முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் கவிதை தேவையில்லை பாரதி!

கொதிக்கும் வெயிலில் தார்ச்சாலையின் நடுவில் ஜட்டி பனியன் மட்டுமே அணிந்து மல்லாந்து கிடந்தது நம் மானம். சாலையின் ஒருபுறம் பாட்டி, மறுபுறம் அம்மா, நடுவில் தன்னைத்தானே தார்ச்சிலுவையில் ற மதுவால் அறைந்துகொண்ட 20+ வயது இளைஞன். ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி கைகள் இருபுறமும் நதிக்கிளைகள் போல நீள மல்லாந்து வானம் பார்த்து கண்கள் மூடி கிடந்தான். வீதிக்கு வீதி சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடல் கேட்டு கோவனை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய அரசு. கோவனுக்கு அன்று துணை நின்ற எதிர்க்கட்சி இன்று ஆட்சியில். கைது செய்யப்படவேண்டிய மதுபானமென்னவோ தடையின்றி "குடி" மகன்களை சென்றடைய புதிது புதிதாய் மதுக்கடைகள், எதிர்ப்பு போராட்டங்கள்... கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவையில் இருந்து 25 கி.மீ தொலைவில் கரியாம்பாளையம் பிரிவு, அன்னூருக்கு சற்று முன்பாக. அந்த பிரிவில் இடதுபுறத்தில் இறங்கி விரையும் காரமடை சாலையில் ஆட்களற்ற தனிமையில் இரண்டு சிற்றூர்களுக்கு இடையில் 35° வெயிலில் நேற்று மதியம் குடிபோதையில் நினைவிழந்து விழுந்து கிடந்த வாட்டசாட்டமான மகனை இருவரும் சேர்ந்து இழுத்தும் கரை சேர்க்க முடியாமல் ஊ...

1.5°

தாகங்கொண்ட மேகமொன்று நீரருந்த இடம் தேடி காற்றில் விரைய, படபடப்பாய் கீழாடுது ஆயிரம் உயிர். 'மேகத்துக்கே தாகமென்றால் நம் வேரெல்லாம் நனைவதெப்போ?' என தகிப்பாய் மரங்களின் சூடு மூச்சு. பல்லாயிரம் இலையற்ற கிளை வழியே ஆயிரம் மூச்சு. உயிர்த்தவிப்பு தணிக்கும் பேராவலில் மூச்சுக்காற்றின் உந்துதலில் விரைந்த மேகத்தை சோகமாய் தடுத்து நிறுத்தியது நெடிய மலை ஒன்று. மலையெங்கும் மனிதர்கள் கட்டிடங்கள் வாகனங்கள் கரும்புகை இரைச்சல்... இடையிடையே தப்பி நிற்கும் பெருமரங்களும் வெயிலில் நோக, 'எமைக்காக்க விரைந்து நீரோடு வா  பெரும் படையாக வா' என மலை இறைஞ்ச, மரமனைத்தும் கடல் திசையில் தலையாட்டி மேகத்துக்கு வழிகாட்ட, மனச்சுமைகூடி தள்ளாடி மேகமழுதது வான்மழையாய், வான்சூட்டில் தரைதொடுமுன் ஆவியாகிப்போன மழையாய்...  மேகத்தின் கண்ணீரை கண்டவருண்டோ! சேயழுகை கேட்ட தாய்போல கடல்மடி கலங்கி அலையெழும்பி அலை வீழ்ந்து அலை பரவி... தெறித்த நீர்த்திவலையெல்லாம் அலைதந்த காற்றிலேறி கரை நோக்கி விரைய, அள்ளி வந்த நீரெல்லாம் வானிலேயே ஆவியாவதற்குள் மலைக்கு அப்பாலும் தவிக்கும் மரங்களின் ஆவி ஆகிவிடும் பேரன்பில் விரையுது கடலிலெழுந்த நீ...

வா, ரயில் விடப்போலாமா!

  ஒவ்வொரு முறையும் ரயில் பயணம் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அனுபவமும் தொடங்கிவிடும். இந்தமுறை அருண் என்கிற தேனி வட்டார மனிதர் வாகனம் ஓட்டினார். அப்பா போலீசாக இருந்து ஓய்வு பெற்று தேனியில் அம்மாவோடு. இவர் இங்கே கோவையில். போலீஸ்காரர் மகன் என்பதால் பயந்த சுபாவ குரலோ என தோணுமளவிற்கு அவரது குரல். டிப்ளமோ படிப்பு, சில காலம் படித்த நகரிலேயே பணி. பல காலம் சவுதி வாசம். ஊர் திரும்பி கல்யாணம் முடித்து இப்போது வாடகை டாக்சி நிறுவனமொன்றில் பணி. வீரபாண்டி தேர் திருவிழா பற்றி பேசிக்கொண்டே ரயில் நிலையம் வந்துவிட்டது. ஊரான ஊரில் கூட்டமான கூட்டமாம், திருவிழாவான திருவிழாவாம். ஏழு நாட்கள் அங்காளி பங்காளி அமளி துமளியாம். அவர்களது ஏரியாவில் கல்யாணம் முடிப்பது மட்டும் ஈஸ்வரன் கோவிலில் என்றும் மற்றபடி தெற்கு தமிழகம் எங்கும் அம்மன் ஆட்சிதான் என்றார். அவரது கண்களில் வீரபாண்டியின் தேர் நகர்வது தெரிந்தது. ஊரில் இருக்கும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டாச்சாம். தேனி, போடி, கம்பம் பகுதிகளில் கேரள சேட்டன்கள் நிறைய வயல்களை குத்தகைக்கு எடுத்து தோட்டங்கள் செய்வதாகவும் அவர்களுக்கெல்லாம் 'ஒன்றை இரண்டாக்கும் வித்தை...

அள்ளப்போவது யாரு?!

  1900 தொடக்கத்திலிருந்தே ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் போவதும் தீர்ப்பு வாங்கி திரும்புவதும், "நாட்டாம! தீர்ப்ப மாத்துங்க நாட்டாம!" என எதிர்க்கட்சியினர் மனு கொடுக்கவும் புதிய தீர்ப்பு, அதையும் எதிர்த்து புதிய மனு என 2022 வரை நீண்டுகொண்டிருக்கிறது! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தங்கள் பாராயணம் செய்வது யார்.?வடகலையா தென்கலையா? என ஒரு குறிப்பிட்ட சாதியினரின் உட்பிரிவுகளுக்குள் மோதல், பலப்பல வருடங்களாக. சென்ற முறை தீர்ப்பில் "கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரபந்தங்கள் பாடும் உரிமை தென்கலைக்கு மட்டுமே" என தீர்ப்பாகி, மேல்முறையீடு செய்து, நேற்றைய தீர்ப்பு, "நாங்க சொல்கிறவரை வடகலை தென்கலை ரெண்டு பேருமே சேர்ந்து பாடுங்கோ, பெருமாள் மகிழ்வார்"  வர்ணாசிரம வண்ணங்களில் என்னதான் உயர் வண்ணம் தாழ்வண்ணம் என மனிதர்கள் தம்மை அடையாளமிட்டுக்கொண்டாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கு உள்ளேயும் எத்தனை வர்ணங்கள், எல்லைக்"கோடுகள்"! Black and White are not absolute colours; they are shades of gray present or absent. 21 ஆம் நூற்றாண்டில் One Nation One Language One Food ...

கவிதைக்காரனை காணவில்லை

  கவிதைக்காரன் செல்லுமிடமெல்லாம் காத்திருப்பு அவனுக்கு முன்பே காத்திருக்கும். கவிதைக்காரனுக்கு எழுத தாள்களோ மை நிரம்பிய பேனாவோ தரப்படுவதில்லை அவன் எதிர்பார்ப்பதுமில்லை அவனது கவிதை ஒருபோதும் தாள்களில் உதிப்பதில்லை. அவன் காணும் உலகில் கண நொடி வெளிச்சத்தில் கண்ணில் படும் அத்தனையும் கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை. யாரும் காண மறுப்பதை காண்பவன் அவன் கண்டதை பதிவுசெய்பவன் அவன் இடைப்பட்ட நேரங்களில் அவனுக்கும் அன்றாட வாழ்வு உண்டு அதில் அவன் தச்சனாகவோ நாவிதனாகவோ பிச்சாந்தேகியாகவோ அல்லது நாம் கவனம் கொள்ள மறுக்கும் ஏதாவதொன்றாகவோ அவனது  அன்றாட வாழ்வை நகர்த்துபவன். கவிதைக்காரனை யாருக்கும் தெரிவதில்லை அவனது கவிதைகளைக்கூடத்தான் என்றாவது ஒரு நாள் அவன் கண்ட கவிதையொன்றில் இளைப்பாறிச்சென்ற தேவதையொருத்தி அதன்பின்னான அவனது நாட்களின் உந்துவிசையாக இருப்பாள், அடுத்த தேவதை அவனது கவிதையொன்றில் இளைப்பாறும் வரை. கவிதைக்காரனை இப்போதெல்லாம் அதிகமாய் காணமுடிவதில்லை. எங்கோ ஒரு மரக்கிளையில் ஏதோ ஒரு இலைக்குடையின்கீழ் ஒரு நாள் உறங்கச்சென்றதாகவும் அவனது உறக்கம் கலைக்க விரும்பாத தேவதையொருத்தி அவன் காதில் மௌனமாய் ச...

அலாவுதீனும் அடிமை இந்தியர்களும்

  2002 இல் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தில் மென்பொருள் எழுதும் வேலை (software programming).  புதிதாய் ஒரு ஐரோப்பிய பங்குச்சந்தை தொடக்குவதற்கு தேவையான வணிக இணைப்பு மென்பொருள் எழுத பன்னாட்டு பொறியியல் குழு ஒன்று, எங்கள் குழு, ராப்பகலாய் உழைத்துக்கொண்டிருந்தது.  உலகம் முழுதும் பரவப்போகும் அந்த புதிய வணிக தளத்தின் மென்பொருள் கட்டமைப்பின் தலைவர், Michael Schumacher, ஒரு ஸ்விஸ் ஜெர்மன் மனிதர். ஒரு கட்டமைப்பை முன்னடத்திச்செல்ல அவசியமான தலைமைப்பண்புகள் இவரிடம் ஏராளம். அடுத்தவர் நேரத்தை வீண்டிக்கமாட்டார், தனது குழு உறுப்பினர்களை துல்லியமாக கணிப்பதுல் வல்லவர் ஆனாலும் அவர்களில் யாராவது பணியில் பிழை செய்தால் அப்பழியை அவர் ஏற்றுக்கொண்டு சரி செய்வார். மிகப்பெரிய வளமான குடும்பத்தில் பிறந்திருப்பாரோ? உலகப்புகழ் கல்லூரிகளில் படித்திருப்பாரோ என்றால் அது மாதிரியான பின்புலமெல்லாம் அவருக்கு இல்லை. ஒரு நாள் மாலை பணி முடித்து அவரோடு தேநீர் அருந்துகையில் அவரது பெயரில் உள்ள Schumacher என்பதன் பொருள் கேட்டேன். அவரது விடை சட்டென அலாவுதீன் கில்ஜியை என் நினைவில் கொண்டு வந்தது. அதனோடு கூடவே என்னுள் ஒரு ஏக்கப...

நாலு வேதம் நாலு வர்ணம் மூவண்ணம்

  இன்று உழைப்பாளர் தினம்.  பேராசைப்பெருவணிகத்தின் வளம் மேலும் கொழிக்க பல்வேறு வகைகளில் கடுமையாய் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்தப்பதிவு அர்ப்பணம்! இழந்த ஆற்றலை மீண்டும் பெற அரியவகை மூலிகைகள் போல அரசியலில் இறையின் பயன்பாடு ஆகிக்கொண்டிருக்கிறது உலகம் முழுவதும். உலகம் முழுவதும் அடக்கியாண்டவர்களும் அடிமைப்பட்டுக்கிடந்தவர்களும் இன்று ஒரே மேசையில் ஷாம்ப்பெயின் / வோட்கா குடித்து புரிந்துணர்வு ஒப்பத்தங்கள் செய்கிறோம். ஷாம்ப்பெயின் / வோட்கா போதை தெளிந்ததும் உள்ளூரில் நமக்கு வேண்டாதவரை அவரவர் வணங்கும் இறைவழி கட்டம் கட்டி "1100இலே, 1300 இலே நம்மை அடிமைகளாக்கி இவர்களெல்லாம் என்னென்ன கொடுமைகள் எல்லாம் செய்தார்கள் மக்களே! இவர்களுக்கு நாம் சரியான பதில் தரவேண்டாமா?" என குற்றப்பரம்பரை முத்திரை குத்தி ஏழாம் தலைமுறையையும் சந்தேகத்தின் வழிமட்டுமே பார்க்கும் ஓட்டு வங்கி அரசியல் செய்வோம். சரித்திரத்தில் நிகழ்ந்த சில அநியாயங்கள் காலப்போக்கில் சரிசெய்யப்படும், செய்யப்படவேண்டும். அதுதான் மனிதகுல வளர்ச்சி. இது முஸ்லீம் கிறிஸ்துவ காலனியாதிக்கத்தின் விளைவு என்கிற புள்ளியில் இருந்துதான் தொடங்குகி...