சிறிய பதிவுகள், குறுகிய பதிவுகள் என நம் சிந்திக்கும் திறனும், கவன ஈர்ப்பு நேரமும் குறைந்து கொண்டே வருகிற காலகட்டத்தில், சில நீநீநீளமான பதிவுகளும் அவசியம்தான். பதிவின் கனமே அதன் நீளத்தை பெரும்பாலும் முடிவு செய்கிறது.
ஒரு கப் சூடான பானத்துடன், சற்றே தனிமையில் அமர்ந்து, break எடுக்காமல் படிக்கவேண்டிய, அவசியமான பதிவு இது. இதை செய்யமுடிந்தால், தீர்வின் தொடக்கப்புள்ளி நாமாகவே கூட மாறலாம். நன்றி. பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்!
--------+---------
74_ஆம் ஆண்டு சுதந்திர தின நள்ளிரவுப்பதிவு, விடியலை நோக்கி...
பாரதி கற்கச்சொன்ன சாத்திரம் ஒன்று, இன்றுவரை தவறான பொருளில் கையாளப்படுகிறதா?
சிந்து நதியின்திசை நிலவினிலே என்ற பாடலில்,
"மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம்கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்."
என விண்ணில் பாயும் கனவு வரிகளில் தொடங்கித்தொடர்ந்து சரேலென மண்ணில் நம்மை இழுத்து குத்தி வீழ்த்தும் இந்த ஒற்றை வரி பற்றியே இப்பதிவு;
"சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்".
அநேகமாய் பாரதியின் பாடல் வரிகளில் சரியாக ஆராயப்படாத ஒற்றை வரி இதுவாகவே இருக்கக்கூடும்.
இந்த வரியின் சரியான பொருள் தெரிந்தால் 'ஏன் ஆராயப்படவில்லை?!' என்ற வினாவிற்கும் விடை கிட்டும்!
இன்றுவரை இந்த வரி பெரும்பாலும் ஸ்வச் பாரத்திற்கான விளம்பர வரிகள் போலவே பலராலும் கையாளப்படுகின்றது; 'எனது ஊரில் தீண்டத்தகாதோர் குடியிருப்பு சாலைகளை பாரதி சொன்னது போல் சுத்தம் செய்தோம்!' என பதிவுகள் ஓருபுறம்,
இந்த சாத்திரத்தில் என்ன செயல்களெல்லாம் அடங்கும் (சாலைகளை கூட்டுதல், மலமள்ளுதல், துப்பிய எச்சிலை துடைத்தல் என சாத்திரத்துக்கு இலக்கணங்கள்) என அடுக்கும் பதிவுகள் மறுபுறம்...
உண்மையான பொருள் என்னவாக இருக்கலாம்? ஏன்? என பார்ப்போமா?
நம் சமுதாய வர்ண பேத பரமபத கட்டமைப்புகளில், இழிவான தொழிலாக உயர் வர்ணங்களால் கருதப்படும் செயல்களை செய்வதற்கென்றே ஒரு வர்ணத்தை அவை வரையறுத்தன.
வேத காலம் தொட்டே இந்த பேதங்கள் பழகிய நம் மானுடம், ராஜராஜ பேரரசன் காலத்திலும் 'இன்னார் மட்டுமே இன்னின்ன கட்டமைப்புகள் கொண்ட வீடுகளில் வசிக்கலாம்; ஒரு வர்ணத்திற்கு(இந்த வர்ணம் பிரகாசிக்கும் தொழில் பயில்வோர்க்கு மட்டும்) மூன்று கட்டு வீடு கட்டிக்கொள்ள அனுமதி, இன்னொரு வர்ணத்திற்கு (வேறு சில தொழில் பிரிவுகளுக்கு) சன்னல் வைக்கக்கூட அனுமதியில்லை என வளர்ந்து, சென்ற நூறாண்டிகளில் மேலாடை அணிவதற்கும் தடையென விரிந்து வகுத்துக்கொண்டே போன கோடுகளில் சிக்குண்டு இன்றும்கூட வட இந்திய மலக்குழிகளில் மூச்சுத்திணறி இறப்பது 'வால்மீகி' போன்ற கடைவர்ண மனிதர்கள்தானே.
'ஏய், என்னதான் சொல்ல வர்றே? வேதங்களில் என்ன பேதம்?!' என்று பாய்ண்ட்டை பிடித்தவர்கள் மட்டும் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள், யூ ஆர் ஸ்டில் வித் மீ ஆன் திஸ் :-)
தொடக்க வேதங்கள் மூன்றே, மூன்று மட்டுமே என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவே!
நாலாம் வேதம் என்ற அதர்வண வேதம், உயர் வர்ணங்களினால் (காலத்தின் கட்டாயத்தினால்) ஏற்கப்பட பல ஆயிரம் ஆண்டுகள் ஆனதாம்! ஏனெனில் அது நான்காம் வர்ணத்தாரின் வாழ்வியல் சார்ந்த, நம்பிக்கைகள் சார்ந்த பதிவாம். அதனால்தான் இந்த வேதத்தில் மட்டும் black magic வகை மந்திரங்கள் நிறைய...
மூன்று வேதம் பழகியோரின் அழுக்குகளை களைந்தவர்களின் வாழ்வியல், காலத்தின் கட்டாயத்தினால் நான்காம் வேதமாயிற்று.
'நான்மறை என்றாகிப்போய் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் கடைநிலை அழுக்குகளை களையும் தொழில் செய்வோரை மனிதராய் மதிக்கும் பக்குவம் வரவில்லையே நம் மனிதர்க்கு' என நொந்த பாரதியின் பெருவிருப்பமாய் இது வெளிப்பட்டிருக்கலாம்,
வானையளப்போம், கடல் மீனையளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், அதனோடு கூட அப்படியே சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்!
வேத காலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தாவது, இன்றைய அறிவியல் கொண்டு வானையும் கடல் மீனையும் அளந்தபின்னாவது, சந்திரனில் என்னதான் இருக்கிறது என்று ஆராய்ந்து தெளிந்தபின்னாவது சற்று நேரம் ஒதுக்கி, நம் சந்திகள் மற்றும் தெருக்களை அன்றுபோலவே இன்றும் பெருக்கிக்கொண்டிருக்கும் இந்த நாலாம் வர்ணத்தின் வாழ்வியலை கற்போம், 'மனிதராவோம்'! என்ற பேராசை இந்த வரியின் பொருளாக இருக்கலாம்.
தமிழ்கூறும் நல்லுலகும், மெத்தப்படித்த தமிழ் அறிஞர்களும் இதன் உண்மைத்தன்மையை பரிசீலிக்கிறதோ இல்லையோ, நாலு வர்ணத்தவரும் சிந்தித்து ஒன்று கூடி தொழில்நுட்பத்தேரிழுத்தால் மட்டுமே பாரதியின் பெருவிருப்பம் நிறைவேறும், மலக்குழியிலிருந்து மனிதம் விடுபட்டு மேலெழும்பி உயிர் வளர்க்கும்.
('ஒப்பிலாத சமுதாயம் உலகத்திற்கொரு புதுமை' என்பதாக, நமது வாழ்வியலும் சாத்திரங்களும்தான் பழைய உலகில் புதுமைகளை புகுத்தின. வாழ்வியலே வணிகமாய் மாறிப்போன புதிய உலகில் இன்று வணிக வளமும் பலமும் பெற்ற நாடுகள் அனைத்தும் ஐந்தாம் சாத்திரமென பணத்தை ஆராதிக்கின்றன. பண மதிப்பில் பின்தங்கிய நாடுகள் அனைத்தும் கடை வர்ண நிலைக்கு தள்ளப்பட்டு இந்த ஐந்தாம் சாத்திரத்தின் அழுக்குகளை அள்ளும் வேலையை பணத்துக்காக செய்து கொண்டிருக்கின்றன. இவர்களது துயரம் நீக்க நம்மால் மட்டுமே மீண்டுமொரு சாத்திரம் வடித்து, கற்று, கற்பிக்கவும் இயலும் என்பதாகவும் பாரதியின் மேற்சொன்ன பாடல் வரிக்கு பொருள் கொள்ளலாம்.)
பதினைந்து நாட்களுக்கு முன்பு, ஒரு தலைநகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் மலக்குழியை சுத்தம் செய்ய இந்த தொழிலை செய்யும் ஒருவரை (வயது 40) தலைமை ஆசிரியர் பணிக்க, அந்த மனிதர் உள்ளே இறங்குகிறார். சில மணி நேரம் கழித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தப்பணியாளரை அலைபேசியில் அழைக்கிறார். பல முறை அழைத்தும் பதிலில்லை. சந்தேகம் உந்தித்தள்ள அந்த தலைமை ஆசிரியரே (வயது 50) குழிக்குள் இறங்குகிறார். பிறகு இவரை அழைக்க அலைபேசயில் பலமுறை பலனின்றி முயன்ற இவரது உறவினர் ஒருவர் (வயது 30) நேரில் பள்ளிக்கு வந்து அவரும் மலக்குழியில் இறங்கித்தேடலாம் என...இறங்குகிறார்.
இந்த உறவினரை சிலமணிநேரம் கழித்து தேடத்தொடங்கும் குடும்பத்தினர் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்து மலக்குழியில் சந்தேகத்தோடு எட்டிப்பார்த்தால், உள்ளே சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி, சக்தியிழந்து துவண்டு உயிருக்கிப்போராடிக்கொண்டிருந்த மூவரையும் மேலிழுத்து ஒரு மருத்துவரிடம் முதலுதவி பெற்று... விரைவாய் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க, அங்கு சோதனை செய்த மருத்துவர் உதடு பிதுக்கி, 'All three were brought dead' என ரிப்போர்ட் எழுதுகிறார்.
ஜீலை 30, 2020 இல் பங்ளாதேஷின் தலைநகர் டாக்காவில் நிகழ்ந்த பெருந்துயரம் இது...
'கத அப்படி போவுதா! அங்கே எங்க சார் நம்ம வேதங்கள்?!' என மடக்கிவிட்டதாய் நினைத்து பின்னூட்டம் எழுத நீங்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாவது தெரிகிறது :-) சற்று பொறுங்கள்; இந்த துயரம் மதங்கள் தாண்டிய துயரம், மாறாத வாழ்வியலின் துயரம். இறந்தோர் வாழ்வியலின் மதச்சாயங்கள் அன்று முதல் இன்றுவரை சிலமுறையோ பலமுறையோ மாறிப்போயிருக்கலாம் ஆனால் இவர்களின் வாழ்வியல் மட்டும் மாறாமல் ஏன் இப்படி மலக்குழிகள் தாண்டி மேலேற முடியாமல் மூச்சுத்திணறி...???
கோவிட் 19 வைரசுக்கு முறிப்பு மருந்துகளும் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்க இன்று அரசுகளும் அறிவியலும் ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அறிவாற்றலில் even a fraction can find a darn good solution for this perpetual problem but they haven't.
அரசுகளுக்கு ஆயிரத்தெட்டு தொல்லைகள், அறிவியலுக்கு ஆயிரத்தெட்டு வணிக கேரட்டுகள் என்றே வைத்துக்கொள்வோம், why can't the CSR spends of big companies use their spend to innovate an affordable and efficient solution?
கடந்த இருபது ஆண்டுகளில் உலகின் முண்ணனி கணணி நிறுவனங்கள் (hardware and software) இந்திய அரசு இயந்திரத்தை கணணி மயமாக்க, இந்திய சுகாதாரத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த பல்லாயிரம் கோடிகள் செலவழித்தன, இன்றும் செலவழித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை ஒப்பந்தம் செய்கையில் 'உங்களது நிகர லாபத்தில் ஒரு தொகையை வருடந்தோறும் ஒதுக்கி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இன்னின்ன சிக்கல்களுக்கு குறைந்த செலவில் பயனுள்ள தொழில்நுட்ப தீர்வை வழங்கினால் மட்டுமே ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்' என specific goals உடன் link செய்து தீர்வுகள் பெற அரசுகள் ஏன் முனைவதில்லை? நாமும் ஏன் தேர்தல்களின்போதுகூட இதுபோன்ற சிக்கல்களை முன்வைப்பதில்லை? தீர்வுகள் வேண்டும் என வலியுறுத்துவது இல்லை? Inclusivity யை ஏன் யாரும் கேட்பதில்லை?!
What gives?
கருத்துகள்
கருத்துரையிடுக