ஞானம் தரும் போதிமரம் இன்றளவும் இருப்பது ஓரிடத்தில் (புத்த கயா) மட்டுமே!
ஏன் என்று என்றேனும் எண்ணியதுண்டா?
(ஞானம் தேடி) புத்தன் ஓடாத ஓட்டமா நாம் ஓடப்போகிறோம்?
ஓடி அலுத்தவனுக்கு அமர்ந்த இடத்திலேயே அள்ளித்தந்த ஞான வித்து, ஞான விருட்சம் அங்கு மட்டுமே அமர்ந்திருக்கவேண்டும் என்பது யார் இட்ட கட்டளை?
நம்மைச்சுற்றி போதிமரங்கள் தேடிப்பார்த்து, 'மரமே இல்லையே!' என உணர்பவர் ஒவ்வொருவரும் ஞானவான்தானே!
நமக்கான போதிமரத்தை நாமே நடுவோம் நம்மருகே.
வளர வளர ஞானம் வளரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக