முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ரயில் வெடி!

ரயில் வெடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தீப்பெட்டியில் வெடி மருந்து திணித்து நுனியில் திரி சொருகப்பட்டிருக்கும். திரி இல்லாத மறுபக்கத்தில் குழல் போன்றதொரு அமைப்பு இருக்கும். அந்தக்குழலில் நூல் கோர்த்து இரு முனைகளையும் எதிலாவது எதிரெதிராக இழுத்துக்கட்டி திரியில் பற்றவைத்தால் மருந்து தீரும் வரை நூல் கயிற்றில் புல்லட் ரயில் போல பறந்து சாகசம் காட்டும்! அனுபவித்திருக்கிறீர்களா?! பாக்கியமில்லாதோருக்கு அறிமுகப்படுத்த கூகுளில் படம் தேடினால் வருவது அனைத்தும் "ரயில் வெடித்த" படங்கள்... என்ன ஆயிற்று நமக்கு என்ற வருத்தத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு என் ரயில் வெடி சார்ந்த நினைவுகளைப் பகிர ஆவல் (இந்த ரயில் வெடி இப்போது எந்த வெடிக்கடைகளிலும் விற்கப்படுவதில்லை, தனி வீடுகளிலிருந்து பல்லடுக்கு குடியிருப்புகளுக்கு புலம் பெயர்ந்த நமக்கு அந்த நூல்கயிறைக்கட்டுவதற்கு இடமின்றிப்போனதால்...) சிறு வயதில் கும்பகோணத்தில் தீபாவளி வரப்போகிற பரவசத்தில் துணிக்கடையில் பெற்றோரின் விரல் பிடித்து வண்ணமும் வாசனையுமாய் விரியும் சட்டை டவுசர் துணிகளின் அழகில் சொக்கி எதையோ கை காட்ட அது வெட்டப்ப...

கடவுளைக்காக்கும் கடவுள்!

திருத்தலம்தோறும் மரங்கள் வைத்து அவற்றைச்சுற்றி கடவுள்களை எட்டுத்திசையும் நிற்கவைத்து, அமரவைத்து, படுக்கவைத்து, அக்கடவுள்களுக்கு வாகனங்களும் ஆயுதங்களும் தந்து, கடவுளிடம் வேண்டினால் பலிக்கும் என்ற எண்ணம் விதைத்து...இதையும் தாண்டி மரங்களை அணுகுவோரிடம் அவற்றை இறைத்தூதாய் காட்டி, நாம் கட்டிய ஒவ்வொரு கயிறிலும் உள்ள வேண்டுதலை மரம் சேர்க்கும் கடவுளிடம் என்று நெறிப்படுத்தி...இன்றளவும் கோவில்களில் களவாடப்படுவது கடவுள்கள் மட்டுமே, மரங்களல்ல! அப்பப்பா, மரங்களை மனிதர்களிடமிருந்து  காக்க என்னவெல்லாம் செய்யவேண்டியதாயிற்று!  பூமியில் எத்தனை வகை மரங்கள் உள்ளதோ அத்தனை வகை சாமிகளும் இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது. அத்தனை சாமிகளையும் தூக்கி வளர்க்கும், சாமிகளை "வளர்ப்பதற்காய்' சிதைந்தபின்னும் அம்மரங்கள். மர வகைகள் அதிகமில்லா பகுதிகளில் கடவுள் வகைகளும் குறைவே, உலகம் முழுதும். முல்லைக்கு மரத்தேர் தந்தவன் வழித்தோன்றிய சிலர் வேருக்கு இடரின்றி இல்லங்களை மாற்றியமைத்ததும் இங்கு நடந்ததுண்டு... கடவுளரின் இல்லம் நம் கவனிப்பின்றி பாழடைந்து போனால், அங்கிருக்கும் மரங்களே காக்கும் ...

நான் மரம் ஆன கதை! / How I became a tree!

ஒற்றை மரம் என்ன செய்யும்? என்ன செய்ய இயலும்? சூழல் சரியில்லையென்றால் இடம் பெயரும் விலங்குகளைப்போல் வேர் தூக்கிக்கொண்டு ஓட இயலுமா? வேறிடம் ஏகும் பறவைகள் போல நற்சூழல் தேடி கிளைகளை சுமந்து பறக்க முடியுமா?  இல்லை உணவுச்சங்கிலியின் உச்சத்திலிருப்பதாய் கனவு கண்டு தன் சூழலையே விரும்பும் வகையில் மாற்றி வாழும் மனிதன் போல் மாற்றத்தான் முடியுமா அவற்றால்?  (நவீன உலகின் பெருநகர மனிதன் போல் அவலமுண்டா? ஒரு அறையில் பாலையின் வெப்பம், ஒரு அறையில் உறைபனிக்குளிர்ச்சி...ஒரே வீட்டில்! - இயற்கை ஒருபோதும் இதைச்செய்யாது, பெய்யெனப்பெய்தால் அனைத்துயிர்க்கும் பெய்யும் மழை). என்ன இடர்வரினும் வேர் தாங்கும் என்ற நம்பிக்கையோடு மாறும் சூழலுக்கேற்ப இருக்குமிடத்திலேயே தம்மை மாற்றிக்கொண்டு இயற்கையோடு இயற்கையாய் காத்திருக்கும் மரங்கள், ஒருவரை புத்தராகவும்  ஏசுவாகவும் நபியாகவும் இன்னும் என்னவெல்லாமாகவோ மாற்ற. நபிகளுக்குப்பிடித்த ஈச்ச மரத்தில் ஈசனும் உண்டு ஈசாவும் (Jesus) உண்டு என்பதை மரமறியாது, பெயர்களைத்தூக்கியாடும் மனிதரும் அறியார்! ஒரு காடு உருவாக மரமொன்று போதும். பூச்சிகள், பறவைகள், விலங...

உன்னுள்ளே ஒரு மலை எலி!

மாஞ்சி அழுது ஓய்ந்திருந்தான். இளம் மனைவி, திடீர் உடல்நலக்குறைவு. கிராம வைத்தியர் 'டவுன் ஆசுபத்திரிக்கு உடனே கொண்டு போ'கச்சொன்னார்.  டவுனுக்கு ஒரே சாலை, மலையைச்சுற்றிச்செல்லும் 50 மைல், 5 மணிநேர அவசர ஜீப் பயணம்,  காப்பாற்றமுடியவில்லை அவளை. அழுது ஓய்ந்தபின் 'இந்தக்கொடுமை யாருக்கும் வரக்கூடாது' என்ற வெறியோடு நடையாய் நடந்தான் அரசு அலுவலகங்களுக்கு, 'மலையை குடைந்து சாலை அமைத்தால் 15 ஏ மைலில் அதே டவுன்'.  கடிதப்போர், தேய்ந்த நடை எதற்கும் பலனில்லை. ஒரு நாள் காலை கடப்பாறை, மண்வெட்டியோடு நடந்தான். உடைக்க ஆரம்பித்தான் மலையை. 'மாஞ்சிக்கு பயித்தியம் பிடிச்சிடுச்சி' என்று ஊரார் கைகொட்டி சிரித்துவிட்டு அவரவர் வேலைக்கு திரும்பியாச்சி. ஒரு நாளுக்கு 10 மணி நேரம். 365 நாட்கள். 22 வருடங்கள். மலையின் மறுபுறம் கடைசிக்கல் உடைந்தது. 5 மணி நேரப்பயணத்தை முக்கால் மணிநேரமாக சுருக்க மாஞ்சிக்கு ஆச்சி இத்தனை நாட்கள். ஊடகங்கள் தேடி வந்தன,  புகழ் வெளிச்சமும் கூடவே.  அரசும் விழித்துக்கொண்டு கவுரவித்தது. மாஞ்சி இன்று இல்லை. உடைக்கவேண்டிய மலை...

முன்பே வா!

கடந்த இரு ஆண்டுகளாகவே நல்ல மழையில்லை. இந்தியா முழுவதுமே விவசாயம் காய்ந்து போயிற்று. நீர் வசதி இருந்த நிலங்களில் மட்டும் விவசாயிகள் முந்தைய ஆண்டுகளில் தமக்கு லாபம் ஈட்டித்தந்த பணப்பயிர்களை மட்டுமே விதைத்தனர்... தக்காளி, மிளகாய், வெங்காயம், திராட்சை... நிறைய விவசாயிகள் இவற்றை விளைவித்ததால் விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்தது. அதனால் இவற்றின் விலை தாறுமாறாக விழுந்தது! நாடெங்குமுள்ள மண்டிகளிலும் கொள்முதல் நிலையங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற நிலையால் அவர்கள் அறுவடை செய்யாமலோ அல்லது அறுவடை செய்தவற்றை சாலையோரங்களில் கொட்டியோ நொந்துபோயினர். வறட்சி வருடங்களில் மட்டுமல்ல, நல்மழை வருடங்களிலும் இது நிகழும்! 2015 சென்னைப்புயலின்போது தேனி விவசாயிகள் வாழைக்குலைகளை ஒரு சீப்பு (12-18 பழங்கள்) ஐந்து ரூபாய் என விற்க ஆரம்பித்து அதுவும் முடியாமல் தம் தோட்டங்களில் மக்களை இலவசமாக பறித்துச்செல்ல அழைக்கவேண்டியதாயிற்று (அறுவடைக்கூலி மிச்சம்). (தேனி விவசாயிகளின் வாழைத்தார்களுக்கு சென்னைதான் மிகப்பெரிய சந்தை). ஒற்றைப்பயிர் விவசாயத...

உப்பு தப்பாகுமா?!

70 ஆண்டுகால அற்புத சுதந்திரத்தின் மகிமையால் நாட்டில் நம் தொல்லைகளை எல்லாம் வென்று உலகம் வியக்கும் ஒரு பெருவாழ்வு நோக்கி நடக்கிறோம்! 'இல்லைங்க, இன்னும் இல்லை...: 'ஏன்? என்ன ஆச்சு? எது தப்பாச்சு?' விடைக்கான தேடலை 'ஏன் நமக்கு சுதந்திரம் தேவையாச்சு?' என்ற கேள்வியிலிருந்நு தொடங்குவோம். வணிகத்தின் போர்வையில் நம் அனுமதியுடன் உள் நுழைந்து மொழி, இன, பண்பாட்டு இத்தியாதிகளால் தனித்து இருந்த பல்வேறு மக்களை தம் ஆட்சியின் கீழ் அடக்கிய ஒரு வல்லரசை ஒருமனதாக எதிர்த்து வெளியேற்ற முதன்முறையாக ஒன்றிணைந்தோம் நாம். அவ்வல்லரசை எதிர்த்து பல்வேறு மொழிகளில் நாம் எழுப்பிய ஒற்றை முழக்கம் 'எங்கள் இன்னல்களை நாங்களே களைந்துகொள்வோம்; வெள்ளையனே வெளியேறு'. இருநூறு ஆண்டுகள், பல்வேறு விதமான எண்ணற்ற போராட்டங்கள்...கடும் போராட்டங்கள்...அசைக்கமுடியவில்லை ஆண்டவர்களை, அந்த அரையாடை உடுத்த, கோலூன்றி நடந்த, உடல் நலிந்த வயோதிகர் எதிர்காலத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக  அன்று 'அந்த' விதையை ஊன்றும்வரை. அவர் நடந்ததென்னவோ வெறும் 390 கிலோமீட்டர்தான், அதுவே போதுமா...

பேரன்பு

மண்ணுள்ளே என்றோ விழுந்த  பெயர் அறியா விதையொன்று  காலப்புழுதியில் தொலையாமல் தங்கி நின்று  ஒரு அற்புத நொடியில்  உயிர் நனைத்த பேரன்பில்  வேர் வெடித்து இலை துளிர்த்து பரவசமாய் வளரும்  இவ்வேளையில்  என் ஆன்மாவே நீராகி, வேராகி,  இலையாகி, பூவாகி,  காயாகி, கனியாகி   எல்லாமாய் ஆனதுபோல்  உணரும் இன்பத்தை  எதிர்பார்த்தா விதை நனைத்தது  பேரன்பு? ஒரு முறைதான் முளைக்குமாம் விதை... என்று முளைத்தா லும் என்னுள்தானே, (அதன்)  உயிர்த்தொடர்ச்சி  எனக்கே எனக்காய்  என் இருப்பு வரை... வாழ்தலினும் மேலாம்  பேரன்பின் தரிசனம், யாருக்கு கிட்டினும்  என் கிளையில்  புதிதாய் பூக்கள் பூக்கும்!