ஒரு ஊர்ல வருமானத்துக்கு வழியில்லாம ஏழ ஒருத்தன் தவிச்சானாம். பல ஐடியாக்கள முயற்சி பண்ணிப்பாத்தும் முடிலயாம். "யப்பா!, இந்த அண்ணாடங்காய்ச்சி பொழப்புலயும் மண்ணு உளுந்திருச்சே!!"ன்னு ஆதங்கத்தில அளுக அளுகயா வந்ததாம். அளுக பெருசாகி, சோகம் அப்பிக்கிச்சாம். சோகத்தக்கொறைக்க சரக்கடிக்கலாம்னா அதுக்கும் காசில்லயாம். 'சே! என்ன பொழப்புடா இது!' ன்னு... அவனே காச்ச ஆரம்பிச்சிட்டானாம். மிச்சமானத பக்கத்தில உள்ள அளுகாச்சிங்களுக்கு தந்தானாம். சரக்கு, தளும்ப தளும்ப தந்த ஃபீலிங்ஸ்ல அங்க உள்ள காச்சிங்கள்லாம் ஒண்ணா சேந்து மப்புல ஒரு தொழில் தொடங்குனாங்களாம். காச்சுற தொழுலுதான்... தொழில் வளர வளர, ஒரு ஸ்டேஜில நாடாள்கிற ராசாவோட வருமானத்த விட இவிங்க வருமானம் அதிகமானத கண்ட ராசா காண்டாயி, 'இன்னைலேந்து காச்சுகிற வேலய அரசுடைமையாக்குறேன். நானே காச்சிறேன்!'னு வரிஞ்சி கட்டி காச்ச ஆரம்பிச்சாராம். தொழிலு கைய உட்டு போன சோகத்தில அந்த அண்ணாடங்காச்சிங்கள்லாம் க்யூல நின்னு சரக்கு வாங்கி அடிச்சி, உருண்டு பொரண்டு வூடுபோய் சேந்தாங்களாம். ராசாவுக்கு கஜானா நெம்பிகிட்டே இருந்துச்சாம். காச்சிங்களோட பொண்டு பிள்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!