முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குடையை மறந்திடாதீங்க மக்கா!

மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா? என்ற பாடலை கேட்டிராத தலைமுறை ஒன்று, இன்று போதை தரும் பொருட்களை நாடி ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஊடக பெருநுகர்வாக இருக்கட்டும், மருந்து பெருநுகர்வாக இருக்கட்டும் (substance abuse like pain killers, cough syrups), போதைப்பொருட்களாக இருக்கட்டும் (கஞ்சா, அபின், தூப்!), பாதை ஒன்றுதான் பயணமும் ஒன்றுதான், அது முடியும் புள்ளியும் ஒன்றுதான்... மொபைல் போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் தற்கொலை, செல்போன் மீது ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொலை செய்வது, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, பழக்கத்தை தொடர பணம் புரட்ட பாலியல் வன்முறை படமெடுத்து மிரட்டல், ஊடகங்களிலேயே மூழ்கிக்கிடப்பதை தட்டிக்கேட்டதால் தொங்குதல், வெட்டுதல் அல்லது வெட்டிக்கொள்ளுதல்...என முடிவற்று நீளும் துயரப்பட்டியல்... பல ஆண்டுகள் முன்பு Traffic என்கிற தரமான ஹாலிவுட் படம், அமெரிக்காவும் எஞ்சிய உலகமும் எப்படி மெக்சிக, கொலம்பிய போதை வஸ்துக்களால் சீரழிகிறது என முகத்திலடித்ததுபோல தெளிவாய் சொன்னாலும் உலக மக்களுக்கு இன்றுவரை எதுவும் உரைக்கவில்லை... கொலம்பிய போதைப்பெருச்சாளிகள் முதல் ஆப்கானிய க...

க்ளாரிந்தா, பின்னே மோனா எஸ்தலீனா, இடையில் மங்கை பாட்டி

  க்ளாரிந்தா, பின்னே மோனா எஸ்தலீனா, இடையில் மங்கை பாட்டி... இளம்பருவம் தொட்டே என் உலகு நான் வியத்தகு பெண்களை அண்ணாந்து பார்த்து வியந்தவண்ணமும், சிலாகித்த வண்ணமுமாகவே இருந்துகொண்டிருக்கிறது. இவர்களில் சிலர் பற்றிய எனது எண்ணங்களை இங்கு பகிர்கிறேன். வாருங்கள் இவர்களை சற்று நெருங்கி கவனிக்கலாம்.  1700 களில் க்ளாரிந்தா! க்ளாவரிந்தா பாய், தஞ்சை ஆண்ட மராட்டிய அரசின் பணியாளரொருவரின் மனைவி. ப்ராமணப்பெண். அவரது கணவர் திடீரென இறந்தபோது க்ளாவரிந்தாவுக்கு பதினெந்தே வயது. உடன்கட்டையேறுதல் அன்றைய மரபு.  சிதைக்கு தீ மூட்டப்பட்டு, அத்தீயில் சமுதாயம் அவரைத்தள்ள, மனம் தவித்த லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி குறுக்கிட்டு மீட்கிறார். உற்றமும் சுற்றமும் ஒதுக்குகிறது, உயிர்வாழ விருப்பம் கொண்ட குற்றத்திற்காக க்ளாவரிந்தாவை. லிட்டில்டனின் ஆதரவு, இருவர் மனதிலும் கனிந்த அன்பாகி, வாழத்தொடங்குகின்றனர். க்ளாவரிந்தாபாய், லிட்டில்டனின் க்ளாரிந்தாவாகிறார், ஞானஸ்னானம் மறுக்கப்பட்டாலும்! லிட்டில்டனுக்கு நெல்லைச்சீமைக்கு மாற்றலாகிறது. க்ளாரிந்தா சமேதராக அவர் நெல்லைக்கு குடிபெயர்கிறார்.  அங்குள்ள ஏழை மக்க...

உடைந்து விழும் உயிர்க்கண்ணிகள்

கொலீசிய திறந்தவெளி மைதானத்தில் சிங்கங்கள், சமய கைதிகள், நீரோ மன்னன், காவலர்கள், ஏராளமாய் பார்வையாளர்கள் - பெரும்பாலும் ஏழைகள். மன்னன் கையசைக்க, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கைதிகளை நோக்கி சிங்கங்களின் கூண்டுகள் திறந்துவிடப்படுகின்றன. ஓலம், ஆர்ப்பரிப்பு, உறுமல், குருதி என அன்றைய விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. இது நடந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. அங்கிருந்து நகர்ந்து நிகழ்காலத்திற்கு வருவோம். இன்று நம் (உலக மக்களின்) வாழ்வியல்கூட கொலீசிய சர்க்கஸ் போலத்தான். இந்த அரங்கில் உள்ள ஏதோ ஒன்றாகவே நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... சிங்கமாகவோ, பிணைக்கப்பட்ட கைதியாகவோ, காவலராகவோ, பார்வையாளராகவோ, மன்னராகவோ... சிதைந்துகொண்டிருக்கும் ஒரு பேரரசின் அழிவுச்சத்தங்கள், உள்ளிருப்போரின் காதுகளில் விழாமலிருக்க, கவனத்தை வேறிடத்தில் திருப்பவே கொலீசிய சர்க்கஸ். டைனோசார்கள் திடீரென ஏன் அழிந்தன என இன்று வரை ஊகம் மட்டுமே செய்யமுடிந்த நவீன அறிவியல் விளக்கொளியில் உலக வணிகம் நம்மை இட்டுச்செல்லும் நுகர்வுப்பாதையின் இருள் விளிம்பில் கூட்டம் கூட்டமாய் சாவது இன்றைய உலகின் பேருயிர்களான யானைகளாக இருந்தால் என்ன? ...

இரவல் கனவுகளும் விவசாய மசோதாக்களும்

விவசாய மசோதாக்கள் மூன்று.  ஏன் விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள்?  ஏன் அச்சப்படுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் கடந்துவந்த பாதைகள் அப்படி, பயணங்கள் அப்படி. நாம் ஏன் 'நமக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை' என இருக்கிறோம்? ஏனெனில் நாம் 'கண்டுகொண்டிருக்கும்' இரவல் கனவுகள் அப்படி. வரலாறு காணாத உணவுப்பஞ்சம் 1960களில். உணவுப்பயிர் உற்பத்தியை பெருக்க யுத்தகால நடவடிக்கைபோல அரசுகள் திட்டங்கள் தீட்டி பசுமைப்புரட்சி செய்து, சிறுதானிய உணவுசார்ந்த, அது தந்த வலிமை வாய்ந்த விவசாயிகளை பசுமைப்புரட்சியில் ஈடுபடுத்தவும், ஐம்பதே ஆண்டுகளில் நிலமும் பாழ், வளமையும் பாழ் என பசி, பிணி, மரணம் துரத்துது இவர்களை. வெண்மைப்புரட்சியும் சேர்ந்துகொள்ள, இன்று இந்திய உள்ளூர் ரக 'காளைகள்' எல்லாம் தம் திமிலை மறைத்து வேறு ஒரு பெயரில் தலைமறைவாக வாழும் நிலை. 'பால் பெருக்கி வணிகம் வளர்க்க வெளி விந்து ஊசிகள் போதும், உள்ளூர் காளைகள் வேண்டாம், நாங்கள்தான் டிராக்டரும், உரங்களும் தருகிறோமே!' என வணிக நோக்கு அரசியல். "உர மானியம், விதை மானியம், பயிர் மானியம் தருகிறோம்! வருடத்திற்கான மைய இலக்கு தருகிறோம். ...

வேர்கள் எவ்விதமோ வாழ்வு அவ்விதமே!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நோய்கள் தீர்க்க (மூலிகை) வேர்கள் உண்ட கூட்டம் நாம். சில நூறு வருட ஆங்கில மருத்துவம் தந்த வண்ணக்கரைசல்களும் களிம்புகளும் மாத்திரைகளும் நம்மை நலமுறச்செய்துகொண்டுதான் இருந்தன, ஐம்பது வருடங்கள் முன்பு வரை. மருத்துவம் பெருவணிகமாகி, உலகப்பெருவணிகமாக ஆகி, இன்று மருத்துவர்கள்கூட மாதாந்திர வணிக இலக்குகள் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காலமிது. எந்த நோய்க்கும் மருத்துவ மூலக்கூறுகளை மட்டுமே ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிப்பழகிய மருத்துவர்கள், வணிக கேரட்டுகளுக்காக குறிப்பிட்ட ப்ராண்ட் மருந்தை எழுதிப்பழகும் காலமிது. "பக்க விளைவுகள் ஏராளம். ஆனால் எந்த வியாதிக்காக என்னிடம் வந்தாயோ அந்த வியாதி சரியாப்போச்சா இல்லயா? சைட் எஃபக்டா கேன்சர்கூட வந்தாலும் வரலாம்தான். ஆனால் உனக்கு வரும்னு ஏன் பயப்படுற? நீ யூஸ் பண்ற பேஸ்ட்ல இல்லாத சைட் எஃபக்டா?!" என நவீன மருத்துவம் கேள்வி கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஏனெனில் நமக்கு இவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லை! அதனால்தான் இயற்கை அவ்வப்போது மகாமாரிகளை அனுப்பி நமக்கு பாடம் சொல்லித்தருகிறது!  கற்றுக்கொள்பவர்கள் மட்டும் பிழைத்திருப்போம். ஆதியிலி...

யுத்தம்

இலங்கையில் இனவெறிக்கெதிரான யுத்தம் கொழுந்துவிட்டெரிந்த காலம். தலைமன்னாரிலிருந்து குடும்பம் குடும்பமாய் தமிழர்கள் கள்ளத்தோணி ஏறி, நடுக்கடலில் இலங்கை இந்திய கடற்காவல் கண்காணிப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளில் சிக்காது தப்பித்து, தனுஷ்கோடியிலோ வேதாரண்யத்திலோ கரையேறி, அகதிகள் முகாமிலோ அல்லாது கண்காணாது ஏதோ ஒரு ஊரிலோ தம் வாழ்வை நீட்டித்துக்கொள்ள முயன்ற காலமது. தலைமன்னாரில், தன் சேமிப்பு, இருப்பிடம் எல்லாவற்றையும் பணமாய் மாற்றி, கள்ளத்தோணிக்காரன் கேட்ட அநியாய தொகையை தந்து, கணேசன் அண்ணன் தன் (இரண்டு) வயது வந்த மகள்கள் + பதின்வயது மகனுடன் நள்ளிரவில் தோணியில் ஏறி, பயம் கலந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவுக்கு பயணம் தொடங்குகிறார். கடல் எல்லை அருகில், நடுக்கடலில், 'இதற்கு மேல போக இயலாது. துவக்கு கொண்டு சுடுறான் ரோந்துப்பொலிசு! தண்ணில குதியுங்கோ!' என தோணிக்காரன் இவர்களை கடலில் தள்ளி கை விட, இரு கைகளில் இரு மகள்கள், தோளில் நீச்சலறியாத மகன் என நீந்தத்தொடங்குகிறார் விடுதலை நோக்கி. மனித எத்தனத்தினால் முடிகிற செயலா இது? மூவரை ஒருவர் கொந்தளிக்கும் கடல்நீந்தி அழைத்துச்செல்வது? அவரது கை சோர, சகோதர...

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, பிழைத்திரு!

இயற்கை வேளாண்மையும் இயற்கை மருத்துவமும். முன்னது ஆகும்.பின்னது ஆகாது! உலகம் முழுவதும் ஒரே உணவுப்பழக்கம் என்ற மேற்கின் கனவு நம் கண்முன்னே தகர்ந்து போய் கிடக்கிறது இன்று. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பல பயிர் பல்லுயிர் என நோயற்று வாழ்ந்த மக்களை வணிகப்பயிர்களுக்கு, ஒற்றைப்பயிர்களுக்கு மாற்றவைத்தது மேற்கின் பொருளாதார பலம். வருடத்தில் ஆறுமாதம் இயற்கை சூழல் ஒத்துழைக்காததால் முடங்கியிருந்த மேற்கு, வணிகக்காற்று உந்தித்தள்ள கடற்பயணம் தொடங்கியபோது எஞ்சிய உலகைப்பிடித்தது சனி! " பட்டும், மிளகும் கம்பளமும் ஆசியாவில் கிடைக்கிறதே! மேன்மையான குதிரைகள் அரேபியாவில் கிடைக்கிறதே! பொன்னும் வெள்ளியும் தென்னமெரிக்காவில் குவிந்து கிடக்கிறதே! விலையற்ற தொழிலாளர்கள் (அடிமைகள்!) செவ்விந்திய, மேற்கிந்திய, இந்திய, ஆப்பிரிக்க நிலப்பரப்பில் ஏராளமாய் இருக்கின்றனரே! கோகோ மெக்சிகோவில் செழித்து வளர்கிறதே! " என கப்பல்கள் நூற்றாண்டுகளாய் கரை தொட்டு நங்கூரமிட, இறங்கிய வணிகக்கூட்டம் சுரண்ட முடிந்தவரை அள்ளிச்சென்றபின், அந்த நிலங்களையும் தன் வணிக நீட்சிக்காய் அந்த நிலங்களிலிருந்த பல்லுயிர் சுழற்சியை உடைத்தழித்து...