ஒரு விரல்.
சாமான்யரின் தேவைகள்:
++++++++++++++++++++++
சுத்தமான காத்து, தண்ணி, உணவு
குப்பை இல்லாத தெரு
மரங்கள் நிக்கிற சாலைகள்
நேர்மையான நிர்வாகம்
திறமையான கல்வி
சாமான்யரின் கவலைகள்:
--------------------------------------------
சாக்கடை நாத்தம்
குப்பை மலை நாத்தம்
நச்சுக்காத்து
நோய் தரும் தண்ணி
நிழலில்லா சாலைகள்
லஞ்சத்துக்கு காசு
விஷ உணவு
எட்டாத கல்வி
வறண்ட நிலம்
கந்துவட்டி
...
சாமான்யருக்கு தெரியாத கவலைகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறையும் நோயெதிர்ப்பு சக்தி
உடலில் புகும் புதிய நோய்கள்
விஷமே உணவு
மறைநீர்
பருவம் தவறிய மழை
காணாமல் போகும் நிலத்தடி நீர்
சூழப்போகும் தனிமை
...
தேவைகளுக்கும் கவலைகளுக்கும் இடையில் தன்னை நம்பிய வயிறுகளை நிரப்ப இவர் அந்தரத்து கயிற்றில் நித்தமும் கழைக்கூத்து நடத்துகையில் தரையில் கொடிபிடித்து நித்தம் ஒரு hashtag...
############################
#நடுக்கடலில்_துப்பாக்கி_சூடு
#ஆணவக்கொலை
#ஸ்டெர்லைட்
#கதிராமங்கலம்
#எட்டு_வழி
#எண்ணூரு
#தாதுமணல்
#வன்புணர்வு_கொலை
#பசு
#மணல்_கொள்ளை
#ஆத்த_காணோம்
#கொளத்த_காணோம்
#ஆசிட்_வீச்சு
#அரசியல்_அசிங்கங்கள்
#போர்
#சாதீய_எதிர்ப்பு
#மத_எதிர்ப்பு
#தொல்குடி_வெளியேற்றம்
#சின்ன_தம்பி
#ஏதாவதொரு_மறியல்
#உண்ணாவிரதம்
#கடையடைப்பு
#மதுவை_விலக்கு
#விவசாயி_சாவு
என தேவைகளையும் கவலைகளையும் இணைக்கும் # புள்ளிகள்...
அறுபது / எழுபது கோடி ஆட்காட்டி விரல்களில் மைதீட்ட ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாளை ஒதுக்கினால்... அடுத்த நாளில், பாதிக்குமேல் மையில்லா விரலோடு நாடு இருந்தால் விளங்குமா?
அரசு வேலை / சலுகை / மானியம் / நிதியுதவி வாங்குபவர் யாராக இருந்தாலும்
அரசு கட்டமைப்புகளை (சாலை / ரயில் / விமான / கப்பல் / படகு) பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும்
ஓட்டு போட்டால்தான் இவை கிடைக்கும் / தொடரும் / பயன்படுத்த முடியும் என ஒரு சட்டம் இயற்ற ஏன் அரசுகள் முனையவில்லை?
ஓட்டு அளிப்பதற்கு எதற்கு வாக்குச்சாவடிகளுக்கு (பூத்துக்கு) அனைவரும் வரவேண்டும்?
மொபைலில் சகலமும் செய்யும் தலைமுறை இருந்தும் மொபைல் வழியாக வாக்கு பதிய தொழில்நுட்பம் பயன்படுத்த ஏன் தயக்கம்?
Phone Pe, Bhim என மொபைல் வழியே வங்கிகள் இந்தியாவில் செல் டவர் உள்ள இடங்களிலெல்லாம் நுழைந்தபின் வாக்குச்சாவடிகளும் அவ்வழியே நுழையலாமே! இது ஏன் மாறவில்லை?
(ஒரு ஓட்டு ஒருமுறையே, பயோமெட்ரிக் சாகசங்களை ஆதாருடன் ஒப்பிட்டு உடனடி சரிபார்க்கும் வசதிகள் வந்தாச்சே. ஓட்டு போடுபவரின் படத்தைக்கூட பதிவு செய்யும் வசதியும் வந்தாச்சே)
"நூறு சத ஓட்டுப்பதிவு கட்டாயம், யாரையும் பிடிக்காதவங்க நோட்டாவில குத்துங்க!" என ஏன் அரசுகள் முடுக்க தயங்குகின்றன?
என்னுடைய தேவைகளை நிறைவேற்றி கவலைகளை அகற்றி என் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களை முன்வைப்பவருக்கே என் வாக்கு என ஒவ்வொரு ஆட்காட்டி விரலும் முடிவுசெய்தால் மட்டுமே கழைக்கூத்தாடி பிழைப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இரண்டாயி₹த்துக்கும் ஐயாயி₹த்துக்கும் டான்சு ஆடினா...அந்தரத்துக்கயித்தில ஆடிகிட்டேதான் இருக்கணும்...
ஒரு சொட்டு மையில் ஐந்தாண்டுக்கு வாழ்வியலை அடமானமாக தருவதா அந்த ஒரு சொட்டு மையினால் எதிர்காலத்துக்கு வெளிச்சம் சேர்ப்பதா என்பதை நம் விரல்தான் தீர்மானிக்கிறது.
#பாத்து_திட்டி_முடங்கிற_டெமாக்ரசி, #பார்ட்டிசிபேடிவ்_டெமாக்ரசி இவற்றில் எது வேண்டுமென்று தெரியாத முட்டாள்களா நாம்?
நச்சுன்னு ஒரு குட்டு:ஓட்டு பாேடாதவருக்கு ஒன்னு, காசு வாங்கிட்டு நம்பிக்கை துராேகமுன்னு பயந்து காெடுத்தவருக்கு பாேட்டவருக்கு ஒன்னு, தலைவர்,தலைவி,மதம், சாதி மயக்கத்தில் பாேட்டவருக்கு ஒன்னு. இப்படியெல்லாம் தவறுகள் செய்து தன் குடும்பம்,கட்சிக்கு வலு சேர்க்க எத்தனித்து ஓட்டு கேட்டவருக்கு மட்டும் பல ..............! என்று தணியும் இந்த அடிமையில் மாேகம்?
பதிலளிநீக்குடெக்னாலஜி மூலம் சாத்தியப்படும்...
நீக்கு