ஒரு விரல். சாமான்யரின் தேவைகள்: ++++++++++++++++++++++ சுத்தமான காத்து, தண்ணி, உணவு குப்பை இல்லாத தெரு மரங்கள் நிக்கிற சாலைகள் நேர்மையான நிர்வாகம் திறமையான கல்வி சாமான்யரின் கவலைகள்: -------------------------------------------- சாக்கடை நாத்தம் குப்பை மலை நாத்தம் நச்சுக்காத்து நோய் தரும் தண்ணி நிழலில்லா சாலைகள் லஞ்சத்துக்கு காசு விஷ உணவு எட்டாத கல்வி வறண்ட நிலம் கந்துவட்டி ... சாமான்யருக்கு தெரியாத கவலைகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ குறையும் நோயெதிர்ப்பு சக்தி உடலில் புகும் புதிய நோய்கள் விஷமே உணவு மறைநீர் பருவம் தவறிய மழை காணாமல் போகும் நிலத்தடி நீர் சூழப்போகும் தனிமை ... தேவைகளுக்கும் கவலைகளுக்கும் இடையில் தன்னை நம்பிய வயிறுகளை நிரப்ப இவர் அந்தரத்து கயிற்றில் நித்தமும் கழைக்கூத்து நடத்துகையில் தரையில் கொடிபிடித்து நித்தம் ஒரு hashtag... ############################ #நடுக்கடலில்_துப்பாக்கி_சூடு #ஆணவக்கொலை #ஸ்டெர்லைட் #கதிராமங்கலம் #எட்டு_வழி #எண்ணூரு #தாதுமணல் #வன்புணர்வு_...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!