இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நோய்கள் தீர்க்க (மூலிகை) வேர்கள் உண்ட கூட்டம் நாம்.
சில நூறு வருட ஆங்கில மருத்துவம் தந்த வண்ணக்கரைசல்களும் களிம்புகளும் மாத்திரைகளும் நம்மை நலமுறச்செய்துகொண்டுதான் இருந்தன, ஐம்பது வருடங்கள் முன்பு வரை.
மருத்துவம் பெருவணிகமாகி, உலகப்பெருவணிகமாக ஆகி, இன்று மருத்துவர்கள்கூட மாதாந்திர வணிக இலக்குகள் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காலமிது.
எந்த நோய்க்கும் மருத்துவ மூலக்கூறுகளை மட்டுமே ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிப்பழகிய மருத்துவர்கள், வணிக கேரட்டுகளுக்காக குறிப்பிட்ட ப்ராண்ட் மருந்தை எழுதிப்பழகும் காலமிது.
"பக்க விளைவுகள் ஏராளம். ஆனால் எந்த வியாதிக்காக என்னிடம் வந்தாயோ அந்த வியாதி சரியாப்போச்சா இல்லயா? சைட் எஃபக்டா கேன்சர்கூட வந்தாலும் வரலாம்தான். ஆனால் உனக்கு வரும்னு ஏன் பயப்படுற? நீ யூஸ் பண்ற பேஸ்ட்ல இல்லாத சைட் எஃபக்டா?!" என நவீன மருத்துவம் கேள்வி கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஏனெனில் நமக்கு இவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லை!
அதனால்தான் இயற்கை அவ்வப்போது மகாமாரிகளை அனுப்பி நமக்கு பாடம் சொல்லித்தருகிறது!
கற்றுக்கொள்பவர்கள் மட்டும் பிழைத்திருப்போம்.
ஆதியிலிருந்தே இந்த அறியாமையும், இயற்கையின் பாடங்களும் தொடர்ந்து நடப்பதால்தான் இன்றுவரை இயற்கை மருத்துவ அறிவு தொடர்ந்து தழைக்கிறது.
நேற்று உலக சுகாதார நிறுவனம் (WHO), ஆர்டமிசியா என்கிற மூலிகை சார்ந்த இயற்கை மருந்து ஆப்பிரிக்க மடகாஸ்கர் நாட்டில் கோவிட்19 ஐ வெற்றிகரமாக தடுத்திருப்பதால் அதை கோவிட் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
நம் ஊரில் இதற்கு மாசிப்பச்சை என்று பெயர். பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவர்கள் பயன்படுத்தும் தாவரம்தான் இது!
😢 வயிற்றுப்பசி தீர்க்க சின்னச்சின்ன குற்றங்கள் செய்பவர்களை அடித்தே கொல்லும் சமூகம், மெல்லப்பாயும் சட்டம்... இவற்றை கட்டமைத்து காக்கும் அரசுகள்தான் உலகளவில் மருத்துவ வணிகத்தையும் வரையறுக்கின்றன. இன்று பல நூறு மருந்துகளை 'விலைக்கட்டுப்பாட்டுக்குள்' அரசுகள் கொண்டுவரத்தொடங்கியுள்ளது நல்ல மாற்றம்தான்
மக்களிடம் விழிப்புணர்வு, ஆங்கில மருந்துகள் பற்றி, வர வாய்ப்பில்லை. ஏன்னா புரிஞ்சிக்க நிறைய பட்டறிவு வேண்டும். ஆனால் உணவே மருந்தான நம் வாழ்வியலை ஏன் நாம் மாறிப்போக அனுமதித்தோம்?
உணவும், மூலிகைகளும் சார்ந்த மருத்துவம், மீண்டு வரும், நம்மை மீட்டுத்தரும்!
கருத்துகள்
கருத்துரையிடுக