முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜீனியஸ்ங்க நீங்க!

  ஒரு மன நல மருத்துவரிடம் தம் மீன் குழந்தையை அதன் மீன் பெற்றோர்கள் அழைத்து வந்தனர். 'என்ன சிக்கல்?' என்றார் மருத்துவர். 'நாங்க பட்ட கஷ்டம் எதுவும் இவன் படக்கூடாதுன்னு பாத்து பாத்து வளக்கிறோம். எங்களால முடியாதத இவனாவது பண்ணுவான்னு எதிர்பார்க்கிறோம். ஆனாலும் இவன் மரம் ஏற மறுக்கிறான். கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி கூட try பண்ணிட்டோம், யார்கூடவும் பேச மாட்டேங்கிறான், தனியாவே கிடக்கான்!' அவர் அவர்களுக்கு சொன்ன தீர்வே இப்பதிவு. எந்த காகமும் தன் குஞ்சுகள் பொன்னிறத்திலில்லாது கருகருவென இருப்பதை நினைத்து வெம்புவதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என கற்பிதம் செய்கிறோம், நம் குழந்தைகளையும் அவ்வாறே நினைத்து வளர்க்க முயல்கிறோம் :-) Special என்கிற உணர்வு, காக்கையானாலும் அதற்கு அதனது குஞ்சு special என்ற உணர்வில் உண்டாக்கப்பட்ட பழஞ்சொல் இன்று நமது எதிர்பார்ப்புகளின், ஏமாற்றங்களின் இடையில் நசுங்கிப்போய் நிற்கிறது, நம் குழந்தைகள் போலவே! இந்தப்பதிவின் drift புரிந்தவர்கள் முதுகில் தட்டிக்கொண்டு உற்சாகமாய் தொடருங்கள். மற்றவர்களும் என்னோடு தொடர்ந்து இப்பதிவில் ப...

நிறப்பிரிகை

  Life without a Prism. இயற்கைக்கு நல்லது, கெட்டது, சக உயிருக்கு துன்பமிழைத்தல், துன்பம் கண்டு துடித்தல் போன்ற உணர்வுகள் எதுவும் கிடையாது. சிலது செய்தால் தொடர்கண்ணியாய் சந்ததி நீளும், சிலது செய்தால் நீளாது, அவ்வளவே. ஏதோ ஒரு ஆதார விதியின்படி கோள்களின் இயக்கம், பிரபஞ்சத்தின் இயக்கம் நிகழ்கிறது. இயற்கையின் உள்ளிருந்து ஆராய்ந்து இயற்கையை அறியமுடியாது. வெளியே சென்று ஆராயவும் இயலாது. எனவே இந்த முயற்சியே வீண் என்கிறார் Masanobu Fukuoka. இயற்கையிடம் மனிதன் எதிர்பார்ப்பது, கற்பிதங்கள் செய்து பயப்படுவது அல்லது மகிழ்வது("fixing" causes for each and every result humankind faces, by heuristic logic) இவற்றின் வெளிப்பாடே பல வண்ண கடவுள்களாக இருக்கலாம். கடவுளை தேடும் ஒவ்வொருவரும் கடவுள் துகளே என்கிற அறிவியல் கோட்பாட்டை இந்து மதம் (என்கிற இயற்கையை தொழுத வாழ்வியல்) உள்ளிழுத்து 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்றது. இதை நாம் அத்வைதமென்கிறோம். இந்த வாழ்வியலால் ஈர்க்கப்பட்ட / இதிலிருந்து பிரிந்து போன மதங்கள் (வாழ்வியல்கள்) இன்றுவரை த்வைத கோட்பாட்டில் இயங்குகின்றன :-) கடவுளே என்கிற நிலைப்பாட்டுக்கும், ...

பேயும், இருளும், மழையும்!

சேவோ ஆற்றின் ஆட்கொல்லி சிங்கங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கிய காலகட்டம். ஆப்பிரிக்க கண்டத்தில் உகாண்டா நாட்டின் உள்பகுதிகளை கென்யா நாட்டின் மொம்பாசா பெருநகர் துறைமுகத்துடன் இணைக்கும் 1060 கி.மீ நீளமுள்ள ரயில்பாதை உருப்பெற்ற நேரம். ஏராளமான இந்தியர்கள் பஞ்சாப் மாகாணத்திலிருந்து கூலித்தொழிலாளர்களாக, ஒப்பந்த அடிப்படையில் தொலைதூரம் அழைத்துவரப்பட்டு,  இராப்பகலாக வேலை செய்ய, ரயில்பாதை மளமளவென்று நீண்டது. வந்தாயிற்று, மொம்பாசா துறைமுகம் தொலைவிலில்லை. சேவோ (Tsavo) ஆறைத்தாண்டினால் பணி எளிதாகிவிடும். சேவோ (Tsavo) ஆற்றின் மீது பாலம் கட்ட பொறியியலாளர் துணையுடன் வேலைகளையும் தொடங்கியாயிற்று. ஆனால் வேலை நடக்கவில்லை. தொடங்கிய சில தினங்களிலேயே தொழிலாளர்கள் அங்கங்கே ரத்தவெள்ளத்தில் குதறப்பட்டு கிடப்பது தொடர் நிகழ்வாயிற்று... இருளில் அவர்களை வேட்டையாடி குதறியது ஒரு மிகப்பெரிய சிங்கம் என்று அவர்கள் உணர்வதற்குள் உயிர்ச்சேதங்கள் நிறைய. இந்த ஆட்கொல்லி சிங்கத்தை அழிக்க ஒரு வேட்டக்காரரை  அந்த பொறியியல் வல்லுநர் அழைத்துவருகிறார். வேட்டைக்காரரும் இரவு பகலாய் சிங்கத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க, பேரத...

ஐந்தாம் வேதம்!

சிறிய பதிவுகள், குறுகிய பதிவுகள் என நம் சிந்திக்கும் திறனும், கவன ஈர்ப்பு நேரமும் குறைந்து கொண்டே வருகிற காலகட்டத்தில், சில நீநீநீளமான பதிவுகளும் அவசியம்தான். பதிவின் கனமே அதன் நீளத்தை பெரும்பாலும் முடிவு செய்கிறது. ஒரு கப் சூடான பானத்துடன், சற்றே தனிமையில் அமர்ந்து, break எடுக்காமல் படிக்கவேண்டிய, அவசியமான பதிவு இது. இதை செய்யமுடிந்தால், தீர்வின் தொடக்கப்புள்ளி நாமாகவே கூட மாறலாம். நன்றி. பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்! --------+--------- 74_ஆம் ஆண்டு சுதந்திர தின நள்ளிரவுப்பதிவு, விடியலை நோக்கி... பாரதி கற்கச்சொன்ன சாத்திரம் ஒன்று, இன்றுவரை தவறான பொருளில் கையாளப்படுகிறதா? சிந்து நதியின்திசை நிலவினிலே என்ற பாடலில், "மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம்கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்."  என விண்ணில் பாயும் கனவு வரிகளில் தொடங்கித்தொடர்ந்து சரேலென மண்ணில் நம்மை இழுத்து குத்தி வீழ்த்தும் இந்த ஒற்றை வரி பற்றியே இப்பதிவு; "சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்". அநேகமாய் பாரதியின் பாடல் ...

பாதுகாப்பில்லாத தேசம்

நம் நாட்டிலுள்ள அனைத்து அரசுகளுக்கும்,  கட்சிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஒரு எளிய இந்தியனின் விண்ணப்பம்: ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட ஒரே காரணத்தால், குடும்பப்பொறுப்பை ஒற்றையாய் சுமக்கும் ஏழை அம்மாவுக்கு உதவியாய் சாலையில் தேநீர் விற்ற பதின்வயது சிறார்களை கவர்ந்து சென்று, காப்பகத்தில் வைத்திருந்து, தாயின் + நல்மக்களின் எதிர்ப்பு கண்டு பின்வாங்கி, மீண்டும் தாயிடம் சேர்க்கின்றது ஒரு அமைப்பு, அரசின் உதவியோடு. 'இனிமேல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பமாட்டேன், நன்கு வளர்ப்பேன், பள்ளிக்கு அனுப்புவேன்' என அந்த அம்மா உத்தரவாதம் தந்தபிறகு. தேநீர் விற்ற சிறார்களுள் ஒருவர் ஆணுடை அணிந்த சிறுமி, சீர்குலைந்த சமூக ஆண்களின் விஷமப்பார்வையிலிருந்து மானம் காக்க ஆணுடை உதவும் என்கிற நம்பிக்கை... 'நீ வேலைக்குப்போய் பசங்கள காப்பாத்தவேண்டியதுதான? ஏன் இப்படி ரோட்ல டீ விக்க வைக்கிற?' என்ற கேள்வி அம்மாவிடம் வைக்கப்படுகிறது. 'குடிகாரர்களும் காம வெறியர்களும் நிறைந்த சமுதாயத்தில் யாரை நம்பி என் குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு உழைக்கச்செல்வேன்? அது இயலாத காரியம் என்பதால்தானே அவர்களை படிக்கவைக...

நெஞ்சாங்கூடு

"பூமி போல ஏமாளி கிரகமொன்று சிக்காதா?" என எல்லைகளற்ற விண்வெளியில் துழாவுது ஒரு கூட்டம்.   அண்டவெளியனைத்தையும் அலசி ஆராய்ந்து நாம் இதுவரை கற்றிருப்பது, பூமியில் நம்மைச்சுற்றி வியாபித்திருக்கும் சகலதும் பற்றிய நம் அறிதலை விட பெரிதானது! நம் கண்ணருகே உள்ள உலகை, அதன் அற்புதங்களை, புதிர்களை, உணர முடியாத நாம், நம் காலடியில் தலையாட்டும் அற்புதங்களை, வானில் சிறகடிக்கும் அற்புதங்களை உணர முடியாத நாம், நம் காலடியையும் உச்சி வானத்தையும் இணைக்கும் மரங்கள் முதல் காடு மலைமுகடுவரை எதையும் உணர முடியாத நாம், இடைவிடாது வேற்றுலகங்கள் தேடுவது ஏன்? காசினி (Cassini) என்ற செயற்கைக்கோளை பூமியிலிருந்தே ரிமோட்டில் இயக்கி, சனி கிரகத்தின் ஆரஞ்சு வளையங்களுக்கிடையே துல்லியமாக புக வைத்து, சனியின் உட்பரப்பை படமெடுக்க உதவும் அறிவு போதுமா நாம் நலமுடன் வாழ? இன்று இந்தியாவில் 43 சதவீதம் பேருக்கு(!) மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி அழுத்தத்தை இன்னும் அதிகமாக்குகின்றன... சக உயிரின் துயரை, அவற்றுக்கே தெரியாமல் சாவித்துளை வழியே பார்த்து ரசிக்கும் பெருங்கூட்டமாக நம்மை மாற்றிய அறிவுதான் வளர்ச...

என்ன தவம் செய்தனை!

ஒரு 20+ வயதுள்ள பெண் கருவுற்றால் அவளது உடல்நிலை + மன நல மாற்றங்களை தாங்கிக்கொள்ள, பாதுகாக்க, போற்றிக்கொண்டாட, கணவனும், குடும்பமும், சுற்றமும் இருக்கும். அவளது கணவன் தகப்பனாகப்போகும் பெருமித்த்தில் மிதப்பான். அவளது தகப்பன் தான் தாத்தனாகப்போகும் மகிழ்வில் கனிவான். அம்மாவும் மாமியாரும் 'நம் வீட்டுக்கு புதிய வரவு ராஜகுமாரனா, ராஜகுமாரியா?' என விவாதிப்பார்கள். ஒவ்வாமை, வளைகாப்பு, மூச்சு விட சிரமம்,  நடக்க சிரமம், படுக்க சிரமம், உறங்க சிரமம்... என்றாலும் மகிழ்வாய் அந்தப்பெண் தாயாக 39 நெடிய வாரங்கள் தயாராவாள். 15 வயது பெண்குழந்தை? அந்தப்பெண்குழந்தை ஏழு மாத கர்ப்பம். தாய் இல்லை. தகப்பனும் தாத்தனும் மாறி மாறி சீரழித்ததில் அந்தச்சிறுமி கருவோடு சேர்த்து ஒவ்வாமை, வீங்கிய வயிறு, உயிரைப்பிசையும் பயம், வலி, இன்னும் என்னவெல்லாமோ சுமந்து வாழ்கிறாள் மதுரையில். தமிழ் வளர்த்த மதுரையில், அறம் வளர்த்த மதுரையில், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில். உயர்நீதிமன்றத்தில் அவளது உறவினர் தொடர்ந்த வழக்கில் நேற்று ' மருத்துவ ஆலோசனையின் பேரில் கருவை கலைத்துவிடலாம்' என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அரக...