முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிறப்பிரிகை

 

Life without a Prism.

இயற்கைக்கு நல்லது, கெட்டது, சக உயிருக்கு துன்பமிழைத்தல், துன்பம் கண்டு துடித்தல் போன்ற உணர்வுகள் எதுவும் கிடையாது. சிலது செய்தால் தொடர்கண்ணியாய் சந்ததி நீளும், சிலது செய்தால் நீளாது, அவ்வளவே.

ஏதோ ஒரு ஆதார விதியின்படி கோள்களின் இயக்கம், பிரபஞ்சத்தின் இயக்கம் நிகழ்கிறது.

இயற்கையின் உள்ளிருந்து ஆராய்ந்து இயற்கையை அறியமுடியாது. வெளியே சென்று ஆராயவும் இயலாது. எனவே இந்த முயற்சியே வீண் என்கிறார் Masanobu Fukuoka.

இயற்கையிடம் மனிதன் எதிர்பார்ப்பது, கற்பிதங்கள் செய்து பயப்படுவது அல்லது மகிழ்வது("fixing" causes for each and every result humankind faces, by heuristic logic) இவற்றின் வெளிப்பாடே பல வண்ண கடவுள்களாக இருக்கலாம்.

கடவுளை தேடும் ஒவ்வொருவரும் கடவுள் துகளே என்கிற அறிவியல் கோட்பாட்டை இந்து மதம் (என்கிற இயற்கையை தொழுத வாழ்வியல்) உள்ளிழுத்து 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்றது. இதை நாம் அத்வைதமென்கிறோம். இந்த வாழ்வியலால் ஈர்க்கப்பட்ட / இதிலிருந்து பிரிந்து போன மதங்கள் (வாழ்வியல்கள்) இன்றுவரை த்வைத கோட்பாட்டில் இயங்குகின்றன :-)

கடவுளே என்கிற நிலைப்பாட்டுக்கும், கடவுளை நம்புபவன்... என்கிற நிலைப்பாட்டுக்கும் இடையில், "காண்பதெல்லாம் கடவுள்" என்கிற நிலைப்பாடு இன்றும் இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் இயங்கமுடிந்தால் நம் உலகு அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்...

இந்த நிலையில் இருந்துகொண்டு, வாழ்க்கையை ஆராயாமல் இருத்தலே பெருந்தியானம், "சும்மாயிரு, சொல் அற!" என்பதாய்...

இந்த தியானம் அனைவர்க்கும் கைகூட நான் என்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் வேண்டி வணங்குகிறேன்.

Rhonda Byrne ன் Secrets என்கிற புத்தகம்... தனக்கு வேண்டியவற்றை பெருவிருப்பத்தோடு (seek)  மனக்கண்ணில் உருவாக்கிக்கொண்டு (visualise) நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தால் அவை கண்டிப்பாய் நிறைவேறும் (receive) என்ற அடிப்படை கோட்பாட்டை வரையறுத்து, அது எப்படி இயங்குகிறது என பல உதாரணங்களுடன் விளக்குகிறது. 

இந்த கோட்பாட்டை சற்று extrapolate செய்யலாமா?

மனித உயிர் ஒவ்வொன்றும் தன்னை கடவுளின் துகளாக உணர்ந்து, கடவுள்களால் நிறைந்த ஒரு உலகை நாடி, உருவகம் செய்து, அது நிறைவேற பெருவிருப்பம் கொண்டால், கண்டிப்பாய் நிறைவேறியே ஆகவேண்டும்!

அதற்கு நிற வெறி / மத வெறி / இன வெறி / மொழி வெறி / இன்னபிற வெறிகளை ஒதுக்க வேண்டும் என்ற பெருவிருப்பமும் வேண்டுதலுமே தொடக்கப்புள்ளி!

வேடிக்கை என்னவென்றால், எந்த நிறமும், இனமும், மதமும், மொழியும் அன்பாயிருக்கவே, ஒன்றிணைக்கவே உண்டானவை. இதை,, அன்பை,  'வெண்ணொளி' எனலாம் (White Light). 

ஆனால் இவற்றை பழகுபவர்கள் தாம் எதிர்பார்ப்பதை, கற்பிதங்கள் செய்து பயப்படுவதை அல்லது மகிழ்வதை ("fixing" causes for each and every result practitioners face, by heuristic logic) இவற்றின் வழியாகவே அணுகுவதால் நிறப்பிரிகை ஏற்பட்டு பல வண்ண (வெறி)ச்சிதறல்களாக இருக்கலாம், ஒருவருக்கு பிடித்த வண்ணம் இன்னொருவருக்கு ஆகாத வண்ணமாயிருக்கலாம்...

Life without Prism is a life without Prison (for our selves), well worth living for!

Let us fall in love with Love, today, again!காதலே காதலே தனிப்பெருந்துணையே!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்