முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேயும், இருளும், மழையும்!


சேவோ ஆற்றின் ஆட்கொல்லி சிங்கங்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கிய காலகட்டம்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உகாண்டா நாட்டின் உள்பகுதிகளை கென்யா நாட்டின் மொம்பாசா பெருநகர் துறைமுகத்துடன் இணைக்கும் 1060 கி.மீ நீளமுள்ள ரயில்பாதை உருப்பெற்ற நேரம்.

ஏராளமான இந்தியர்கள் பஞ்சாப் மாகாணத்திலிருந்து கூலித்தொழிலாளர்களாக, ஒப்பந்த அடிப்படையில் தொலைதூரம் அழைத்துவரப்பட்டு,  இராப்பகலாக வேலை செய்ய, ரயில்பாதை மளமளவென்று நீண்டது.

வந்தாயிற்று, மொம்பாசா துறைமுகம் தொலைவிலில்லை. சேவோ (Tsavo) ஆறைத்தாண்டினால் பணி எளிதாகிவிடும்.

சேவோ (Tsavo) ஆற்றின் மீது பாலம் கட்ட பொறியியலாளர் துணையுடன் வேலைகளையும் தொடங்கியாயிற்று.

ஆனால் வேலை நடக்கவில்லை. தொடங்கிய சில தினங்களிலேயே தொழிலாளர்கள் அங்கங்கே ரத்தவெள்ளத்தில் குதறப்பட்டு கிடப்பது தொடர் நிகழ்வாயிற்று...

இருளில் அவர்களை வேட்டையாடி குதறியது ஒரு மிகப்பெரிய சிங்கம் என்று அவர்கள் உணர்வதற்குள் உயிர்ச்சேதங்கள் நிறைய.

இந்த ஆட்கொல்லி சிங்கத்தை அழிக்க ஒரு வேட்டக்காரரை  அந்த பொறியியல் வல்லுநர் அழைத்துவருகிறார்.

வேட்டைக்காரரும் இரவு பகலாய் சிங்கத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க, பேரதிர்ச்சி காத்திருக்கிறது! ஒரு சிங்கமல்ல. இரண்டு சிங்கங்கள், ஆட்கொல்லி சிங்கங்கள்!
அவைகளின் வாழ்விடம் அந்த சேவோ நதியை சார்ந்த வனப்பகுதி. ரயில் பாதைக்காக தம் வாழ்விடம் அழிக்கப்படுவதை சகியாத அந்த இரண்டு சிங்கங்களும், தம் இடத்திற்குள் அத்துமீறும் ஆட்களை குதறிக்கிழித்துப்போடுவதையும் அந்த வேட்டைக்காரர் கண்டறிகிறார்.

(அவர் எவ்வாறு இந்த இரு ஆட்கொல்லி சிங்கங்களை தன் உயிரைப்பணயம் வைத்து கொல்கிறார் என்பது மயிர்க்கூச்செறியும் திரைப்படமாக ஆக்கப்பட்டு1996 இல் வெளிவந்தது. Val Kilmer - Railway Engineer. Michael Douglas - Hunter.)

135 மனிதர்கள் கொல்லப்பட்டு, சிங்கங்கள் வேட்டையாடப்பட்டு, ஆற்றின் மீது ரயில்பாலம் கட்டப்பட்டு, சில ஆண்டுகளில் உகாண்டாவுக்கும் கென்யாவுக்கும் இடையில் பிரிட்டிஷ் அரசு ரயில் போக்குவரத்து தொடங்கியதும், பல இந்திய கூலிப்பணியாளர்கள் பணி முடிந்தபின்னும் தாய்நாடு தங்க விருப்பமின்றி அங்கேயே தங்கிப்போய் ஆப்பிரிக்காவின் முதல் இந்திய குடியிருப்பை தொடங்கியதும் வரலாறு.

நீண்ட இந்த முன்னுரையுடனான இப்பதிவு இவர்களைப்பற்றியதல்ல!

Ghost and the Darkness திரைப்படத்தில் ஒரு pivotal moment - திருப்புமுனை காட்சி; வேட்டைக்காரர், ஒரு ஆட்கொல்லி சிங்கத்தை தொடர்ந்து சுட்டுக்கொண்டே துரத்த, அது தப்பி தப்பி ஓட, ஒரு கட்டத்தில் அதற்குமேல் ஓட வழியின்றி ஒரு dead end இல் மாட்டிக்கொள்ள, வேட்டைக்காரர், அதன் அருகில் சென்று தனது பெருந்துப்பாக்கியின் 'target view finder' வழியே துல்லியமாய் சிங்கத்தின் பிடரியை இலக்கு வைத்து, துப்பாக்கியின் விசையை அழுத்த.... துப்பாக்கியில் தோட்டா எதுவும் மீதமில்லை!  வியர்வை ஆறாக ஓட, அடுத்து என்ன என்று அவர் திகிலில் உறைந்த அந்த நொடிதான் நாம் இன்று கொரோனாவுக்கு அஞ்சி பதுங்கியிருக்கும் நொடி!

அந்த படத்தின் tag line: "When the animal is cornered, the hunter becomes hunted!"

இயற்கை ஒன்றும் விலங்கு அல்ல, ஆனாலும் நாம் 'வளர்ச்சி' என்ற பெயரால் அதை துரத்தித்துரத்தி வேட்டையாடி, ஆப்பிரிக்க காட்டின் Dead End போன்றதொரு நிலையில் அதை நிறுத்திவிட்டோம். When the animal is cornered, the hunter becomes hunted. We are the hunters right?!

நம் துப்பாக்கிகளில் vaccine தோட்டாக்கள் தீர்ந்நுபோய்... நாம் இப்போது தலைமறைவாய், முகம் மறைவாய் திரிகிறோம்!

மகாமாரி மகாமாரி என நம்மை பயமுறுத்தும் உலகத்தொற்றுகள் (pandemics) எல்லாவற்றுக்கும் மேலான மகாமாரி, ஒரிஜினல் மாரி, மழை மாரி!

மாதம் மும்மாரி பொழிந்த காலங்களில் உலகத்தொற்றுகள் எதுவும் நிகழ்ந்ததாய் வரலாறில்லை!

ஏனெனில் மற்ற மாரிகள் போலல்லாது இந்த மழை மகாமாரி மட்டும் தான் தொட்ட இடமெல்லாம் உயிர்வளர்க்கும்!

மாதம் மும்மாரி பொழிவது இனி வருங்காலத்திலும் சாத்தியமே! இதை நிகழ்த்தும் magic, lies within our grasp!

மரங்கள், மழையை உருவாக்கும் திறன் மிக்கவை. உயிர்களனைத்திடமும் நட்பு பாராட்டுபவை.

நாம் வசிக்குமிடங்கள் மரங்களால் நிரம்பியிருந்த வரையில் மாதந்தோறும் மும்மாரி பொழிந்துகொண்டுதான் இருந்தது. 

மரங்களை தொலைத்து அதனால் மழையையும் தொலைத்த நாம், மீண்டும் மும்மாரி பொழியவேண்டினால் மரங்களை அதிகமாக நட்டுவளர்ப்பதுதானே சரியான தீர்வு!

நம் வாழ்விடங்களை மரங்களால் நிரப்புவோம். வீட்டருகே, பொது இடங்களில், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், வழிபாட்டிடங்களில் நம்மால் இயன்ற அளவு மரங்கள் நட்டு பராமரிப்போம்.

வீட்டுக்கு ஒருவராவது வீட்டுச்சாலைகளில் இறங்கி மரம் நடுவோம். இந்த செயலால், எதிர்வீடு, பக்கத்துவீடு மனிதர்கள் மீண்டும் அறிமும் ஆவார்கள். நல்லதொரு நெட்வொர்க் உதயமாகும், பெருகும். Virtual Networks போல இல்லாமல் இந்த Physical Network இன் உடனடி பலன்கள் ஏராளம்.

மன அழுத்தம் குறையும், நட்பு வளரும், சமூக பிணைப்பு நிகழும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், மும்மாரி பொழியும், விளைச்சல் பெருகும், வயிறுகள் நிறையும், மகிழ்ச்சி பெருகும்.

After all, Agri is the biggest sector in any country that usually absorbs the largest population during any prolonged stressful periods like wars, famines, calamities - natural / man made.

இந்த pandemic காலத்திலும் வேளாண்மையே கை கொடுக்கும். வேளாண்மை என்பது பெரிய பரப்பில், சொந்த/வாடகை நிலத்தில் பயிர் வளர்ப்பதே என்பது முழுமையான புரிதல் அல்ல. நமக்கு சொந்தமில்லாத காலடி நிலத்தில்கூட கையளவு மண்ணகற்றி விதை/நாற்று ஊன்றி வளர்ப்பதும் வேளாண்மைதான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...