முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்க இருக்கீங்க குரு?!

 

நான் குரு இல்லை
J. Krishnamurthi dissolves Order of The Star

குரு பார்வை.


குரு பற்றிய ஒரு பார்வை.


எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது பழமொழி - இது சொல்லும் எழுத்து நம் தலையில் எழுதப்பட்டது; எழுதுகோலை நம் கரத்தோடு பற்றி ஆசிரியர் எழுதப்பழக்கிய எழுத்தல்ல அது.


மாதா பிதா குரு தெய்வம்.


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.


எனில் யார்தான் நிஜமான குரு?


நமக்கு தெரியாததை கற்றுத்தந்து / செய்து காட்டி / வாழ்ந்து காட்டி, செய்யக்கூடாதவற்றிற்கும் இலக்கணமாய் திகழ்ந்து வாழ்வுத்தடத்தின் அடுத்த புள்ளிக்கு நம்மை இட்டுச்செல்லும் எவரும்/எதுவும் நமக்கு குரு. 


அது பனையோலையில் காற்றாடி செய்ய கற்றுத்தந்த மனிதனாகவும் இருக்கலாம், தன் குஞ்சுகளுக்கு இரை எப்படி உண்பது என செய்து காட்டி கற்றுத்தரும் தாய்க்கோழியாகவும் இருக்கலாம், நம் வாகன சக்கரத்தில் முள் எடுத்து துளை அனைத்து நம் பயணத்தை தொடரச்செய்யும் நாம் அறிமுகம் செய்துகொள்ள விரும்பாத யாரோவாகவும் இருக்கலாம்.


வாழ்க்கை என்பது ஒற்றை நூல் சரடல்ல. ஒற்றை நூல் சரடும் ஆகாது.


வாழ்க்கை என்பது பலவிதமான நூல்களால் ஒவ்வொருவரின் ஆன்மாவின் தறியிலும் நாமே நெய்துகொள்ளும் ஆடை.


இதில் ஊடும் பாவுமாய் ஊடுறுவி நிறம் சேர்ப்பது, உறுதி தருவது, மிருதுவாக்குவது, அடர்த்தியாக்குவது எதுவென்று சிந்தித்தால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நாம் காண்பதெல்லாம் குருமார்களாகவே இருக்கும், கல்லாகவோ, புல்லாகவோ, பூண்டாகவோ, பறவையாகவோ, விலங்காகவோ, மனிதராகவோ!


குரு வேண்டும் என்ற உணர்தல் முளைத்து அது தேடலாகி, குரு யார் என்ற தவிப்பில் அலையும் மனிதரில் அநேகர் ஒற்றை குருவினுள் ஒடுங்கிப்போகின்றனர்.


ஒரு புள்ளியில் தேடலின் விடை கிடைத்தாலோ கிடைக்காமல் போனாலோ, அடுத்தடுத்த தேடல்கள் வரிசை கட்டி நிற்க, அதே குருவிடமே அவர்களுக்கு விடை கிடைக்க வாய்ப்போ அவசியமோ இல்லையென்றால் அதை குருவின் குற்றமாக்கி அடுத்த குருவை தேடி ஓடும் இவர்களது வாழ்வு.


நாம் குழந்தைகளாய் பிறக்கையில் அம்மாவின் மார்தேடும் ஞானத்தை நம்முள் புதைத்தே அனுப்பப்பட்டிருக்கிறோம்...


குழந்தைகளின் கற்றலை சற்றே கவனிப்பவர்க்கு ஒரு உண்மை புரிபடக்கூடும்; குழந்தைகள் தாம் காண்பவை அனைத்திடமிருந்தும் கற்கின்றன.


குழந்தைகள் எவரையும் / எந்த உயிரையும் எதிர்பார்ப்போடு அணுகுவதில்லை.


எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிய மரத்தடி இறை, நம் ஒவ்வொருவரின் உள்ளிலும் குருவாய் பொதிந்து காத்திருக்கிறது...



'சார்பு நிலை' இன்றி தேடுதல் செய்து தேடலின் தீர்வை சுயமாய் தன்னுள்ளே காணச்சொன்ன ஜிட்டு. கிருஷ்ணமூர்த்தி, தன் கருத்தை விட்டு தன்னைமட்டும் பற்றிக்கொள்வார்களே மனிதர்கள் என்கிற புரிதலால்தான் 22 வயதில் சிம்மாசனம் துறந்தார் (Order of the Star).

(to be told how spiritual you were; only you knew whether you were corrupt or not corrupt inside, nobody could tell you. His only object in life from then on would be to set men absolutely free to discover truth for themselves and not to be told what truth was, or be led in any way; they had to find it, if they wanted to find it, for themselves, and he was going to help them to be free.

- Mary Lutyens, Biographer of J. K)

நம்முள்ளே பொதிந்திருக்கும் இறையின் புறவெளிப்பாடுதான் சதா சர்வமும் நம்மை நீக்கமற சூழ்ந்திருக்கும் இயற்கை.


இயற்கை என்னும் பெரிய குரு, நம்மை "மூச்சு பிடித்து" அழைத்துச்செல்கிறது நமக்கு உள்ளேயும் வெளியேயும்; கண் திறந்தால் கனவு கலையலாம் :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...