முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்லப்ப விவசாயிக்கு என்ன சொல்லப்போகிறோம்?

 

இன்றைய செய்தி: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளில் 4.25 கோடி ரூபாய் பணம், 4+ கிலோ தங்கம், சில கிலோக்கள் வெள்ளி பிடிபட்டது. பன்னிரண்டு அரசு ஊழியர்கள் கைது.


சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை, பத்திர பதிவுத்துறை, மின் விநியோகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கைதானார்கள்.


இவை எல்லாமே நமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட துறைகள்; யாருடைய பேராசையையோ நம் பணத்தால் நிரப்புவதற்காக அல்ல.

The arrested ones are not aliens. They are from among us.

Many believe in their rights to demand bribe because they might have paid so much to get into vantage positions of this well oiled machinery called bureaucracy.

Somewhere in this heap of bribed stuff lay the sweat stained notes offered by some poor farmers who were forced to pay a bribe to just execute a settlement deed of their tiny landholding to their offspring, the cough stained notes paid by a family towards medical bill of their asthmatic child...and so on.

WHY?!

கஷ்டப்பட்டு உழைச்ச காச லஞ்சமா வாங்கி, பொல்யூஷன கண்டுக்காம விட்டு நம் மூச்சுக்காற்றையும் நச்சாக்கி, இதனால் யாருக்கோ ஆஸ்த்மா வந்து அவங்க கஷ்டப்பட்டு சேத்துவச்ச காச மெடிக்கல்ஸ்ல செலவு பண்ண வைக்கிறதும் லஞ்சத்தின் வெளிப்பாடுதானே! இதை ஏன் அனுமதிக்கிறோம்?


டேபிளுக்கு அடியில் நீள்வதும் நமது கரங்கள்தான், தருவதும் நமது கரங்கள்தான்!


'தராவிட்டால் இழுத்தடிக்கிறார்கள்; வேலை கெடுகிறது!'


நியாயமான கவலைதான்.


லஞ்ச ஒழிப்புத்துறை 24*7 கண்காணிப்பதும் நடைமுறையில் சாத்தியம் இல்லை.


தீர்வுகள் இல்லவே இல்லையா என்ன?


கூட்டி கழிச்சி பாத்தா நாம efficiency வேண்டி லஞ்சம் தருகிறோம் (கொடுக்காட்டி இந்த வேலையை முடிக்க நேரச்செலவு, பணச்செலவு, மன நிம்மதி செலவு, இவை காரணமாய் வரும் மருத்துவ செலவு எல்லாமே அதிகமாகுமே).


ஒரு புறம் efficiency gain செய்யணும் என்ற முனைப்பில் அடிப்படை துறைகளான கல்வி. போக்குவரத்து, மக்கள் நலம் எல்லாவற்றையும் தனியார்மயம் செய்தோம்.

அந்த மாயத்தை இங்கும் செய்யலாம்; வருவாய்த்துறையை தனியார்வசம் ஒப்படைத்து விடலாம். அவர்களும் போட்டி போட்டு efficiency ஐ அதிகப்படுத்துவார்கள்; வெளிப்படையாக, முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தை வசூலிப்பார்கள், நம் தொலைத்தொடர்பு துறையில் நிகழ்ந்த மாயங்கள் போல!


"ஏனுங்க, என்ற நெலத்த அளக்குறதுக்கு நா எதுக்குங்க வருவாய்த்துறையிலேந்து நில உரிமைக்கான ஆவணங்கள் அனைத்தையும் அவர்களிடம் கட்டணம் செலுத்தி வாங்கி அவர்களிடமே திரும்பத்தந்து, அரசுக்கான கட்டணத்தை ட்ரெஷரி அக்கவுண்டில கட்டி, ஆறு மாசம் காத்துக்கெடந்தும், 'கெரகத்த ஒரு ஆபீசரையும் காணமே!' ன்னு மணியாராபீசுக்கு அலஞ்சி அங்கண தண்டல்காரர புடிச்சி விஏஓவ 'பாத்து' அப்புறம் ஒரு சுப யோக சுப தினத்திலே அஞ்சாறு பேரு புடைசூழ ஆபீசருங்க வந்து அளந்து சில பல ஆயிரம் வழிச்செலவுக்கு கேக்கையில மொகங்கோணாம தந்து நோகணும்?

நொந்தது போதாதுன்னு எம்புள்ளைகளுக்கு நிலத்த தான செட்டில்மெண்டு பதியப்போனா அங்கன பெரிய அஞ்சு ரூபா தந்தாதான் பத்திரமே பதிவாகும்னு எழுத்தரு சொல்றாரு...

மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே ஆனது நமது ஆட்சி அதிகாரம்கிறாங்க, கெரகத்த நாங்களும் அதில இருக்குறமா இல்லையான்னு லஞ்சம் தராத கண்டுபிடிக்க எதுனாச்சும் வழி இருக்கான்னு சொல்ங்கண்ணா, சொல்ங்க்கா!"

என்கிறார் எண்பது வயதான செல்லப்ப விவசாயி.


என்ன விடை தரப்போகிறோம்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்