முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் மரம் ஆன கதை! / How I became a tree!


ஒற்றை மரம் என்ன செய்யும்? என்ன செய்ய இயலும்? சூழல் சரியில்லையென்றால் இடம் பெயரும் விலங்குகளைப்போல் வேர் தூக்கிக்கொண்டு ஓட இயலுமா? வேறிடம் ஏகும் பறவைகள் போல நற்சூழல் தேடி கிளைகளை சுமந்து பறக்க முடியுமா?  இல்லை உணவுச்சங்கிலியின் உச்சத்திலிருப்பதாய் கனவு கண்டு தன் சூழலையே விரும்பும் வகையில் மாற்றி வாழும் மனிதன் போல் மாற்றத்தான் முடியுமா அவற்றால்? 
(நவீன உலகின் பெருநகர மனிதன் போல் அவலமுண்டா? ஒரு அறையில் பாலையின் வெப்பம், ஒரு அறையில் உறைபனிக்குளிர்ச்சி...ஒரே வீட்டில்! - இயற்கை ஒருபோதும் இதைச்செய்யாது, பெய்யெனப்பெய்தால் அனைத்துயிர்க்கும் பெய்யும் மழை).

என்ன இடர்வரினும் வேர் தாங்கும் என்ற நம்பிக்கையோடு மாறும் சூழலுக்கேற்ப இருக்குமிடத்திலேயே தம்மை மாற்றிக்கொண்டு இயற்கையோடு இயற்கையாய் காத்திருக்கும் மரங்கள், ஒருவரை புத்தராகவும்  ஏசுவாகவும் நபியாகவும் இன்னும் என்னவெல்லாமாகவோ மாற்ற. நபிகளுக்குப்பிடித்த ஈச்ச மரத்தில் ஈசனும் உண்டு ஈசாவும் (Jesus) உண்டு என்பதை மரமறியாது, பெயர்களைத்தூக்கியாடும் மனிதரும் அறியார்!

ஒரு காடு உருவாக மரமொன்று போதும். பூச்சிகள், பறவைகள், விலங்குகள், தேவர்கள், அசுரர்கள், ஏன் இறையும் மரம் நாடும். உயிர்ச்சங்கிலி மொத்தமும் மரத்தில் கட்டுண்டு கிடக்கும். மரம் உணவளிக்கும், உறையுள் தரும், உயிர் காக்கும் மருந்து தரும் இன்னும் கேட்பதையெல்லாம் கற்பகவிருட்சமாய் நின்று தரும் இந்த ஒற்றை மரம். காலத்திற்கும் நிற்கும் இத்தாவரத்தின் சிறப்பறிய இதோ ஒரு உன்னத தொன்ம இலக்கியப்பாடல்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற 'இத் தாவர' சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்...

பூமியின் 33 விழுக்காடு காடுகளால் நிரம்பியிருந்தால்தான் பூமி தழைக்குமாம். இரண்டு 3 வேண்டாமே, ஒன்றே போதுமே என்று உணவுச்சங்கிலியின் உச்சக்கொம்பு தானாய் முடிவெடுத்து காடழித்து நாடாக்க, கொம்பினமே அழிந்துபோகும் அவலத்தை எஞ்சியிருக்கும் மரங்கள் காணச்சகியாது பறவைகளைத்துணைக்கழைத்து விதை பரப்ப கொம்பினமோ பறவைகளையும் இன்ன பிற கொம்பற்ற இனங்களையும் வாழ்வின் எல்லையில் தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது.

'நீயும் கொம்பினம்தானே!' என்று எக்காளமாய் எழும் கேள்விக்கு என் பதில் 'இல்லை, நான் இந்த செய்தியை கொம்பினத்துக்கு சொல்வதற்காய் கொம்பு சுமக்கும் மரம்!'

மனித நாகரீகம் நதிக்கரைகளில் தவழுமுன்னர் தொ(ட)ங்கியதென்னவோ மரத்தில்தானே!0

இனியொரு மரம் நடுவோம் அதை எந்தநாளும் காப்போம், தனியொரு வேருக்கு நீரில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் (தேவையில்லை, அது தானே அழிந்துபோகும் என்கிறீர்கள், உண்மைதான்!).

One tree could change the world, plant it, click a selfie, post it to your friends and challenge them to do the same. Post another selfie at the first year anniversary of planting to show the world that you care!

Let billions of trees rise from your simple gesture. Billions of homes for the countless birds, insects and the likes that keep the planet alive and healthy for us, our children and their children.

Let us start today!

The easiest way to boost the GDP of a nation is by planting as many trees as possible. If we address the Green Deficit Problem, the GDP shall go up! Just think about it. 

What about using CSR (Corporate Social Responsibility - a certain percentage of profit of each listed company must be spent on improving the society the corporate milks!) funds just to plant trees and maintain them? Governments must make this an absolute must clause to allow the continued functioning of the corporates...

What about electing political representatives based on the number of trees that they helped grow in their constituencies?

What about...planting a tree and posting a Selfie here?!

Let us use the network effect to its hilt. Share this page with ALL your friends and ask them also to do the same, apart from planting just one tree. Keep Planting.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...