கோல்கேட் வேதசக்திக்கு மாறியாச்சே!
சில ஆண்டுகள் முன் என் பொறியியல் கல்லூரி மாணவர்க்காக முன்னாள் மாணவர்கள் + க.நிர்வாகம் சேர்ந்து நடத்திய ஒரு கலந்துரையாடலில் பழைய மாணவனாய் கலந்துகொண்டேன்.
மாணவர்களை ஊக்குவிக்க, எதிர்காலத்திற்கு வழிகாட்ட என சில தொழில்முனைவோரும் பெறுநிறுவனங்களின் மேலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் எளிதாய் வேலைவாய்ப்பு பெற என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்ற மையப்புள்ளியின் மீது நடந்த உரையாடல்.
அனுபவப்பகிர்தல்கள், வினாக்களுக்கு தெளிவுதரும் விடைகள் என நகர்ந்த நிகழ்வின் இறுதியில் ஒரு இறுதி ஆண்டு மாணவன் தயங்கி எழுந்து, கையில் மைக்கை வைத்துக்கொண்டு ஒரு வினா எழுப்பினான்; 'மூன்றாமாண்டு, நான்காமாண்டில் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. அது போதாது. குறிப்பாய் ஆங்கிலமொழி ஆளுமையின் அவசியம். தமிழ்மொழியில் பள்ளி கற்ற என்போன்றோர் தடுமாறுகிறோமே?'
தலைமை வகித்தவர், 'கவலை வேண்டாம். நம் கல்லூரி நூலகத்தில் ஆங்கில சிறார்கதை நூல்கள் வைத்துள்ளோம். படிக்க முயலலாம், தேவைப்பட்டால் கல்லூரி முடிந்த பொழுதுகளில் தனி வகுப்புகள் நடத்தலாம்...' என்றார்.
மேடையில் அமர்ந்திருந்த நண்பர் குழுவும் self confidence ஐ மையமாக வைத்து தம் அநுபவங்களை விடையாய் பகிர்ந்தனர்.
தவிப்போடு மைக்கை இடைமறித்து வாங்கி, அனுமதியின்றியே நான் அந்த மாணவனிடம் உரையாடினேன்:
'கண்ணா, என்ன கோர்ஸ் படிக்கிற?'
"சிவில் சார்"
'நல்லா கட்டடம் கட்டவேன்னு உன்மேல உனக்கு நம்பிக்கை இருக்கா?'
"இருக்கு சார்"
'நம்ம மாநிலத்திலயே வேலை தேடப்போறியா? வெளி மாநிலங்களிலுமா?'
"இங்கேதான்சார்"
'அப்ப கவலையே வேண்டாம். உன்னிடம் திறமை இருந்தால் உன் திறமை தேவைப்படுவோர் உன் மொழி கற்று உன்னிடம் உரையாடுவர்! அது சைகை மொழியானாலும்!! கூகுள் ஏன் இன்று ஹிந்தி பேசுகிறது என யோசிப்போமே. அவர்களுக்கு வணிகத்தேவைக்காக அனைத்து இந்திய மொழிகளிலும் கூப்பாடு போட்டு விற்பர். நீ உன் திறமையில் கவனம் செலுத்து. வேலை நிச்சயம்!?'
ஆயரம் வாட் ஒளி கண்களில் மின்ன நன்றி சொல்லி அமர்ந்தான்.
எத்தனை இளைஞர்ரகளிடம் நான் இதை நேரில் சொல்லமுடியும்? கல்லூரிகளில் வேலையல்லவா இது?
இன்றுவரையில் எனது பொறியியல் கல்லூரியின் அனைத்து பொறியியல் வேலைகளையும் (புதிதாய் செய்வதாகட்டும், பழையதை பழுதுபார்ப்பதாகட்டும்) வெளியிலிருந்து யார் யாரோ வந்து பணம் பெற்று செய்து தருகிறார்களே தவிர இந்த வேலைகளில் மாணவர்களை கற்றல் நிமித்தமாகவாவது ஈடுபடுத்த நிர்வாகத்திற்கு பெருந்தயக்கம் இருந்துவருகிறது.
இப்போது கூட கல்லூரி வளாகத்தில் நீர் தரும் டிஸ்பென்சர் நாள்கணக்கில் பழுதாகி நின்றாலும் மாணவர்கள் போராடுவார்களே தவிர 'நாங்களே செஞ்சிக்கறோம் பாஸ்' என முனைப்பதில்லை...
கேம்ப்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தும் நிறுவனங்கள், 'they are not industry ready' என கழுவிச்செல்ல, 'அப்பவே சொன்னோம், கான்ஃபிடன்ஸ் முக்கியம்னு. ஓட்ட இலங்க்லீஷ் அதை தராதுப்பா. லேங்வேஜ் இஸ் இம்ப்பார்ட்டண்ட்!!!' என தாறுமாறாய் ப்ளேஸ்மெண்ட் செல் ஆறுதல் தர, மாணவர்கள் இன்னும் சுயமுனைப்பிழந்து சோகமாய் நகர்வது பல கல்லூரிகளில் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது...
கூகிள் ஹிந்தி கற்றதுபோல இன்று கோல்கேட் "வேதசக்தி" கற்றதும் நடந்நவண்ணமே இருக்கிறது (வெள்ளக்காரன்லாம் ஸ்மார்ட்டுப்பா!!!!).
120 கோடி பேர் உள்ள நம் நாட்டில் ஏன் இன்றுவரை கூகிள், ஃபேஸ்புக், பேபால் போன்ற "ஸ்டார்ட்டப் டு மெகாபிசினஸ் இன் எ டீகேட்" மிராகிள்கள் நடப்பதே இல்லை என்று மருள்பவரா நீங்கள்? 'இஸ் இட் ஆல் க்ளியர் நௌ பாஸ்?!'
கருத்துகள்
கருத்துரையிடுக