ஒரு சமுதாயம்.
எல்லோருக்கும் வேண்டிய அளவு உணவு.
உண்டு பெரு(க்)கும் சமுதாயம் ஒரு கட்டத்தில் பஞ்சத்தை சந்தித்தே தீரும்.
பஞ்சம் போக்க உற்பத்தி பெருக்கம். பசித்த வயிறு, பெருகிய உணவை உண்டு உற்சாகமாகி மறுபடி சந்ததி பெருக்கும். மறுபடி பஞ்சம் வந்தே தீரும்.
(பஞ்சம் வராவிட்டாலும் வியாதி வரும், யுத்தம் வரும். மக்கள் தொகையை குறைக்கும்).
இவையெல்லாம் தாமஸ் ராபர்ட் மால்துஸ் 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லிச்சென்றது, மால்துஸ் பொறி (Malthus trap) எனப்படுவது, என்றும் நிற்பது.
அவர் அதோடு நிற்கவில்லை, இன்னும் சொன்னார்:
'உணவுப்பொருளை வெளிநாட்டில் யாருக்கோ விற்று அல்லது யாரிடமோ வாங்கி அதிக பொருளீட்டலாம் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு உள்நாட்டு உணவுத்தேவையை உள்நாட்டிலேயே நிறைவேற்று. தேவைக்கான உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க இசைவாக, இறக்குமதி வரி விதி, எந்த உணவுப்பொருள் வெளியிலிருந்து வந்தாலும்.'
செமிகண்டக்டரில் மூர் விதியை கொண்டாடுவது போல் மால்துஸ் பொறியை கொண்டாட ஆளில்லை.
நம் புறக்கணிப்பின் காரணம் என்ன தெரியுமா?
Ignorance.
மூர் விதி, வேலும் மேலும் அடர்த்தியான தொழில் நுட்பங்களை வாரி வழங்கும், இன்னும் பத்தாண்டுகளுக்கு. Desk Top Computers, Notebooks ஆக மாறியதும், Notebooks Smart Phones ஆக மாறியதும் இன்று Smart phones, Smart Watches ஆக மாறியதும் இந்த விதியின்படியே. இந்த விதியின் பலன் நமக்கு மகிழ்வூட்டுகிறது. அதனால் கொண்டாடுகிறோம். பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே!
We, spoilt by the problem of plenty, conveniently forgot that Moore's law will peter out in the near future and that there are still millions starving even today as Malthus postulated 200 years ago.
மால்துஸ் பொறியோ எக்காலத்திற்கும் நம்மை பயமுறுத்தும் உண்மை. விண்கலமேறி செவ்வாய் சென்றாலும் துரத்திப்பிடிக்கும்.
பயத்தை யாரேனும் கொண்டாடுவார்களா என்ன?!!
மால்துஸை மறந்து மூர் பின்னால் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் நாம், இந்த விதியின் எல்லை இன்னும் சில ஆண்டுகளில் எட்டப்பட்டபின்... புதியதொரு விதி செய்வோம். அதன் பின்னே ஓடுவோம்!
'தனியொருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தையே அழிப்போம்' என்று சினந்தான் ஒருவன். நாம் அனைவரும் சேர்ந்து உலகத்தை அழித்துக்கொண்டிருப்பது அந்த பசித்த ஒற்றை வயிறுக்காகவா என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக