ்ரீரடி சாயியின் ஆடைத்துணுக்கு, காந்தியின் மூக்கு கண்ணாடி என நினைவுப்பொருட்கள் நினைவுச்சின்னங்களிலும் அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்படுவதற்கும் என்ன காரணங்கள் இருக்கமுடியும்?
பற்றற்றிரு பராபரமே என்ற நம் மண்ணிலும். பெரிதினும் பெரிது நோக்கி ஓயாத தேடலோடு ஓடும் பிற மண்ணிலும் இந்த 'clinging onto remnants of our epochal past' தழைத்திருப்பது எதனால்? எதை, யாருக்கு நினைவுபடுத்த?
தெரியவில்லை!
கருத்துகள்
கருத்துரையிடுக