முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எனக்கொரு போதிமரம் வேணுமடா!

ஞானம் தரும் போதிமரம் இன்றளவும் இருப்பது ஓரிடத்தில் (புத்த கயா) மட்டுமே! ஏன் என்று என்றேனும் எண்ணியதுண்டா? (ஞானம் தேடி) புத்தன் ஓடாத  ஓட்டமா நாம் ஓடப்போகிறோம்?  ஓடி அலுத்தவனுக்கு அமர்ந்த இடத்திலேயே அள்ளித்தந்த ஞான வித்து, ஞான விருட்சம் அங்கு மட்டுமே அமர்ந்திருக்கவேண்டும் என்பது யார் இட்ட கட்டளை? நம்மைச்சுற்றி போதிமரங்கள் தேடிப்பார்த்து,  'மரமே இல்லையே!' என உணர்பவர் ஒவ்வொருவரும் ஞானவான்தானே! நமக்கான போதிமரத்தை நாமே நடுவோம் நம்மருகே.  வளர வளர ஞானம் வளரும்.

ஐந்து, நான்காகும்!

அல்லது 'விதை சுமக்கும் பெருவிதை'! ஈரிலையில் கூடு செய்து, கூட்டுக்குள் முட்டையிட்டு பாதுகாத்து பொறித்து குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கும் வரை உணவிட்டு...இத்தனையும் நடந்தது ஒரு ஒற்றை தேக்குமரக்கன்றிலே! பெரிதினும் பெரிது (பூமி) கிடைத்தும் போதாமல் தவிக்கும் நம் கண் முன்னே இடையறாது இயற்கை நடத்தும் இந்த அற்புதப்பாடம் கண்டதுண்டா கண நேரமேனும்? பேரண்ட வீட்டில், நட்சத்திரங்கள் கொண்டு தைத்த வான் கூரையின்கீழ், காற்று விசிறும் மரங்களிடையில், தொட்ட இடமெல்லாம் உயிர் முளைக்கவைக்கும் வெயில் மழை மந்திரக்கூட்டணியில், நம் வாழ்வு மட்டும் ஏனிப்படி கடினமாச்சி?  கதவென்ன ஜன்னலென்ன வீடென்ன காடென்ன வரையறைகள்? எதிலிருந்து எதைக்காக்க இந்த புதிய ஏற்பாடு. உலகின் முதல் பாலைவனம் நம் காலடித்தடமே தெரியுமா? பேராசை, பெரும்பயம் என்ற காலணிகளுடன் நாம் நடந்த தடத்தில் புற்கள்கூட முளைப்பதில்லை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர்? உணர்வர்? (மனிதனின் கால் தடம் படாத கானகத்தில் எண்ணற்ற மிருகங்கள் இருந்தும் ஒரு சுவடு மண்கூட மலடில்லை நட்பே!). குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நால்வகை நி...

முடிவற்ற ஒரே கதை சொல்லட்டுமா?

விழுவது ஒன்று மழையாக இருக்கலாம், விதையாய் இருக்கலாம், இலையாய், கிளையாய், செடியாய், மரமாய் இருக்கலாம்.  இவை தவிர வேறொன்றும் விழுந்ததில்லை பூமியில், தாவரங்கள் மட்டுமே இருந்த வரையில்.  நீரில் உருவான ஒற்றை உயிர் கை கால் முளைத்து கரையேறியதும் இவை அதற்கும் உணவு ஈதிருக்கலாம். உணவுண்டு கொழுத்த அவ்வுயிர் பல்கிப்பெருகும்போதும் ஈதல் தொடர்ந்திருக்கலாம். ஈதலின் "மூலம் ஏதென" அறியும் ஆவலில் வால் வளர்த்த ஒன்று மரமேறியிருக்கலாம். மரம் காட்டிய தூரமே எல்லையென வாழ்ந்திருக்கலாம். தூரத்து மரங்கள்மேல் மையலாகி தாவி பயணம் தொடங்கியிருக்கலாம். இவை கண்ட காட்சி, வாழ்ந்த வாழ்வு ஏதோ ஒரு புள்ளியில் சலிக்கவும் வானேற முயன்று தாவி தரையில் வீழ்ந்திருக்கலாம். முகத்தில் மண் துடைத்து நிமிர்கையில் இடையறாத தாவர ஈகை தொட்ட பூமியின் பரப்பெல்லாம் நிறம் மாறி வளம் ஓங்கி கோடானு கோடி உயிர் நிரப்பியதை கண்டு களித்து கூத்தாடி, 'நம் பிறவிப்பயனை கண்டாச்சு' என மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் வால் உதறி மனிதராகியிருக்கலாம். மனம் சிந்தனை வாக்கு என பிரித்தறியும் திறமை ஏதோ ஒரு புள்ளியில் கிட்ட,  ...

எண்ணச்சிதறல் - 3

ஆளற்ற கானகத்தில் விழும் மரத்திற்கு ஓசை உண்டா? சாலை கடக்கையில் வாகனத்தின் குறுக்கே சடுதியில் கடக்கும் ஓணானையோ, நாயையோ, ஆடையோ, அணிலையோ காப்பாற்ற நொடியில் ப்ரேக் அடித்து, 'அப்பாடா, தப்பிச்சிட்டு' என மகிழ்ந்து KFC யில் கோழிக்கால் கடிக்க அமரும் நமது மனது எத்தகையது? நான் வெஜ் கடைகளில் நீங்கள் உண்ணும் உணவை உயிரோடு உங்கள் கையில் தந்து வெட்டுங்கள் என்றால் நம்மில் எத்தனை பேர் செய்வோம்? காற்றில் விழும் மரம் உண்டாக்கும் அதிர்வு நம் காதுகளை அடையும்போதுதான் நம்மைப்பொறுத்தவரை ஓசை உண்டாகும் நொடி. உயிர் உணவை வெட்டும்பொழுது எழும் ஓலம் கேட்காத காதுகளைப்பொறுத்தவரையில் அவை ஓசையற்ற ஒலிதானே... வெஜ், நான் வெஜ் என்ற பஞ்சாயத்துக்காக அல்ல இந்தப்பதிவு. நாம் fridge இல் வைத்திருக்கும் காய்கறிகளுக்குள்ளும் பழங்களுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கும் விதைகளும் ஓசை எழுப்பிய வண்ணமே இருக்கும்தானே. கொன்றால் பாபம், தின்றால் போச்சி, போங்க பாஸ்!

நழுவும் மொழி - 2 : கடல்

'தமிழ்னா எனக்கு உசுரு. நல்ல books எல்லாம் தேடித்தேடி படிப்பேன். ஆன்லைன்ல கூட கிடைக்குது...But you know, நல்ல தரமான நாவல்லாம் rare. புதுசா எழுதறவங்க சுமாராதான் எழுதுறாங்க...அதுவும் fiction தான் நல்லாருக்கும். Non fiction லாம் chance ஏ இல்ல...' வணக்கம், உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப்பதிவு உங்களுக்கே! கடல் என்பது நம்மில் அநேகருக்கு வியப்பு ஏற்படுத்தும் ஒரு பெரிய பாத்திரம், அவ்வளவே. அலைகளில் பயத்துடன் கால் நனைத்தும், ஈர மணலில் நடை பயின்றும் கிளிஞ்சல்கள் பொறுக்கியும் மகிழ்வோம். கரை திரும்பி கால் மணலைத்தட்டுகையில் 'என்னா பிசுபிசுப்பு. தட்டுனாலும் போமாட்டேங்குது' என்று அலுப்போம். சமஸ் என்கிற இளைஞர் நம்மில் ஒருவர்தானென்றாலும் அவர் நம்மைப்போல் அல்ல!  'நீராலானது உலகு, உலகில் 70 சதம் கடல்' என்ற விபரங்களை நம்மைப்போல் படித்ததும் மறப்பவரல்ல. 30 சத நிலப்பரப்பில் வாழும் நமக்கு எஞ்சிய 70 சத வாழ்வை , அவை சூழும் நிலப்பரப்பை, மனிதர்களை, அவர்களின் வலிகளை, துயரங்களை, மகிழ்ச்சியை (இளையராஜா!) அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நாட்களை, சேமித்த முத்துக்களை அ...

மால்துஸ் பொறியில் சிக்கிய எலி நாம்!

ஒரு சமுதாயம்.  எல்லோருக்கும் வேண்டிய அளவு உணவு.  உண்டு பெரு(க்)கும் சமுதாயம் ஒரு கட்டத்தில் பஞ்சத்தை சந்தித்தே தீரும்.  பஞ்சம் போக்க உற்பத்தி பெருக்கம். பசித்த வயிறு, பெருகிய உணவை உண்டு உற்சாகமாகி மறுபடி சந்ததி பெருக்கும். மறுபடி பஞ்சம் வந்தே தீரும். (பஞ்சம் வராவிட்டாலும் வியாதி வரும், யுத்தம் வரும். மக்கள் தொகையை குறைக்கும்). இவையெல்லாம் தாமஸ் ராபர்ட் மால்துஸ் 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லிச்சென்றது, மால்துஸ் பொறி (Malthus trap) எனப்படுவது, என்றும் நிற்பது.  அவர் அதோடு நிற்கவில்லை, இன்னும் சொன்னார்: 'உணவுப்பொருளை வெளிநாட்டில் யாருக்கோ விற்று அல்லது யாரிடமோ வாங்கி அதிக பொருளீட்டலாம்  என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு உள்நாட்டு உணவுத்தேவையை உள்நாட்டிலேயே  நிறைவேற்று.  தேவைக்கான உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க இசைவாக, இறக்குமதி வரி விதி, எந்த உணவுப்பொருள் வெளியிலிருந்து வந்தாலும்.' செமிகண்டக்டரில் மூர் விதியை கொண்டாடுவது போல் மால்துஸ் பொறியை கொண்டாட ஆளில்லை.  நம் புறக்கணிப்பின் காரணம் என்ன தெரியுமா?  Ignor...

என் விழித்திரையில் - 1 - கோகிலா

இந்து ஆங்கில நாளிதழில் stamp size க்கு ஒரு photo. கருப்பு வெள்ளை. கமல், ஷோபா முகங்கள் மட்டுமே. அந்த கருப்பு வெள்ளையிலும் ஏதோ ஒரு வசியமிருந்தது, ஈர்த்தது... பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறைதான் நான் அவருடைய படங்களில் முதலில் பார்த்தது. 'கருப்பு வெள்ளைல படம் எடுத்திருக்காரா இந்தாளு?, அதுவும் கமலை வச்சி!', பாக்கணும், உடனே பாக்கணும் என சில ஆண்டுகள் தேடி அலுத்தபின்(பழைய, நல்ல படங்களை நம்ம ஊரில் எந்த கடையிலாவது வாங்கி காட்டுங்க பாக்கலாம்!) YouTube வழி காட்டியது! டாக்டர் மகள், ஓயாது பயணம் செய்யும் அப்பா, மகளுக்கு துணையாய் அவள் வயதையொத்த வேலைப்பெண், Paying guest ஆக தங்கும் bank manager, அவர் நண்பர் என சொற்ப பாத்திரங்களை வைத்து உணர்வுக்கோட்டை கட்டியுள்ளார். பாலு என்றால் அடல்ட்ரி இல்லாமலா என்று அப்போதே தெரியும்போல. இந்தக்கதையின் knot உம் அதுவே. எப்படி அது அவிழ்கிறது என்பது ஏராளமான சுவாரஸ்யத்துடன், மிக மிக இயல்பான நடிப்புடன் (ஒருவர் மட்டுமல்ல, அனைவருமே!) அற்புதமான ஒளிப்பதிவில் (சத்தியமாய் உணர்வீர்கள், கருப்பு வெள்ளையிலும்) கண்முன்னே விரிகிறது. ஐம்பது படங்களுக்குமேல், உச்...