வருடம் 1977. முந்தைய வருடம் 14 படங்கள். இந்த வருடம் 18 படங்கள்! வயது 22 மட்டுமே! இரவு பகலாய் உழைக்கும் தாகம், நடிப்பின்மீது மாளாத காதல், எந்த பாத்திரமானாலும் குருநாதர் இயக்கத்தில் நடிக்க தயார், தனக்கு ஸ்கோப்பே இல்லாத கதையானாலும் பரவாயில்லை! குருநாதர் பார்த்தார், 'இவனை ஒரு வழி பண்ணிடலாம்!' என ஒரு ரோல் தந்தார். திருமண வாழ்வை சில வருடங்கள் சுகித்தபின்னும், மனைவி மீது மாறாத காதல் இருந்தும், கண்ணில் படும் பெண்களையெல்லாம் மயக்க எந்த எல்லையையும் மீறக்கூடிய, உண்மை அறிந்த மனைவியிடம்கூட தன் குணம் மாறாமலே வசியத்தை தொடரக்கூடிய ஒரு ரோல். காமம் மட்டுமே உணர்வாய் சுற்றும் இவரது வலையில் சிக்குபவர் எந்தப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்தப்பெண்களே மனம் மாறி வேறு திருமண பந்தத்தில் இருந்தாலும்கூட! இவரிடம் வேலை செய்யும் குமாஸ்தா, ஒரு கட்டத்தில் இவரது பாவச்சுமைகளை சுமக்கத்தொடங்கி, நோயாளியாகி, வாழ்வு வெறுத்து, கோவில்களில் உபந்யாசம் செய்வார். அங்கும் துரத்திச்சென்ற இவரை கண்டதுமே அவருக்கு மனக்கொதிப்பு அதிகமாகி கன்னாபின்னாவென திட்டி மயங்கி சாய்வார். மன்மதனாய் வலம்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!