புயலுக்கு முன்னான பேரமைதி. சட்டென இருண்ட மதிய வானம். இலையைக்கூட அசைக்காது உறைந்து நின்ற காற்று. நடமாட்டமே இல்லாது நின்ற சாலை. இவையனைத்தையும் கலைத்துப்போடும் விதமாய் எழுந்தது ஒரு நலிந்த குரல்; மெலிதான அழுகை, ஈனக்கூப்பாடு, பிரிவின் தவிப்பு, என்ன நிகழ்கிறது என புரியாத பேரச்சம்... இவை அனைத்தின் கலவையாய். பிறந்து சில வாரங்களே ஆன நாய்க்குட்டி ஒன்று, காணாமல் போன தாயைத்தேடி நிலைகொள்ளாது அங்குமிங்கும் கால்களும் கண்களும் அலைய, சாலையின் எல்லைகள் பிரிவுகள் பிரிவுகளின் எல்லைகள் என ஓடித்திரும்பி மீண்டும் ஓடி... இத்தனையும் நிகழ்ந்தது என் கண் முன்னே சில நொடிகளில். 'என்ன கொடுமை இது? தாயைத்தொலைத்த குழந்தை இப்படி தவிக்கிறதே! எங்கிருந்தாவது அவள் ஓடி வந்து குட்டியின் கண் எல்லைக்குள் நிழலாடமாட்டாளா?' என கலவையான நினைவுகளோடு, கவலையோடு சில நொடிகள் நின்று பார்த்தேன். 'அழைக்கலாம்... உணவு / தண்ணீர் தரலாம். தந்தால் வேறெங்கும் செல்லாது இங்கேயே தங்கிவிடும். ஆணா பெண்ணா தெரியவில்லை. வீட்டில் ஒரு ஆண்குட்டி, பெண் குட்டி தேடத்தொடங்கும் வயதில். வாயிற்கதவு தாண்டி இதை உள்ளே அழைத்து இது பெண்குட்டியென்றால் சிக்க...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!