கையில் விரிந்திருக்கும்
புத்தக பக்கங்களின்வழி
என்னை வாசித்துக்கொண்டிருக்கிறார்
ஓஷோ.
உயிர்சுமந்து உள்நுழைந்து
அழுக்காய் வெளியேறும்
இடைவெளியில் என்னை
வாசிக்குது மூச்சுக்காற்று.
சுற்றியிருக்கும் மரங்களும்
பெயர்தெரியா உயிரனைத்தும்
ஐம்பூதங்களும் என்னை
இடையறாது வாசிக்க
நானெங்கே தனியனாவேன்?
எங்கோ பால்வெளியில்
காலம் துவங்குமுன்
ஒரு பெருநிகழ்வில்
சிதறிய சிறுபுள்ளியின்
துகளனைத்தும் ஒன்றுதானே?
ஆமெனில் ஒன்றென்பது
தனியா இல்லையா?
காலம் விடைதரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக