#உலக_தாய்மொழி_தினம்
அழகே தமிழே அழகிய தமிழே என் தாய்மொழியே...
இன்று உலக தாய்மொழி தினம். இந்த தினத்தை சிறப்பிக்க நான் எடுத்திருக்கும் இப்பெருவிழாவில் கலந்துகொள்ள மகிழ்வோடு வந்திருக்கும் ஏனைய உலகப்புதுமொழிகள் அனைத்துக்கும் என் முதுவணக்கம்.
மொழி என்பது ஒரு நிலப்பரப்பை, வாழ்வியலை பிண்ணிப்பிணைப்பது, தொப்புள்கொடி போல.
இங்கு வந்திருக்கும் மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பு என் தாய்த்தமிழுக்கு உண்டு.
அதன் பெயர் சேய்தமிழ்!
ஆம், வேறெங்கும் இல்லாத சிறப்பாக எம் மொழியில் மட்டுமே எம் மழலையர், சிறார்கள் எளிதாய் எம்மோடு உரையாடும் வகையில் சொற்கோவைகள் உண்டு.
தச்சு மம்மம், உம்மா போன்ற சொற்கள், கேட்பவருக்குள் கடத்தும் ஆனந்தப்பரவச உணர்வுகள்... உவ்வா, ஊ என்ற சொற்கள் கடத்தும் வேதனை வலி, வேறு எந்த மொழியிலும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை என அறுதியிட்டுச்சொல்கிறேன்!
வாழிய செந்தமிழ், வாழிய சுற்றம், வாழிய தச்சு மம்மம்!
வர்ட்டா!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக