விவசாய மசோதாக்கள் மூன்று.
ஏன் விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள்?
ஏன் அச்சப்படுகிறார்கள்?
ஏனெனில் அவர்கள் கடந்துவந்த பாதைகள் அப்படி, பயணங்கள் அப்படி.
நாம் ஏன் 'நமக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை' என இருக்கிறோம்?
ஏனெனில் நாம் 'கண்டுகொண்டிருக்கும்' இரவல் கனவுகள் அப்படி.
வரலாறு காணாத உணவுப்பஞ்சம் 1960களில்.
உணவுப்பயிர் உற்பத்தியை பெருக்க யுத்தகால நடவடிக்கைபோல அரசுகள் திட்டங்கள் தீட்டி பசுமைப்புரட்சி செய்து, சிறுதானிய உணவுசார்ந்த, அது தந்த வலிமை வாய்ந்த விவசாயிகளை பசுமைப்புரட்சியில் ஈடுபடுத்தவும், ஐம்பதே ஆண்டுகளில் நிலமும் பாழ், வளமையும் பாழ் என பசி, பிணி, மரணம் துரத்துது இவர்களை.
வெண்மைப்புரட்சியும் சேர்ந்துகொள்ள, இன்று இந்திய உள்ளூர் ரக 'காளைகள்' எல்லாம் தம் திமிலை மறைத்து வேறு ஒரு பெயரில் தலைமறைவாக வாழும் நிலை. 'பால் பெருக்கி வணிகம் வளர்க்க வெளி விந்து ஊசிகள் போதும், உள்ளூர் காளைகள் வேண்டாம், நாங்கள்தான் டிராக்டரும், உரங்களும் தருகிறோமே!' என வணிக நோக்கு அரசியல்.
"உர மானியம், விதை மானியம், பயிர் மானியம் தருகிறோம்! வருடத்திற்கான மைய இலக்கு தருகிறோம். நீ என்ன விளைவிக்கலாம் என்றும் சொல்கிறோம். அதை மட்டும் பயிர் செய். விலை பற்றி கவலை உனக்கெதற்கு, MSP தருகிறோமே!' என தீர்வுகளால் விவசாயிகளை திக்குமுக்காடவைத்து, MSP உயர்வுக்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு ஏதுமின்றி...
1970களில் ஐந்து ரூபாய்க்கு விற்ற தேங்காய் போன வருடமும் farm gate இல் 5 ரூபாய்க்கு விலைபோனது!
இப்படி 'சந்தை சார்ந்த சில பயிர் விளைச்சல்' சிக்கலாக இருக்கையில் வாரியங்கள் அமைத்து இன்றும் நன்செய் நிலங்களும் தென்னந்தோப்புகளாவது ஒருபுறம், 'மாதுளைக்கு ஐரோப்பாவில் மார்க்கெட்டு ரவுண்டு கட்டி அடிக்குதாம். தென்னைக்கு தண்ணி கட்டி மாள்றதுக்கு மாதுளைல முத்து முத்தா சம்பாதிக்கலாம்!' என ஊடகங்கள் பரப்ப, ஏக்கர் ஏக்கராய் தென்னை மரங்களை வெட்டி, நிலங்களை மாதுளைக்கு மாற்றி சில ஆண்டுகள் பாதுகாத்து அறுவடை செய்து நிமிர்ந்தால், எல்லா தென்னந்தோப்புகளும் மாதுளந்தோப்புகளாகி, 'அமோக விளைச்சல்! அடிமாட்டு விலைக்கு வாங்கிடலாம்!' என வணிக சாலைகள் இவர்களை நோக்கி நீள்கிறது. இங்கு மாதுளையென்றால் காஷ்மீரில் ஆப்பிள்!
"காஷ்மீரில் எப்பவுமே ஆப்பிள் விளையுமே!? அங்க ஒண்ணும் மாறலையே, மாறலையே!' என முஷ்டி மடக்கவேண்டாம்! அங்கு உள்ளூர் ஆப்பிள் மரங்களை வேறோடு பிடுங்கி வெளிநாட்டு சந்தைக்கான ஆப்பிள் மர நாற்றுகளை இறக்குமதி செய்து நட்டு... இன்று இந்திய பருவநிலை மாற்றங்களில் சிக்கிக்கொண்டு அந்த வெளிநாட்டு மரங்களும் உள்ளூர் விவசாயிகளும் கதறுவது நம் காதுகளுக்கேனோ எட்டவில்லை இன்னும்!
இத்தனை குழப்பங்களுக்கிடையில் வணிகம் மட்டும் தெளிவாய்! ஏனெனில் இன்று நம் விலையை விட குறைவான விலையில் அதே பொருள் இந்தியாவுக்கு வெளியே எங்கு கிடைத்தாலும் அங்கு வாங்குவதே அவர்களுக்கு லாபம், கம்போடிய மஞ்சள் போல!!
உணவு என்பது உலக சந்தையல்ல, உள்ளூர் தேவை! நம் விவசாயிகளின் சொந்த கனவு. அதை நிறைவேற்றாமல் 'வணிக வேளாண்மை' எனும் இரவல் கனவுகளால் நிரம்பிய அவர்களது துயரம் தோய்ந்த வாழ்வை மாற்றப்போவது யார்? எப்போது?
"உணவு என்பது உலக சந்தையல்ல, உள்ளூர் தேவை!" என்ற இந்த அடிப்படை புள்ளிக்கு நம்மை நகர்த்த இந்த மூன்று மசோதாக்களும் நம் வேளாண் கோட்பாடுகளும் நமக்கு உதவுமா? என்று நாம் கேட்கவேண்டிய நிலையில் மகாமாரி நம்மை நிறுத்தியிருக்கிறது. நாமோ வணிகம் விரித்த 'பெரு நுகர்வு பேரானந்தம்' என்ற கனவை இரவல் வாங்கி, நமதாக்கிக்கொள்ள துடிக்கிறோம்!
Just think about these:
Playing field is not level. Big business will disrupt the mandi system and become Mandis themselves.
When telecom revolution started, we were promised cheaper access, connectivity and content as animal spirit and competitiveness will ensure that.
What happened now?
We got only two fighters (Jio and Airtel) and the third one (Vi) in ICU! with backdated AGR dues to be paid back in 10 years to govt.
And, we end up paying higher and higher price just to keep them afloat! These two biggies are talking about doubling their ARPUs just to stay afloat with tech upgrades and expansion. That means, We, will pay double the charges!
Replace us with Farmers; Mandis will be Reliance / Birla / xyz mandis.
Commodity hoarding was a crime earlier. With these three bills, private firms can hoard, create inflated demand and dump it at a huge profit.
Oh yeah, with land acquisition amendment bill passed thru ordnance route last year, govt has opened up our lands to private industry purchases for "market farming".
:-(
:-(
:-(
(Photo credit: Wikipedia. Original picture was by Ananth B S)
கருத்துகள்
கருத்துரையிடுக