முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவந்தான்யா போராளி!!

இரண்டாம் உலகப்போர் பரவிக்கொண்டிருந்த நேரம். 

ஆண்டு 1941.

க்ரீஸ் நாடு, உலக நாகரீகத்தின் தொட்டில் என மேற்கத்திய தொல்லியலாளர்கள் கொண்டாடிய நாடு, ஹிட்லரின் நாஜி படையிடனரிடம் வீழ்ந்தது. 

நாடு ஆக்கிரமிக்கப்பட்டது.  

தனது வெற்றியை உலகிற்கு உரக்க தெரிவிக்க நாஜி படையினர் தேர்ந்தெடுத்தது அக்ரோபோலிஸ் எனப்படும் (அந்நாட்டின் தொன்மையின் சின்னமாய் நிற்கும்) ஒரு கட்டிடம்.

Akropolis?


கிரேக்க நாகரிகத்தின் உச்சம். ஏதென்ஸ் நகரின் மிக உயர்ந்த குன்றின் உச்சியில் மூன்று ஹெக்டேர் நிலத்தில் நிறுவப்பட்ட உன்னதமான கோட்டை போன்ற வசிப்பிடம். பண்டைய கட்டிட கலைகளின் உச்சம்! மிச்சத்துக்கு கூகுள் செய்வீர் :-)

அதன் உச்சியில் அது வரை பறந்துகொண்டிருந்த கிரேக்க கொடியை இறக்கி நாஜி சின்னமான ஸ்வஸ்திகா கொடியை ஏற்ற அவர்கள் முடிவு செய்து, அந்த உயர்ந்த கட்டிடத்தின் உச்சிக்கு ஒரு கிரேக்க வீரனை அனுப்புகின்றனர், 'உனது தேசியக்கொடியை இறக்கிவிட்டு, கழற்றிவிட்டு, அதே கம்பத்தில் எங்களது கொடியை பறக்கவிடு' என்ற உத்தரவுடன்.

ஏறியவன் இறக்கினான் தனது தேசியக்கொடியை, கழற்றினான்... ஸ்வஸ்திகா கொடியை தரையிலேயே கிடத்திவிட்டு, தனது நாட்டின் கொடியை இறுக அணைத்துக்கொண்டு...அந்த உயரத்தில் இருந்து குதித்து இறந்துபோனான்.

இந்தப்பதிவு அவனைப்பற்றியது மட்டுமல்ல. எனவே தொடர்ந்து பயணிப்போம்.

நாஜிப்படையினரே தங்கள் கொடியை அக்ரோபொலிஸ் உச்சியில் பறக்கவிட்டாச்சு.
ஒரு மாதத்திற்குள் யாருமே எதிர்பாராத, உலகையே ஆச்சரியப்படவைத்த நிகழ்வொன்று அதே உச்சியில் நிகழ்ந்தது.

பத்தொன்பதே வயதான மனொலிஸ் க்ளென்சோஸ் என்ற கிரேக்க இளைஞன், தனது நண்பனுடன் சேர்ந்து, நாஜி படையினரின் கண்களில் மண்ணைத்தூவி, அக்ரோபொலிஸ் உச்சிக்கு ஏறி, நாஜி கொடியை கிழித்து எறிந்தான், நாஜி வீரர்கள் கண்களில் சிக்காமல் மாயமாய் மறைந்துவிட்டான்!
"சிக்கினால் செத்தான்" என நாஜி வீரர்கள் ஒருபுறம் வெறியோடு தேட, மறுபுறம் நாஜி படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலப்பரப்பெங்கும் (கிரேக்கம் தாண்டியும்) இந்த ஒரே ஒரு செயல், சுதந்திரப்புரட்சி உணர்வு தீ போல் பரவ காரணமாயிற்று.

மனோலிசும் தோழனும் உலக அளவில் புகழப்படலாயினர்.

யார் இந்த மனோலிஸ்?

ஒரு சாதாரண கிரேக்க சிற்றூரில் பிறந்து ஏதென்ஸ் நகரில் உயர்கல்வி கற்க வந்தவன், 1938 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி பின்னாளில் கிரேக்கத்தை நெருங்குகையில் கிரேக்க ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கிறான். சிறு வயது (17!) என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டும், ஏதாவது ஒரு வகையில் நாஜி எதிர்ப்பை காட்ட எண்ணி செஞ்சிலுவைச்சங்கத்தில் இணைகிறான். அதன் பின்னர்தான் அக்ரோபொலிஸ் சாகசம்...

அவன் யாரென தெரியாததால் In Absentia என்ற வகையில் நாஜி நீதிமன்றம் வழக்கு நடத்தி மனோலிசுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

அவன் எளிதில் சிக்குவதாயில்லை. ஒரு ஆண்டு கழித்து நாஜிப்படைகள் தொடர்தோல்வியை சந்தித்து ஹிட்லரின் கனவு வீழப்போகும் நிலையில் பிடிபடுகிறான்.

சிறை, சித்ரவதை... காசநோயுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறான் (நாஜிகள் Allied Army யிடம் சரணடைந்த நேரம் அது).

சிறிது காலம் மட்டுமே அவனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிகிறது. ஏனெனில் அப்போது உள் நுழைந்த முசோலினியின் இத்தாலிய பாசிச படை அவனை மீண்டும் சிறையில் தள்ளுகிறது ('உள்ளூர் பெரிய மனுசனை எல்லாம் ரவுண்டு கட்டி அடி!' என்பதாக). ஆண்டு 1943.

மூன்று மாத தண்டனைக்குப்பின் வெளிவருகிறான். 

கிரேக்கத்தில் உள்நாட்டு யுத்தம் (civil war) சில காலம் கழித்து தொடங்குகிறது. அவனது இடது சாரி சிந்தனைகளை குற்றமாய் சொல்லி தேசிய அரசு அவனை 1948 இல் மீண்டும் சிறையிலடைத்து வழக்கு நடக்கு பல மரண தண்டனைகளை விதிக்கிறது.

நாஜி எதிர்ப்பு தீரச்செயலால் நாட்டின் கனவுப்புரட்சியாளனாக மக்கள் அவனை கொண்டாடத்தொடங்கியதும் அவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைகிறது. 

இடையில் சிறையிலிருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வென்று அரச அவையில் பதவி பெறுகிறான்.

பதவியேற்றதும் அவன் செய்த முதல் செயல், சாகும்வரை உண்ணாவிரத போராட்டம், 'என்னைப்போன்று அரசியல் காரணங்களுக்காக மட்டுமே சிறையில் அடைபட்டும் தனித்தீவுகளில் சிறைவைக்கப்பட்டும் இருக்கும் என் தோழர்கள் ஏழு பேர், தேர்தலில் வென்றவர்கள், விடுவிக்கப்படும் வரையில் போராடுவேன்'!

அவர்கள் அனைவரும் விடுதலை ஆகின்றனர். அவனும் விடுதலை பெறுகிறான். ஆண்டு 1954.

நான்கு ஆண்டுகள் கழிகின்றன. Cold war எனப்படும் 'பனி யுத்தம்', சோவியத் கம்யூனிசத்துக்கும் அமெரிக்க கேபிடலிசத்துக்கும் நிகழும் பல்லாண்டு யுத்தம். இதில் மனோலிஸ் 'சோவியத் உளவாளி' என முத்திரை குத்தப்பட்டு கிரேக்கத்தை ஆளும் கம்யூனிச எதிர்ப்பு ஆட்சியினரால் மறுபடியும் சிறைவைக்கப்படுகிறான்.

சோவியத் ரஷ்யா தனது எதிர்ப்பை பதிவு செய்ய அவனது படத்துடன் கூடிய ஸ்டாம்ப்பு ஒன்றை வெளியிட்டு கௌரவிக்கிறது.

பதிலுக்கு கிரேக்கமும் ஒரு ஸ்டாம்ப்பு வெளியிடுகிறது, கம்யூனிசத்தை எதிர்த்ததால் ரஷ்யாவால் கொல்லப்பட்ட 'இம்ரெ நாஜி' என்கிற ஹங்கேரிய அதிபரின் படம் தாங்கிய ஸ்டாம்ப்பு.

நான்கு ஆண்டுகள் சிறையில் கழிய, மக்களின் நெடும் போராட்டம் காரணமாய் மனோலிஸ் 1962 இல் விடுதலையாகிறார்.

(இடையில் 1961இல் மீண்டும் தேர்தலில் வெல்கிறார்).

ஆண்டு 1967. கிரேக்கத்தில் ராணுவ ஆட்சி அறிவிக்கப்படுகிறது. 21 ஏப்ரல் 1967, அதிகாலை இரண்டு மணிக்கு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மனோலிஸ் கைது செய்யப்படுகிறார். நாட்டிலுள்ள அத்தனை அரசியல்வாதிகளும் அதே போல கைதாகிறார்கள்.

மக்களாட்சி மீளவேண்டும் என்கிற முழக்கம் மெல்ல வலுப்பெற, நான்கு ஆண்டு சிறைவாசத்திற்குப்பிறகு மனோலிஸ் மீண்டும் 1971 இல் விடுதலையாகிறார்.

தனது நாற்பத்தொன்பது வயதுக்குள் ஏறத்தாழ இருபத்தொன்பது ஆண்டுகள் விட்டுவிட்டு சிறைவாசம்!

1974 இல் கிரேக்கத்தில் மக்களாட்சி மீண்டும் மலர்கிறது. அவரது உழைப்பு அதற்கு துணைநிற்கிறது. 

1981 இல் மீண்டும் கிரேக்க பார்லிமென்டில் கால்பதிக்கிறார்.

1984 இல் ஐரோப்பிய பார்லிமென்டிலும் அங்கத்தினராகிறார்.

ஒரு மிகப்பெரிய கட்சிசியின் தலைமைப்பொறுப்பும் அவர் வசம்.

அப்போது அவர் செய்தது எவரும் எதிர்பாராதது!

தனது பார்லிமென்ட் பொறுப்புகளை உதறி ஒரு சிறிய பிராந்திய கவுன்சில் தலைவராக போட்டியிட்டு வெல்கிறார். அவரது இலக்கு, 'Grassroot Democracy' என அழைக்கப்படும் உண்மையான மக்களாட்சியை அப்பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தியபின் நாடுமுழுவதும் செயல்படுத்துவது!

திட்டம் பெரிய வெற்றி. ஆனால் உடனிருந்தோரின் இலக்குகள் மாறிப்போக அவர் மட்டும் 1989 வரை தொடர்கிறார்.

அரசியலிலும், மாற்றங்களை நோக்கிய போராட்ட தளங்களிலும் (activism) தொடர்ந்து இயங்குகிறார்.

2010 இல் ஏதென்சு நகரில் ஒரு எதிர்ப்பு போராட்டத்தில் மக்களுடன் இணைந்து போராடுகிறார். ஒரு காவலர் வீசிய கண்ணீர்புகை குண்டு ஒன்று மனோலிசின் முகத்தை தாக்கி காயம் செய்ய, ஸ்ட்ரெச்சரில் போராட்ட களத்திலிருந்து தூக்கிச்செல்லப்படுகிறார்.  அப்போது அவரது வயது எண்பத்து எட்டு!

2012 இல் இன்னொரு போராட்டம். 90 வயதான மனோலிஸ் போராட்ட களத்தில் ஒரு காவலர் இவரது முகத்தில் ஸ்ப்ரே செய்த கண்ணீர் புகை வாயுவால் தாக்கப்பட்டு வீழ்கிறார். அதே ஆண்டு மீண்டும் தேர்தலில் வெல்கிறார். வயது 90!!

2014 இல் கிரேக்கம் சார்பாக ஐரோப்பிய பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட்டு கிரேக்க வரலாறு காணாத எண்ணிக்கையில் வாக்குகள் தந்த வெற்றியுடன் ஐரோப்பிய பார்லிமென்டில் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் தடம் பதிக்கிறார்! வயது 92!!!

2015 இல் தனது பதவியை துறக்கிறார்.

இத்தனை போராட்டங்களுக்கும், சிறை தண்டனைகளுக்கும், அரசியல் செயல்பாடுகளுக்கும் இடையில் செய்தி நாளிதழகள் நடத்தியிருக்கிறார், பல நூல்கள் எழுதியிருக்கிறார், பல உலகளாவிய விருதுகள் வென்றிருக்கிறார். 

இத்தனைக்கும் மேலாக, வெள்ள இடரிலிருந்து நிலத்தை காக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், நிலத்தடி நீரை வெள்ள நீரைக்கொண்டே வளப்படுத்தவும் பல தடுப்பணைகள் கொண்ட நீர் சேமிப்பு முறை ஒன்றை வடிவமைத்து செயல்படுத்தியிருக்கிறார்!!!!

இவ்வளவு வியத்தகு செயல்கள் செய்தவரா? 'எனக்கே இவரை பாக்கணும்போல இருக்கே!' என்கிறீர்களா?!

மன்னிக்கவும். இவரை நாம் சந்திக்க இயலாது. ஏனெனில். இன்றுதான் அவர் தான் நேசித்த கிரேக்கத்தில், தான் கண்ட கனவுகளுக்காக போராடிய கிரேக்கத்தில் மாரடைப்பால் காலமானார்.

Ladies and Gentlemen, I proudly introduce you to one of our world's last, finest freedom fighters and evolutionaries who also loved their people and soil apart from the ideologies!

True heroes like him are not born heroes, they make themselves.

Manolis Glenzos lived by it.

Regardless of our age, we could still connect with our inner Manolis and make a huge difference to our world.

Long live Manolis!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்