முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Hats Off சீதக்காதி!!!!

செத்தும் கொடுத்தான்... கூத்துக்கலையே மூச்சாக வாழும் ஆதிமூலம். 1950களில் கூத்தின்மேல் காதலாகி மேடை ஏறியவர், கூத்து நாடகமாய் தேய்ந்து இன்றைய சினிமாவிலும் கைபேசிகளிலும் சிரிப்பாய் சிரிப்பதை மௌனமாய் கடந்து, வறுமையிலும் கொள்கையோடு (லைவ் ஆடியன்சின் முன்தான் நடிப்பது, நடிப்புத்திறனின் மதிப்பு உடனுக்குடன் லைவ்வாக கிடைப்பதில் உள்ள ஆனந்தமே தன் இதயத்துடிப்பு) தனது எழுபத்தி மூன்றாவது வயதிலும் 'ஐயா' என்ற மதிப்போடு, சொற்ப பார்வையாளர்கள் முன் உயிரைக்கொடுத்து நடித்து, நடிக்கையிலேயே உயிர் விடுகிறார். வறுமையில் உழலும் மனைவி, அவசிய, அவசர ஆபரேசனுக்கு பணமின்றி பேரன், மகளின் இயலாமை கலந்த மௌனம், அவரை மிக நேசிக்கும் அவரது ட்ரூப்பின் சக கலைஞர்கள், அவரது நிழல்போன்ற உதவியாளர், அவரது மறைவு எப்பேர்ப்பட்ட இழப்பு என்பதுகூட தெரியாத பொதுமக்கள், இவர்கள் எல்லோரையும் விட்டுப்போய்விடுகிறார். ஒரு மாதம் துக்கம் கடைபிடித்தபின் குழு கூடி, அவரது நினைவாக தொடர்ந்து நாடகங்கள் நடிக்க முடிவு செய்கிறது. ஒத்திகை தினங்களில் ஒரு விந்தை நிகழ்கிறது. ஒவ்வொரு தினத்தில் குழுவின் வெவ்வேறு கத்துக்குட்டி நடிகர்கள்...

ஸ்பைடி! ஹா!!

ஸ்பைடி, ஹா! ப்ளாக் அன்ட் ஒயிட் ஸ்பைடியிலிருந்து ஸ்பேஸ் ஏஜ் ஸ்பைடி வரை ஒன்று சேர்ந்தால்?! கும்மாளங்கோ! கொண்டாட்டங்கோ! தொந்தியும் தொப்பையுமாய் முதல் நிறக்குருடு ஸ்பைடி வரை அதிரடிக்கிறார்கள். திரையெங்கும் விரியும் வர்ண ஜாலங்களும், நரம்புகளில் துள்ளலேற்றும் இசையும் நம்மை அவர்கள் உலகத்திற்கே வலைபோட்டு இழுத்துச்செல்கின்றன! நகைச்சுவை இழையோடும் கதையில் ஒவ்வொரு ஸ்பைடி அறிமுகமும் க்ரியேடிவிடியில் வேற லெவல்! மைல்ஸ், You got Miles to go :-) இன்னும் ஐந்து நாட்களில் ஐந்து பெரிய படங்கள் ரிலீஸ். உலகையே காக்கும் ஸ்பைடியானாலும் கூட, கண்டிப்பாய் தியேட்டர்களை விட்டு துரத்திவிடுவார்கள்.  வீட்டில் அனைவரையும் அழைத்துச்சென்று 3D இல் பார்த்து கொண்டாட உங்களுக்கு இருப்பது ஐந்து நாட்கள் மட்டுமே! அந்த என்ட் க்ரெடிட் சீக்வன்ஸ் ரியலி மெஸ்மரைசிங் அண்ட் ஆசம்! கதை?...  கதை என்னவா இருந்தா என்ன?! நாடி நரம்பெல்லாம் கார்டூன்கள் ஓடும் ஒரு பொடியனின் ரிவ்யூ: 'இது வேற லெவல். இது வேற லெவல்! இது வேற லெவல்!!!!'

மீன் திண்ணி பசுக்கள்!

"பசு மாடு வெஜிடேரியன்பா! உடான்சு உடாதே" என்றான் நண்பன். 'அதானே!' என நீங்களும் ஆமோதிப்பது புரிகிறது. ஆனால்... இரண்டாம் உலகப்போரில், இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய டெக்னாலஜி இல்லாததால், கார்ப்பெட் பாமிங் எனப்படும் 'வெடிகுண்டு மழை', போர் விமானங்களில் எதிரி நாட்டின் மீது பறந்து கீழுள்ள நிலப்பரப்பில் போர்வை போர்த்துவது போல நெருக்கமாக குண்டுகள் வீசுவது (சாகிறவன் எதிரி நாட்டான்தானே) மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட திட்டம். கணக்கற்ற குண்டுகள், நிலத்தை சூழ்ந்துள்ள கடல் பரப்பிலும் விழுந்து தொலைத்தன. போர் முடிந்து வணிகம் மீண்டும் தலை தூக்கையி்ல், கடல் வணிகம் மட்டும் 'குண்டு' பயத்தில் தடுமாறியது. வலை வீசி மீன் பிடிப்பது போல, குண்டுகளை பிடித்தாலென்ன என்ற ஐடியா யாருக்கோ தோன்ற, பெருவிசைப்படகுகளின் இடையில் விரித்துக்கட்டிய, பெரிய கண்கள் கொண்ட முரட்டு வலைகளில் கடல் மடியை சல்லடை போல் சலிக்க, குண்டுகள் ஏராளமாய் மீன்கள் போல வலையில் மாட்ட, அப்புறப்படுத்துவது எளிதாயிற்று. ஒரு கட்டத்தில் குண்டுகள் குறைந்துபோக, இந்த நுட்பத்தை சற்றே சீர்திருத்தி (பெரிய கண்கள...

மோடி 4.0

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில்... (ஆரியக்கூத்து - ஆரிய நாட்டிலிருந்து வந்து கழைக்கூத்து இடுவோர், பறை கொட்ட கயிற்றின்மீது நின்று அழகிய நடனம் ஆடு்வது என குறுந்தொகையில் பெரும்பதுமனார் பதிந்துள்ளார்) ஆட்சிக்கு வந்தபோது கட்சி சார்பற்ற இந்தியனாக மிக மகிழ்ந்தேன். நல்ல மாற்றங்கள் நிறைய வருமென பழைய கனவை (1998 இல் இந்தியா அணு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியபோது கண்ட கனவை) மீண்டும் காணத்தொடங்கினேன். முதல் இரண்டு ஆண்டுகள், செயல் வேகம் கண்டு பிரம்மித்தேன்.  மேக் இன் இந்தியா - நல்லதென்று நம்பினேன். டிமான்... நல்லதென்று நம்பினேன்.  இன்னும் பல அறிவிப்புகளையும் அவ்விதமே. சொதப்பலான அமலாக்கங்கள், பேச்சு பேச்சாக மட்டுமே நின்ற பல முழக்கங்கள், மெல்ல தலைதூக்கும் மத வெறுப்புகள், அதனாலான இழப்புகள், தமிழகத்தில் மத்திய ஆதரவோடு நடக்கும் சந்தர்ப்பவாத அரசியல், நாடளவில் சுதந்திர நிறுவனங்களின் செயல்பாடுகளில் குறுக்கீடு, இப்போது ராமர் கோவில் கட்ட அவரது கட்சியின் மூல அமைப்புகளின் அழுத்தம்... ஏ டி எம் இல் ரீ காலிபரேஷன் இல்லாமல் புதிய நோட்டுக்கள் வந்தி...

கோவில் இல்லாத ஊரில்...

பண்டங்கொரு கோவிலிருந்தது. கோவிலில் நந்த வனமிருந்தது. வனம் நிறைய பூவிருந்தது. பூ நிறைய தேனிருந்தது. தேனருந்த தேனி வந்தது. பூவுண்ண பூச்சி வந்தது. பூச்சி உண்ண பறவை வந்தது. வழி நெடுக மரமிருந்தது. இவை தங்க கூடு தந்தது. மழை நிறைய ஈர்த்து தந்தது. மரமருகே வயலிருந்தது. வயலில் பல பயிரிருந்தது. தேனியும் பறவையும் சூல் சேர்த்தது. வயல் நிறைய கதிர் விளைந்தது. எல்லா வீட்டிலும் வயிறு நிறைந்தது. மனதில் நன்றி பெருகி வழிந்தது. ஊர் கூடி குதூகலித்தது. தேரிழுத்து பொங்கலிட்டது. இன்றங்கே (கோவிலில்) தளமிருக்குது. பளபளப்பாய் விளக்கிருக்குது. தல மரம் பூ வனம் எங்கிருக்குது? கான்க்ரீட் தளமிட்டு பூசி மெழுகிய, தாவரங்களற்ற கோவிலின் உள்ளே, சோகம் ததும்ப  இறை உறைந்திருக்க, இறைசோகம் உணராது நாமும் நம் வேண்டுதலின் சுமைகளை ஏற்றிக்கொண்டே இருக்கிறோம் சிறு குழந்தைகள் போல... அபிஷேகங்களால் கரைக்க இயலாத இறைசோகத்தின் மீது விழும் ஒவ்வொரு இலையும் மலரும் வலி மிகுந்ததாகவே இறை உணரக்கூடும்.   மகிழ்வான இறை மட்டுமே வரங்கள் தருமாம்.

எக்சாம்!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பேய்கள் கூத்தாடும் மதிய நேரம். அடுத்தநாள் காலையில் கெமிஸ்ட்ரி தேர்வு, +2, பப்ளிக் தேர்வு. என் பள்ளி மைதானத்தில் நானும் நண்பனும் சீரியசாய் கிரிக்கெட் விளையாட்டில்; படிக்கிறதுக்கு இடையில ப்ரேக்! மைதானத்தில் சுற்றிக்கொண்டிருந்த அரை டவுசர்களை பிடித்து ரெண்டு டீம் சேர்த்து, உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல ஆக்ரோஷமான மோதல்; கார்க் பால் கிரிக்கெட். ரவுசு தாங்காமல் வேடிக்கை பார்க்க மேலும் சில அரை டவுசர்கள்; பௌண்டரி தாண்டி போகும் பந்தை பொறுக்கிப்போட்டால் அடுத்த மேட்சில் சேத்துக்குவோம் என :-) மேட்சின் திருப்பு முனை; நான் மெல்ல ஓடி வந்து லெக் ஸ்பின் போட, பந்து திரும்பிக்கூட பார்க்காமல் நேரே...நேரே செல்ல, மட்டையாளன், என் நண்பன், வலு கூட்டி சுழற்ற, பந்து தரையில் படாமல் பவுண்டரி நோக்கி பறக்க...சிக்சர் என அம்பயர் பொடியன் என் முறைப்பையும் தாண்டி கரங்கள் உயர்த்த... அது நிகழ்ந்தது! 'அம்மாஆஆஆஆஆஆ!' என்ற அலறல். பவுண்டரிக்கு வெளியே பாண்டியாடிக்கொண்டிருந்த ஒரு பொடியனின் தலையிலிருந்து ரத்தம்... கொட்டுகிறது! பந்தளவு தலையில் வீக்கம்! அடுத்த நொட...

முறிவு

வருட விடுமுறைக்காக இயூரோப்பிலிருந்து இந்தியாவுக்கு கிளம்புமுன்னர் என் நண்பர்கள் யாராவது, 'நீ இன்னும் ஒரு மாசத்தில அடுத்த ஊரில் இருக்கிற முதியோர் இல்லத்தில ஜட்டியோட நிக்கப்போற!' என சொல்லியிருந்தால், 'good joke!' என அதிர்வாய் சிரித்து நகர்ந்திருப்பேன்... 'அப்பா, நாங்களே வந்திடுவோம். நீ கூப்பிட வராதே' - நான்கு வயது மகள் 'பேசும் தெய்வமாய்' திரும்ப திரும்ப சொல்லிச்சென்றாள், அவள் அம்மாவோடு, ஒரு உறவினர் வீட்டுக்கு. 'நேரம் ஆச்சிம்மா. இருட்டா இருக்கு. நானே போய் அழைச்சிட்டு வரேன்'. கிளம்பி நாற்பது அடி நடந்திருப்பேன். என்ன இடறிற்று என்று உணர்வதற்குள், எழுவதற்குள், கை உடைந்து...தொங்கியது. 'பாத்து வரக்கூடாதாப்பா!' என உதவிக்கு ஓடி வந்த இருவரில் ஒருவர், 'ஒரு நிமிஷம். அப்படியே இருங்க. அப்டியே உருவி விட்டுர்றேன்'. மறுப்பதற்குள் கையை பிடித்து ஏதோ செய்ய... முன்னும் பின்னும் வலியே இல்லை; ஆனால் கை திருப்ப மூளை இட்ட கட்டளை கைக்கு சேரும்முன் எங்கோ தொலைந்தது... சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பா, என் குரல் கேட்டு வெளியே வந்து... உள்ள...