ஆளற்ற கானகத்தில் விழும் மரத்திற்கு ஓசை உண்டா?
சாலை கடக்கையில் வாகனத்தின் குறுக்கே சடுதியில் கடக்கும் ஓணானையோ, நாயையோ, ஆடையோ, அணிலையோ காப்பாற்ற நொடியில் ப்ரேக் அடித்து, 'அப்பாடா, தப்பிச்சிட்டு' என மகிழ்ந்து KFC யில் கோழிக்கால் கடிக்க அமரும் நமது மனது எத்தகையது?
நான் வெஜ் கடைகளில் நீங்கள் உண்ணும் உணவை உயிரோடு உங்கள் கையில் தந்து வெட்டுங்கள் என்றால் நம்மில் எத்தனை பேர் செய்வோம்?
காற்றில் விழும் மரம் உண்டாக்கும் அதிர்வு நம் காதுகளை அடையும்போதுதான் நம்மைப்பொறுத்தவரை ஓசை உண்டாகும் நொடி. உயிர் உணவை வெட்டும்பொழுது எழும் ஓலம் கேட்காத காதுகளைப்பொறுத்தவரையில் அவை ஓசையற்ற ஒலிதானே...
வெஜ், நான் வெஜ் என்ற பஞ்சாயத்துக்காக அல்ல இந்தப்பதிவு. நாம் fridge இல் வைத்திருக்கும் காய்கறிகளுக்குள்ளும் பழங்களுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கும் விதைகளும் ஓசை எழுப்பிய வண்ணமே இருக்கும்தானே.
கொன்றால் பாபம், தின்றால் போச்சி, போங்க பாஸ்!
கருத்துகள்
கருத்துரையிடுக